Latest Updates
-
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்..
இந்த ராசிக்காரங்களோட தொலைநோக்கு பார்வை இவங்கள அதிபுத்திசாலியா மாத்துமாம் தெரியுமா?
நடக்கப்போவதை முன்கூட்டியே கணிப்பது என்பது, எதையும் சரியாக அனுமானிப்பது, சிந்தித்து செயல்படுவது போன்ற ஆளுமைகள் ஒருவரை அதிபுத்திசாலியாக மாற்றும்.
எல்லாவற்றையும் திட்டமிட்டு சரியாக செய்வது என்பது அனைவராலும் முடியாது. சிலர் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றவாறு திட்டமிடுவார்கள், சிலர் அப்போதைக்கு நடக்கும் சம்பவங்களுக்கு ஏற்ப தனது திட்டங்களை மாற்றியமைத்துக் கொண்டே இருப்பார்கள். இதற்கு அவர்களின் தொலைநோக்கு பார்வைதான் காரணம்.

தொலைநோக்கு பார்வை என்பது அனைவருக்கும் கிடைத்துவிடாது. நடக்கப்போவதை முன்கூட்டியே கணிப்பது என்பது, எதையும் சரியாக அனுமானிப்பது, சிந்தித்து செயல்படுவது போன்ற ஆளுமைகள் ஒருவரை அதிபுத்திசாலியாக மாற்றும். இந்த தொலைநோக்கு பார்வுடையுடன் கூடிய அதிபுத்திசாலித்தனத்திற்கு அவர்களின் பிறந்த ராசிகூட ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிகாரர்களுக்கு இயற்கையிலேயே தொலைநோக்கு பார்வை இருக்குமென்று பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் அசாதாரண சூழ்நிலைகளை கூட தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வார்கள். இதற்கு காரணம் இவர்கள் என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே அனுமானித்து வைத்துக் கொள்வதுதான். சிம்ம ராசிக்காரர்கள் கைத்தட்டலையும், கவனத்தையும் அதிகம் விரும்புவார்கள். எனவே அது கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் சூழ்நிலையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வார்கள். இதற்கு அவர்களின் தொலைநோக்கு பார்வை அவர்களுக்கு உதவியாக இருக்கும். எந்தவொரு செயலிலும் இறங்குவதற்கு முன் அதற்கான வியூகங்களை அமைத்த பிறகே இவர்கள் காரியத்தில் இறங்குவார்கள்.

மேஷம்
இவர்களுக்கு இயற்கையாகவே உள்ளுணர்வு அதிகமாகும், மற்ற ராசிக்காரர்களை விட மேஷ ராசிக்காரர்களுக்கு வருங்காலத்தை கணிக்கும் திறன் அதிகமாகும். இவர்களுக்கு தங்களின் குறைகள் என்னவென்று நன்றாகவேத் தெரியும் எனவே அதற்கேற்ப தனது வாய்ப்புகளையும், தேர்வுகளையும் திட்டமிடுவார்கள். இவர்களின் இயற்கையான உள்ளுணர்வு இவர்களின் திட்டமிடுதலை சிறப்பாக்குகிறது. எப்படி திட்டமிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களாக இருப்பார்கள். இந்த குணம் அவர்களின் தொலைநோக்கு பார்வையால் வருவதாகும். ஒரு இடத்திற்கு தான் சென்றால் அங்கு என்ன நடக்கும் என்பதை இவர்கள் முன்கூட்டியே அறிவார்கள், அதன் பலன்கள் தனக்கு சாதகமாக இல்லையென்றால் அங்கு செல்வதை இவர்கள் தவிர்த்து விடுவார்கள். இதனாலேயே இவர்கள் பல ஆபத்துகளில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள். இவர்களின் புத்திக்கூர்மைதான் இவர்களை பாதுகாக்கும் கவசமாகும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் அதிக கவலைப்படுபவர்களாக இருப்பார்கள், ஆனால் இவர்களின் தொலைநோக்கு பார்வை இவர்களுக்கு தக்க சமயத்தில் கைகொடுக்கும். மீன ராசிக்காரர்கள் வாய்வழி சொற்களை ஒருபோதும் நம்பமாட்டார்கள், அவர்கள் அனைத்தையும் எழுத்து வடிவில் ஆதாரப்பூர்வமாக எதிர்பார்ப்பார்கள். இவர்களின் பரந்து விரிந்த பார்வை இவர்களுக்கு தடையின்றி எதிர்காலத்தை கணிக்க எப்பொழுதும் உதவியாக இருக்கும். குறிப்பாக குடும்பம் தொடர்பான விஷயங்களில் இவர்களின் பார்வை எப்பொழுதும் சரியானதாக இருக்கும்.

கடகம்
மேஷ ராசியினரைப் போல கடக ராசிக்காரர்களும் அதீத உள்ளுணர்வுக்கு சொந்தக்காரர்கள் ஆவர். இவர்கள் ரிஸ்க் எடுப்பதை விரும்ப மாட்டார்கள், எனவே எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு கணக்குடன்தான் செயல்படுவார்கள். திட்டம் சரியாக செயல்படும் என்று தெரிந்தால் மட்டுமே இவர்கள் காரியத்தில் இறங்குவார்கள். ஏதேனும் சொதப்பல்கள் ஏற்பட்டால் முதலில் பின்வாங்குவது இவர்களாகத்தான் இருக்கும். எதற்காக போராட வேண்டும் என்று சிந்திக்கும்போது இவர்களின் தொலைநோக்கு பார்வை இவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் எப்பொழுதும் தனிமையை விரும்புபவர்களாக இருப்பார்கள், இவர்கள் தனிமையில் இருந்தாலும் இவர்கள் தங்கள் மனதுடன் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். இவர்கள் எவ்வளவு நேரம் தனிமையில் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு மனதளவில் இவர்கள் வலிமையாக இருப்பார்கள். இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு தொலைநோக்கு பார்வையும், பின்னோக்கி பார்க்கும் திறனும் இயற்கையாகவே இருக்கும். என்ன நடக்கப்போகிறது, நீங்கள் செய்யும் செயல்களின் பின்விளைவுகள் என்ன என்று இவர்கள் முன்கூட்டியே அறிவார்கள். இவர்கள் புத்திசாலிகளாகவும், தந்திரமானவர்களாகவும் இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications