Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
2023இல் இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆடம்பரமா கல்யாணம் நடக்க வாய்ப்பிருக்காம்... உங்க ராசி என்ன?
வரும் புத்தாண்டில் தனுசு ராசிக்காரர்களுக்கு திருமண மணி அல்லது யோகம் அடிக்கும். அவர்கள் சிறந்த முடிவை எடுப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் வாய்ப்புகளுக்காக எப்போதும் காத்திருப்பார்கள்.
புத்தாண்டு தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ளன. புதிய ஆண்டு நமக்கு எவ்வாறு இருக்கும்? என்னென்ன நல்ல நிகழ்வுகள் நடக்கும்? என்று ஆவலோடு அனைவரும் எதிர்பார்க்கிறோம். திருமணமாகமால் இன்னும் இருக்கும் பல 90கிட்ஸ்கள் இந்த வருடமாவது திருமண ஆகுமா? என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், 2023 ஆண்டில் சில ராசிக்காரர்களை திருமணம் ஆகும் யோகம் உள்ளது. ஆம், இந்த ஆண்டு உறவுகளில் நம்பிக்கையின் பாய்ச்சலைத் தொடங்கும் ஆண்டாக இருக்கும் மற்றும் தங்கள் கூட்டாளர்களுக்கு உறுதியளிப்பார்கள். திருமணம் என்பது பலரது வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்பதால், அவர்கள் மனதில் பதியும் ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கும்.

ஒரு புதிய ஆண்டு என்பது புதிய தொடக்கங்களைக் குறிக்கிறது மற்றும் மக்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, திருமணத்தின் வலுவான பிணைப்பை நோக்கி உற்சாகமாக இருப்பார்கள். எனவே, 2023 இல் பிரமாண்டமாக திருமணம் செய்யக்கூடிய ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

ரிஷபம்
காதலில் நம்பிக்கை வைக்கும் ஒருவரை சந்திப்பதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் யாரை திருமணம் செய்து கொள்வார்கள் என்பதில் உறுதியாக இருப்பதால், அவர்கள் இருமுறை யோசிக்க மாட்டார்கள். திருமணத்தை வெகுவிமர்சையாக நடத்த வேண்டும் என இந்த ராசிக்காரர்கள் விரும்புவார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் அர்ப்பணிப்புள்ள காதலர்கள், அவர்கள் தங்கள் துணைக்கு தங்கள் அனைத்தையும் கொடுப்பார்கள். தங்கள் துணையை மகிழ்விக்கும் விஷயத்தில் இந்த ராசிக்காரர்கள் எந்த சிறு புள்ளியையும் விட்டுவிட மாட்டார்கள். சிம்ம ராசிக்காரர்கள் 2023 இல் திருமணம் செய்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. அதிக செலவு செய்து மிகவும் ஆடம்பரமாக திருமணத்தை செய்வார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு தங்கள் துணையின் சந்தோஷமே மிக முக்கியம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் 2023 இல் தங்கள் ஆத்ம துணையுடன் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது. ஒருவருடன் தாங்கள் சேர்ந்து வாழும் முக்கியத்துவத்தை இந்த ராசிக்காரர்கள் இறுதியாக உணர்ந்ததால், அவர்களால் பிரமாண்டமான திருமணத்தை அமைக்க முடியும். 2023 அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். அனைவரும் கண் கொண்டு வியக்கும் வகையில் இவர்கள் திருமணம் செய்வார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இது மிகவும் உற்சாகமான நேரமாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் 2023 இல் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு கூட்டாளரைக் கண்டுபிடிக்க முடியும். மேலும் அவர்களை மிகவும் சிறப்பாக உணர வைக்கவும் முடியும். பிரபஞ்சம் அவர்களை நிலையான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்தும். இதனால், இந்த ராசிக்காரர்கள் ஆடம்பரமான முறையில் தங்கள் திருமணத்தை அடுத்த வருடம் செய்வார்கள்.

தனுசு
வரும் புத்தாண்டில் தனுசு ராசிக்காரர்களுக்கு திருமண மணி அல்லது யோகம் அடிக்கும். அவர்கள் சிறந்த முடிவை எடுப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் வாய்ப்புகளுக்காக எப்போதும் காத்திருப்பார்கள். இவர்களின் தாம்பத்ய வாழ்க்கையில் பல ஆச்சரியங்கள் காத்திருக்கும். இவர்கள் திருமண உறவில் மகிழ்ச்சியாக இருக்க எல்லாவற்றையும் செய்வார்கள்.

இதர ராசிக்காரர்கள்
மேஷம், மிதுனம், கடகம், விருச்சிகம், மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் 2023 இல் திருமணத்தைத் தவிர்ப்பார்கள். அவர்கள் இன்னும் ஒரு உறவில் தீவிரமாக ஈடுபட விரும்பாததால் தனிமையில் இருப்பதை விரும்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications
