Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
இந்த ராசிக்காரங்க தோல்வியில் இருந்து பீனிக்ஸ் மாதிரி மீண்டு வருவாங்களாம் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு தோல்வியும் உங்களை மனதளவில் வலிமையாக்கும். காதல் தோல்வியில் இருந்து மீண்டு வருபவர்கள் எப்படிப்பட்ட தோல்வியையும் சமாளிக்க பழகிக்கொள்வார்கள்.
காதல் தோல்வியில் இருந்து மீண்டு வரவும் அதனை சமாளிக்கவும் பல வழிகள் உள்ளது. காதலில் தோல்வி ஏற்பட்டு மீண்டு தனக்கான எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்பவர்கள் வாழ்க்கைத் துணையாக கிடைப்பவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள். காதல் தோல்வியில் இருந்து மீண்டு வருவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு தோல்வியும் உங்களை மனதளவில் வலிமையாக்கும். காதல் தோல்வியில் இருந்து மீண்டு வருபவர்கள் எப்படிப்பட்ட தோல்வியையும் சமாளிக்க பழகிக்கொள்வார்கள். தோல்வியை சமாளிக்கவும் அதிலிருந்து மீண்டுவரவும் ஒரு தனி ஆளுமை வேண்டும். இந்த ஆளுமை சிலருக்கு இயற்கையாகவே இருக்கும், இதற்கு காரணம் அவர்கள் பிறந்த ராசியாகவும் இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிகள் தோல்வியில் இருந்து எளிதில் மீண்டுவருவார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அனைத்தையும் சரிசெய்யக் கூடியவர்கள். அவர்களுக்கு எந்தவிதமான பிரச்சினைகளை கொடுத்தாலும் அதனை எப்படியாவது சமாளித்து மேலே வந்துவிடுவார்கள். இதற்கு காதல் தோல்வி ஒன்றும் விதிவிலக்கல்ல. தோல்விக்கு பிறகு வரும் எதிர்மறை ஆற்றலை எப்போதும் நேர்மறையான செயல்களை நோக்கி நகர்த்துவார்கள். தங்களின் வலியை மறக்கச் செய்யும் ஒன்றின் மீது தனது பார்வையை திருப்புவார்கள். தோல்விகள் ஒருபோதும் தங்களின் முன்னேற்றத்தை தடுப்பதை இவர்கள் அனுமதிக்கவோ, விரும்பவோ மாட்டார்கள்.

சிம்மம்
காதல் தோல்வி மட்டும்தான் இதயத்தில் வலியை ஏற்படுத்துமா ? கண்டிப்பாக இல்லை. நஷ்டம் ஏற்படும்போது, ஆசைப்பட்டது கிடைக்காத போது, துரோகத்தில் சிக்கிக் கொள்வது என அனைத்தும் நமது இதயத்தில் வலியை ஏற்படுத்தும். தங்களின் தோல்வியில் இருந்து பாடத்தை கற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவர்கள் இவர்கள். பழிவாங்கும் விளையாட்டை விளையாடுவதற்குப் பதிலாக சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் சுயமரியாதை, தன்னம்பிக்கை, இழந்த ஆற்றல் போன்றவற்றை மீண்டும் பெற முயலுவார்கள். தோல்வி இவர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஒருபோதும் ஏற்படுத்தாது.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க நினைப்பார்கள், எனவே இவர்கள் எதற்காகவும் தங்கள் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். எனவே காதல் தோல்வியோ அல்லது எந்த தோல்வியோ ஏற்பட்ட பிறகு அதனை நினைத்து மறுபரிசீலனை செய்வது அல்லது அதனை நினைத்து வருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அதற்கு பதிலாக அடுத்த சாகசத்தை நோக்கி இவர்கள் நகர்வார்கள், தங்களின் மனதை நேர்மறையான விஷயங்களில் செலுத்த தொடங்குவார்கள். பயணத்தைத் திட்டமிடுவது, நண்பர்களைப் பார்ப்பது அல்லது புதிதாக ஏதாவது செய்வது போன்ற மகிழ்ச்சியான மற்றும் உற்சாகத்துடன் இருக்க அவர்களுக்குத் தெரிந்த விஷயங்களை இவர்கள் செய்யத் தொடங்குவார்கள்.

கும்பம்
சிலருக்கு கும்ப ராசிக்காரர்கள் தோல்வியில் இருந்து மிக விரைவாக வெளிவந்து விடுவது போலத் தோன்றலாம். ஆனால் உண்மை என்னவென்றால் இவர்கள் உணர்ச்சிகளை மிக விரைவாக செயலாக்குகிறார்கள், மேலும் கடந்த காலங்களில் வசிப்பதை விட நிகழ்காலத்தில் அல்லது எதிர்காலத்தை திட்டமிடுவதில் இவர்கள் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் தர்க்கரீதியானவர்கள், அவர்கள் எப்படி உணர்ந்தாலும் இழந்ததை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்பதை அறிவார்கள். எதுவும் இவர்களை திசைதிருப்ப வேண்டுமென்று அவசியமில்லை ஏனெனில் எது தங்களை திசைதிருப்பும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எளிதில் காதல் தோல்வியில் இருந்து வெளியே வந்துவிடுவார்கள், ஏனெனில் இவர்கள் நடந்து விட்டதை ஒப்புக்கொள்வார்கள் மேலும் உணச்சியை மறைத்து வைப்பதில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. தங்களின் தோல்வியை முன்னேற்றத்திற்கான எரிபொருளாக இவர்கள் பயன்படுத்துவார்கள். ஒருவேளை இவர்கள் மோசமான தோல்விக்கு ஆளாகி இருந்தால் தங்களின் முன்னாள் காதலன்/காதலி தொடர்பான அனைத்து பொருட்களையும் தூக்கி எறிந்துவிடுவார்கள். இவர்கள் தனிமையில் இருப்பதை விரும்பமாட்டார்கள், எனவே தங்கள் முன்னாள் காதலருக்கான மாற்றை இவர்கள் விரைவில் தேடுவார்கள். இது அவர்களின் கவனச்சிதறலுக்காக மட்டும்தான். ஒவ்வொரு மாற்றத்தையும் இவர்கள் மனமாற ஏற்றுக்கொள்வார்கள்.



Click it and Unblock the Notifications
