Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியை மறக்காம எப்பவும் கஷ்டப்படுவாங்களாம்!
ரிஷப ராசி நேயர்கள் இந்த அம்சத்திற்கு வரும்போது அவர்கள் மிகவும் பிடிவாதமாக இருக்கலாம். ஒருமுறை அவர்கள் தங்கள் மனதில் யாரோ ஒருவர் மீது காதல் வைத்தால், அவர்கள் அவர்களைவிட்டு விலகுவது அல்லது பிரிவது மிகவும் கடினம்.
காதல் என்பது மிகவும் அழகானது மற்றும் ஆழமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். காதலிப்பவர்கள் அனைவரும் கல்யாணம் செய்து கொள்வதில்லை. பலருக்கு காதல் கல்யாணத்தில் கைகூடுகிறது. பலருக்கு அது தோல்வியை கொடுக்கிறது. காதலில் தோல்வியுற்றவர்கள், அதிலிருந்து வெளியேறி வேறொரு வாழ்க்கையை மற்றும் பாதையை தீர்மானித்து செல்கிறார்கள். ஆனால், சிலரால் தங்கள் முன்னாள் காதலனை அல்லது காதலியை மறக்கவே முடியாமல் தவிர்க்கிறார்கள். அவர்களின் கடந்தகால உறவின் நினைவுகள் அவர்களை எப்போதும் வேட்டையாடும் போது மற்றவர்களைப் பற்றியும் வேறு விஷயங்களைப் பற்றியும் அவர்களால் சிந்திக்க கடினமாக இருக்கும்.

காதலில் விழுவதும், மோசமான பிரிவுக்குப் பிறகு அந்த நபரிடமிருந்து விலகிச் செல்வதற்கும் காலநேரம் எடுக்கும். அந்த அதிர்ச்சி மற்றும் துக்கத்திலிருந்து அவர்கள் வெளியேற வேண்டும். குறிப்பாக அந்த நபர் உறவில் நிறைய முதலீடு செய்யும் போது, பிரிவை நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். நீங்கள் இந்த நபர்களில் ஒருவராக இருந்தால், பிரிந்த பிறகு முன்னேற கடினமாக இருக்கும் ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் உறவுகளில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். எனவே, அவர்கள் ஒருவரிடம் உறுதியளிக்கும்போது, அவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் துணையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது சரியாக நடக்காதபோது, அவர்கள் துக்கமடைந்து சோகம் மற்றும் ஏமாற்றத்தின் ஆழமான கடலில் விழுகின்றனர். இந்த ராசிக்காரர்களுக்கு அந்த கடலில் இருந்து வெளியேறுவது மிகவும் கடினமானது. பெரும்பாலும் அவர்கள் அறையில் தனியாக அழுவதை நீங்கள் காணலாம்.

சிம்மம்
சிம்ம ராசி நேயர்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் தோற்றமளித்தாலும், பிரிந்து செல்லும் போது, இந்த ராசிக்காரர்கள் அனைவரும் சோகமாகவும், சோம்பலாகவும் இருப்பார்கள். தங்கள் உறவில் இருந்த நபரை மறப்பது அவர்களுக்கு மிகவும் கடினம். அவர்கள் தங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியின் பிரிவைத் தடுக்க என்ன செய்யலாம் அல்லது செய்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி அழுது புலம்புகிறார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்கள் இந்த அம்சத்திற்கு வரும்போது அவர்கள் மிகவும் பிடிவாதமாக இருக்கலாம். ஒருமுறை அவர்கள் தங்கள் மனதில் யாரோ ஒருவர் மீது காதல் வைத்தால், அவர்கள் அவர்களைவிட்டு விலகுவது அல்லது பிரிவது மிகவும் கடினம். பிரிந்த பிறகும் அவர்கள் தங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியை பற்றி நினைப்பதை நிறுத்த முடியாது. அதற்குத் தங்களை தாங்களே குறை மற்றும் குற்றம் சுமத்திக்கொண்டே இருப்பார்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் செய்ய விரும்புவது நல்ல நினைவுகளை தங்கள் இதயங்களில் வைத்திருப்பதுதான். அவர்கள் தங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியை விட்டுவிட முடியாததற்கு இதுவே ஒரே காரணம். கடந்த காலத்தைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவர்களின் விருப்பம், அவர்கள் தங்கள் முன்னாள் உடன் கழித்த அனைத்து நல்ல நேரங்களையும் அவர்களுக்கு நினைவூட்டுகிறது. இப்படிப்பட்ட விஷயங்களை நினைக்கும் போது அவர்கள் எதை இழக்கிறார்கள் என்பதை நினைவுபடுத்துகிறது.

மிதுனம்
மிதுன ராசி நேயர்கள் ஊர் சுற்றுவதன் மூலமும் மற்றவர்களுடன் பழகுவதன் மூலமும் அவர்கள் தங்கள் முன்னாள் நபரை மறக்க முயற்சித்தாலும், அவர்களால் அதை செய்ய முடியாது. மிதுன ராசிக்காரர்களுக்கு தங்கள் முன்னாள் வாழ்க்கையை மறந்துவிட்டு முன்னேறுவது என்பது கடினமான செயல். அவர்கள் நிறையச் சுற்றித் திரிகிறார்கள் மற்றும் தங்கள் துக்கங்களை மறப்பதற்காக குடிப்பழக்கத்தை நோக்கித் திரும்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications