இந்த 6 ராசிகாரங்க எப்பவும் மத்தவங்க உதவிய எதிர்பார்த்தே வாழ்வாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

சிலர் தங்கள் வாழ்க்கை முழுவதையும் மற்றவர்களை சார்ந்தே வாழ்ந்து விடுவார்கள். இதற்கு காரணம் அவர்கள் பிறந்த ராசியாக கூட இருக்கலாம்.

இந்த உலகத்தில் அனைவருமே, அனைத்து நிகழ்வுகளுமே ஒன்றை ஒன்று சார்ந்துதான் இருக்கிறது. நமது வாழ்க்கை பெரும்பாலும் மற்றவர்களை சார்ந்ததாகவே இருக்கிறது. அனைவருக்குள்ளும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலும், திறமையும் இருக்கிறது. ஆனால் அதனை உபயோகப்படுத்துபவர்கள் மிகவும் குறைவு என்பதே கசப்பான உண்மை ஆகும்.

Zodiac Signs Who Rely Heavily On Others

சிலர் தங்களின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் முதல் அனைத்து விதமான முடிவுகளையும் தங்களின் சுயஉணர்வுடன் தனது விருப்பத்திற்கு ஏற்ப எடுப்பார்கள். வேறு சிலரோ தங்கள் வாழ்க்கை முழுவதையும் மற்றவர்களை சார்ந்தே வாழ்ந்து விடுவார்கள். இதற்கு காரணம் அவர்கள் பிறந்த ராசியாக கூட இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் மற்றவர்களை சார்ந்தே வாழ்வார்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களைப் போல மற்றவர்களை நம்புபவர்கள் யாரும் இருக்க முடியாது, இதனாலேயே இவர்கள் எந்த உதவியைக் கேட்டாலும் மற்றவர்களால் அதனை மறுக்க முடியாது. இதற்கு காரணம் இவர்களின் அன்பான அணுகுமுறையும், தங்களுக்கு உதவுபவர்களிடம் இவர்கள் நடந்து கொள்ளும் முறையும்தான். இவர்கள் தங்களுக்கு உதவி செய்பவர்கள் மீது அன்பை பொழிவதுடன் அவர்களுக்கு விசுவாசமாகவும் இருப்பார்கள். அதனாலேயே இவர்களுக்கு வேண்டியது அனைத்தும் மற்றவர்களின் உதவியுடன் எளிதில் கிடைத்துவிடும்.

 சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் எப்பொழுதும் மற்றவர்களின் கவனம் தேவைப்படுபவர்களாக இருப்பார்கள், எனவே அவர்கள் எப்பொழுதும் மற்றவர்களை நம்பியும் அவர்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் பணம் எதிர்பார்க்க மாட்டார்கள் அல்லது வேறு உதவி எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் அக்கறையையும், கவனத்தையும்தான். தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களின் உதவியை நாடுவார்கள்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களின் பெரிய ஆசையே எப்பொழுதும் தங்களிடம் ஒப்படைக்கப்படும் வேலையை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்பதுதான். எனவே இவர்கள் எப்பொழுதும் தங்கள் குழுவை நம்பி இருப்பார்கள். இவர்கள் ஒப்படைக்கப்பட்ட வேலையை முடிக்க குழுவின் ஆதரவையும், அர்ப்பணிப்பையும் எதிர்பார்ப்பார்கள், அதனால் எப்பொழுதும் கட்டளையிடும் இடத்தில் இருக்க விரும்புவார்கள். ஒரு முதலாளியாக உங்களின் நிலையை உயர்த்திக்கொள்ள உங்களுக்கு எப்பொழுதும் மற்றவர்களின் உதவி தேவைப்படும். எனவே தன்னிடம் இருக்கும் ஒவ்வொருவரையும் இவர்கள் பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள்.

 கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் மற்றவர்களை மட்டும் நம்பவில்லை மாறாக மற்றவர்களை தங்களுடன் இணைத்துக் கொள்கிறார்கள். தனக்கு உதவி செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு தனக்கு சேவை செய்யும் வாய்ப்பை வழங்குவதாக இவர்கள் நினைக்கிறார்கள். இவர்கள் அனைவரிடமும் நன்கு பழகக் கூடியவர்கள், எனவே மற்றவர்களிடம் உதவி கேட்க இவர்களுக்கு எந்தவித தயக்கமும் இருக்காது. இவர்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்வதாகநினைப்பதில்லை, அவர்கள் உங்களை ஒரு புதிய மற்றும் அற்புதமான அனுபவத்தில் ஈடுபடுத்துகிறார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் சுயாதீனமான சிந்தனைகளையும், சிறந்த கற்பனைகளையும் வளர்க்கும் ஒரு வலுவான எண்ணம் கொண்ட ராசிக்காரராக இருந்தாலும் உணர்ச்சிரீதியாக இவர்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய ராசிக்காரராக இருக்கிறார்கள். தாங்கள் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் மற்றவர்களின் ஒப்புதலும், உதவியும் அவசியம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். உதவி கேட்க இவர்களுக்கு எந்த சங்கடமும் இல்லை மேலும் அதனை தானாகவே கெட இவர்கள் முன்வருவார்கள். மற்றவர்களின் அறிவுரையும், வழிகாட்டுதலையும் எப்போதும் எதிர்நோக்கி காத்திருப்பார்கள். தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அறிவுரையை இவர்கள் எப்பொழுதும் கேப்பார்கள்.

கும்பம்

கும்பம்

எந்தவொரு செயலையும் தனியாக செய்வதென்றால் இவர்களுக்கு பயம்தான் ஏனெனில் இவர்களால் எதையும் தனியாக செய்ய முடியாது அதேசமயம் துணைக்கு ஆள் இருந்தால் இவர்கள எதனையும் சாதிப்பார்கள். தங்களுக்கு உதவி செய்பவர்கள் மற்றும் அறிவுரை கூறுபவர்களை இவர்கள் பெரிதும் நம்பியிருக்கிருக்கிறார்கள். கும்ப ராசிக்காரர்களிடம் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் இவர்களிடம் நன்றியுணர்வு இருக்காது, தங்கள் நண்பர்களை இவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இவர்கள் மற்றவர்களை நம்பியிருக்கிறார்கள் அதேசமயம் அவர்களிடம் அதிருப்தியும் கொள்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion