Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
மீனம் செல்லும் ராகு: அக்டோபர் 30 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் பண கஷ்டம் அதிகரிக்கப் போகுது...
Rahu Transit In Pisces On October 2023: நவகிரகங்களின் ராகு நிழல் கிரகமாகும். மேலும் ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். அதோடு இவர் எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிப்பார். தற்போது ராகு செவ்வாய் ஆளும் மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் அக்டோபர் 30 ஆம் தேதி ராகு குரு பகவானின் ராசியான மீன ராசியில் நுழையவுள்ளார். குரு பகவானின் ராசிக்கு ராகு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனைப் பெற்றாலும், சில ராசிக்காரர்கள் இந்த ராகு பெயர்ச்சியால் தங்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்கவுள்ளார்கள்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் பண பிரச்சனைகளை நிறைய சந்திக்கப் போகிறார்கள். இப்போது மீனம் செல்லும் ராகுவால் எந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதைப் பாருங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். சிலரது மனம் தேவையில்லாமல் அலை பாயும். இதன் காரணமாக எந்த ஒரு விஷயத்தையும் செய்ய முடியாமல் அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கும்.
மேலும் தேவையில்லாத செலவுகளால் பண பிரச்சனையை சந்திக்க நேரிடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிலர் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு ரொம்பவும் டல்லாக இருக்கும். எனவே அக்டோபர் 30 முதல் கூடுதல் கவனமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். வணிகர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்படக்கூடும்.
முக்கியமாக அக்டோபர் 30-க்கு பிறகு எந்த ஒரு முதலீடு செய்வதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பண இழப்பை சந்திக்க நேரிடும். அதோடு இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப கைக்கு வராது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்களின் ஆசைகள் அக்டோபர் 30 முதல் நிறைவேற வாய்ப்பில்லை. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.
முதலீடு செய்வது அல்லது பண விஷயத்தில் எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், கவனமாக சிந்தித்து எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்பை சந்திக்க நேரிடும். அக்டோபர் 30 முதல் அதிக அலைச்சலை சந்திக்கக்கூடும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
