Latest Updates
-
இந்த 4 எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம் - உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? -
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்! -
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
இந்த 5 ராசிக்காரங்க தேடிப்போய் சீக்கிரம் காதலில் விழுவாங்களாம்...இவங்கள கரெக்ட் பண்றது ரொம்ப ஈஸியாம்...!
காதல் என்பது அனைவருக்கும் அடிப்படையான மற்றும் அவசியமான உணர்வாகும். மக்கள் காதலில் விழத் தொடங்கும் போது, அவர்கள் காதலையும், ஈர்ப்பையும் தவறாகப் புரிந்துகொள்வதால், அது உறுதியாக இருக்க நேரம் ஒதுக்க விரும்புகிறார்கள்.
காதல் என்பது அனைவருக்கும் அடிப்படையான மற்றும் அவசியமான உணர்வாகும். மக்கள் காதலில் விழத் தொடங்கும் போது, அவர்கள் காதலையும், ஈர்ப்பையும் தவறாகப் புரிந்துகொள்வதால், அது உறுதியாக இருக்க நேரம் ஒதுக்க விரும்புகிறார்கள். உங்களுக்குள் இருக்கும் உணர்வுகளை சரியாகப் புரிந்துகொள்வதற்கு அதிக நேரம் ஒதுக்குவது எப்போதும் அவசியம்.

சிலர் அதீத உணர்ச்சிவசப்பட்டு விரைவில் காதலிக்கிறார்கள். அவர்களுக்கு நல்லதைச் செய்பவர்கள், நல்லவர் போல தெரிபவர்கள் போன்றவர்களுடன் விரைவாகப் பழகுவார்கள். எனவே அந்த நபர்களை எளிதில் காதலிப்பதைத் தடுப்பது மிகவும் கடினம். இந்த வகை காதல் அதிகம் பாதிக்கப்படுவதும் இவர்கள்தான். இந்த அவசரம் சில ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே இருக்கும். அது என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் அனைவரையும் விட உணர்ச்சிவசப்படுபவர்கள், ஒருவருடைய இனிமையான செயல்பாடுகளால் எளிதில் உருகுவார்கள். அவர்கள் காதலிக்க ஒரு வாரம் கூட ஆகாது. அதுமட்டுமல்லாமல், அவர்கள் அந்த நபருடன் மிகக் குறுகிய கால இடைவெளியில் அதிகம் இணைந்திருப்பார்கள், மேலும் அவர்கள் காயப்பட்டால் அதிலிருந்து வெளிவருவது இவர்களுக்கு மிகவும் கடினமாகிவிடும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் மிகவும் நேர்மறை, ஆற்றல் மிக்க மற்றும் மகிழ்ச்சியான ஆன்மாக்கள். மற்றவர்களின் நல்ல நடத்தையால் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். அதுபோலவே, அவர்களும் எளிதில் காதலிக்கலாம். ஆனால் அவர்கள் மிகவும் விசுவாசமானவர்கள், அவர்கள் எப்போதும் தங்கள் துணைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். ஆனால் தவறான ஒருவரை தேர்ந்தெடுப்பதால் அதிக பாதிப்பிற்கு ஆளாகுவதும் இவர்கள்தான்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படுவார்கள். தங்களுக்கு நல்லதைச் செய்யும் ஒருவரிடம் அவர்கள் எளிதில் மயங்கி விடுவார்கள். அவர்கள் ரிஸ்க் எடுப்பவர்கள் மற்றும் தைரியமானவர்கள், இவர்களுக்கு சமமாக சாகசத்தில் ஈடுபடும் ஒருவர் இவர்களை எளிதில் கவருவார்கள். இவர்களிடம் இருக்கும் நல்ல குணம் தவறான காதல் முறிந்து விட்டால் அதிலிருந்து விரைவில் வெளிவந்து விடுவார்கள். வாழக்கையை அதன் ஓட்டத்திலேயே வாழத் தெரிந்தவர்கள் இவர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் பகல் கனவு காண்பவர்கள், அவர்கள் தங்கள் கற்பனை உலகில் விரைவாக தொலைந்து போகிறார்கள். எனவே, ஒருவரின் நல்ல நடத்தையை அவர்கள் காதலாக எளிதில் மாற்றிக்கொள்வார்கள். எனவே இவர்கள் எளிதில் ஈர்ப்பை காதலென குழப்பிக்கொண்டு காதலில் சிக்கிக் கொள்கிறார்கள். இந்த கற்பனை உலகை விட்டு வெளியே வருவதற்குள் அவர்கள் பல மோசமான பாடங்களை கற்றுக்கொள்வார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கவனத்தைத் தேடுபவர்கள். எனவே அவர்கள் விரைவில் தங்கள் கவனத்தை செலுத்தும் யாரோ ஒருவரால் ஈர்க்கப்படுவார்கள், ஏனெனில் அது அவர்களை அதிகம் கவர்கிறது. வெறும் கவனம் மட்டுமே உண்மையான காதலாக மாறிவிடாது என்பதை இவர்கள் புரிந்து கொள்வார்கள். அதனால் அந்த உறவில் இருந்து வெளியேறிவிடுவார்கள். ஆனால் இது மீண்டும் தொடரும். இதனால் இவர்கள் வாழ்க்கையில் பல காதல் கதைகள் இருக்கும்.



Click it and Unblock the Notifications