Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
குரு சண்டாள யோகம்: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Rahu Jupiter Made Guru Chandal Yoga 2023: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றும். அவ்வாறு மாற்றும் போது சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும் வாய்ப்புள்ளது. மேலும் இந்த யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் மேஷ ராசியில் குரு மற்றும் ராகுவின் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் அசுப யோகமான குரு சண்டாள யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது அக்டோபர் மாதம் வரை நீடித்திருக்கும்.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த யோகமானது பல கஷ்டங்களை சந்திக்க வைக்கும், பண இழப்புக்களை ஏற்படுத்தும். இப்போது குரு சண்டாள யோகத்தால் அக்டோபர் வரை எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
குரு சண்டாள யோகமானது மேஷ ராசிக்காரர்களுக்கு நற்பலனை அளிக்காது. இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி ஏதேனும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படக்கூடும் மற்றும் தலைவலியால் அவதிப்பட நேரிடும்.
திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கை துணையுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடும். இதனால் திருமண வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். இக்காலத்தில் எந்த ஒரு புதிய வேலையைத் தொடங்குவதையும் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு சண்டாள யோகமானது பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். குறிப்பாக வருமானத்தில் தடையை ஏற்படுத்தும். தேவையில்லாத செலவுகளை சந்திக்க வைக்கும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தொழிலில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இக்காலத்தில் எந்த ஒரு முதலீடு செய்வதையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் இழப்புக்களையே சந்திக்க நேரிடும். மேலும் ஆரோக்கியமும் மோசமடையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு சண்டாள யோகமானது தீங்கை விளைவிக்கும். இந்த யோகமானது 8 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். மிகவும் வயதானவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த யோகத்தால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக அடுத்த ஒரு மாத காலம் எந்த ஒரு புதிய வேலையைத் தொடங்குவதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
