Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன?
இந்த 5 ராசிக்காரங்க சிவபெருமானின் செல்லப்பிள்ளைகளாம்... இவர்களுக்கு எப்போதும் ஸ்பெஷல் ஆசீர்வாதம் உண்டு!
சிவபெருமானின் ஆசீர்வாதம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அழித்தலின் கடவுளான சிவபெருமான் ஒருவரின் வாழ்க்கையை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றமுடியும்.
சிவபெருமானின் ஆசீர்வாதம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அழித்தலின் கடவுளான சிவபெருமான் ஒருவரின் வாழ்க்கையை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றமுடியும். சரியான வழிபாடு முறைகள் மூலம் சிவபெருமானின் அன்பை எளிதில் பெறலாம். ஈசனுக்கு அனைவரும் சமம் என்றாலும் சிலர் செல்லப்பிள்ளைகளாக இருப்பார்கள்.

ஜோதிட சாஸ்திரதத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் சிவபெருமானின் அன்பை எளிதில் பெறக்கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் ஈசனின் அருளைப் பெற கடுமையான விரதம், வழிபாடுகள் என்று செய்யும்போது இந்த ராசிக்காரர்கள் எளிதான வேண்டுதல்கள் மூலம் சிவபெருமானின் ஆசீர்வாதத்தை பெற்றுவிடுகிறார்கள். இதன்மூலம் வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்கிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சிவபெருமானின் செல்லப்பிள்ளைகளாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்
செவ்வாய் கிரகம் இந்த ராசிக்கு அதிபதியாக இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு சிவபெருமான் சிறப்பு ஆசிகளை வழங்குகிறார். செவ்வாய் கிரகம் சிவபெருமானின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இந்து புராணங்களின்படி, அந்தகாசுரன் என்ற அரக்கனுடன் போரிடும் போது, சிவபெருமானின் வியர்வைத் துளி நிலத்தைத் தொட்டது. அப்போதுதான் செவ்வாய் கிரகம் உருவானது. அப்போது சிவபெருமான் கோபமாக இருந்ததால், செவ்வாய் எளிதில் கோபப்படுகிறார். மேஷ ராசிக்காரர்கள் மஹாசிவராத்திரி அன்று அனைத்து முறைப்படியும் சிவபெருமானை வழிபட வேண்டும். சிவபெருமானின் ஆசி இவர்களுக்கு தொழிலில் எப்போதும் வெற்றியை வழங்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் சிவபெருமானுக்கு விருப்பமானவர்களாக இருப்பார்கள். சிவபெருமான் எப்போதும் இவர்களுக்கு ஆசீர்வாதங்களை தாராளமாக வழங்குவார். இதனால் இவர்களின் தொழில், திருமண வாழ்க்கை, சமூக வாழ்க்கை என அனைத்திலும் தன்னிறைவு ஏற்படும். திருப்தியான வாழ்க்கைதான் ஒருவரின் சிறந்த கனவாக இருக்கும், அதனை சிவபெருமான் இந்த ராசிக்காரர்களுக்கு வழங்குவார்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகமும் அதிபதி. இவர்களுக்கு இந்த சிவராத்திரியில் சிவபெருமான் சிறப்பு அருளுவார். மகாசிவராத்திரியின் போது இவர்கள் சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்தால் வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். இவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஈசன் எப்போதும் துணையாக இருப்பார்.

மகரம்
மகர ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவான் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த பக்தர்களில் ஒருவர். எனவே மகர ராசிக்காரர்கள் சனி பகவான் மற்றும் சிவபெருமான் இருவரிடமும் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். இவர்கள் சிவனை வழிபட வில்வ இலை, பசும்பால் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

கும்பம்
இந்த ராசிக்கும் சனிபகவன்தான் அதிபதி. இந்த ராசிக்காரர்களும் சிவபெருமான் மற்றும் சனிபகவானின் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். இவர்கள் மகாசிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபடுவதுடன் விரதம் இருக்க வேண்டும். நீங்கள் தொழிலில் வெற்றி பெறுவீர்கள், மேலும் செல்வம் மற்றும் வருமானம் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
