Latest Updates
-
தீபாவளிக்கு பின் உதயமாகும் புதன்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது! -
சனிபகவானின் வக்ர இயக்கம் முடிவுக்கு வருவதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/2 கப் ரவை இருந்தா போதும்.. தீபாவளிக்கு சூப்பரான ஸ்வீட் செய்யலாம்.. என்னன்னு பாருங்க.. -
Skin Care: முகப்பரு இல்லாத கண்ணாடி மாதிரி சருமம் வேண்டுமா? அப்ப இந்த தானியங்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க -
தீபாவளி அன்று பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப தக்காளி வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
எந்த காய்கறியும் தேவைப்படாத இந்த பாயாவை ஒருதடவை செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்ட்டகாசமா இருக்கும் -
Diwali 2026: தீபாவளி அன்று ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்? அவற்றை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும்? -
உலகம் முழுக்க 108 ஏன் மிகவும் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
வாஸ்து படி வீட்டை பெருக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செய்யாதீங்க - இல்லனா வீட்டு அதிர்ஷ்டமே போயிரும் -
தீபாவளியில் உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
இந்த 5 ராசிக்காரங்க எந்த உறவிலும் கடைசி வர உறுதியா இருக்க மாட்டாங்களாம்... ஏன் தெரியுமா?
கும்ப ராசிக்காரர்கள் உணர்ச்சி மற்றும் வெளிப்படையான பகுதியை மறைத்து வைக்கிறார்கள். அவர்கள் தங்கள் உண்மையான சுயரூபத்தை யாரையும் தெரிந்து கொள்ள விடாமல் மிகவும் சந்தேகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ஆண், பெண் உறவு என்றாலே பல கடமைகள், பொறுப்புகள் மற்றும் அர்ப்பணிப்புகள் இருக்கும். இவைகளை நாம் சரியாக கையாளும்போது, நம்பிக்கை பெற்று, உறவு வலிமையாக மாறும். நீண்ட கால உறவுக்கு பல அர்ப்பணிப்புகள் மற்றும் விட்டுக்கொடுக்கும் அல்லது புரிந்துகொள்ளும் பண்பு வேண்டும். சிலர் அர்ப்பணிப்பு மற்றும் நீண்ட கால உறவுகளுக்கு வெறுமனே பயப்படுகிறார்கள். எவ்வளவோ முயற்சி செய்தாலும், வாழ்நாள் முழுவதும் ஒருவரிடம் உறுதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் ஓடுகிறார்கள்.

ஜோதிடம் பன்னிரண்டு ஜோதிட அறிகுறிகளைக் கொண்டு அவர்களின் ஆளுமையின் சிக்கலான விவரங்களைப் பகுப்பாய்வு செய்கிறது. இதன் மூலம் அவற்றைப் புரிந்துகொள்வதை சாத்தியமாக்கியுள்ளது. எனவே, அர்த்தமுள்ள உறவுகளைப் பேண முடியாத சிறந்த ராசிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்கள் மிகவும் பிடிவாதமானவர்கள். அவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி முடிவு செய்தவுடன் அதிலிருந்து மாற மாட்டார்கள். முக்கியமான முடிவுகள் மற்றும் தொழில் வாழ்க்கையின் அடிப்படையில் இது மிகவும் நேர்மறையான பண்பாக இருந்தாலும், இது உறவுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இதன் பொருள் ரிஷபம் தங்கள் கூட்டாளியின் பேச்சைக் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் உண்மையிலேயே பிடிவாதமாக இருப்பார்கள்.

மிதுனம்
மிதுன ராசி நேயர்களால் நீண்ட காலம் உறுதியான உறவில் இருக்க முடியாது. அவர்கள் கவலைப்படுவது தங்களை பற்றி மட்டுமே. இந்த ராசிக்காரர்கள் தங்கள் கூட்டாளியின் பேச்சை கேட்கவோ மற்றும் உணர்வுகளை புரிந்து கொள்ளவோ மறந்து விடுகிறார்கள். தங்கள் துணையை தங்களுக்கு மேலாகக் கருத வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணரவில்லை. இது பெரும்பாலும் பயங்கரமான உறவு முறிவுகளுக்கு வழிவகுக்கிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஒருவரை நம்புவது மிகவும் கடினம். ஒரு நபர் இந்த ராசிக்காரர்களிடம் விசுவாசமாக இருப்பதாக நிரூபித்தாலும், அவர்கள் மனதின் ஒரு ஓரத்தில் சந்தேகம் எப்போதும் இருக்கும். இவர்கள் தங்களுக்கு துரோகம் செய்வார்களா? இல்லையா? என்று இந்த ராசிக்காரர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த சிறிய பாதுகாப்பின்மை அவர்களின் மனதில் மிகவும் ஊடுருவி, அவர்கள் ஏற்கனவே வைத்திருக்கும் நல்ல உறவை அழித்து விடுகிறது.

தனுசு
ஒரே இடத்தில் சிக்கிக் கொள்ளாத சுதந்திரமான ஆன்மா தனுசு ராசிக்காரர்களிடம் உள்ளது. அவர்கள் பயணம் செய்ய விரும்புகிறார்கள் மற்றும் புதிய வாய்ப்புகளுக்குள் நுழைகிறார்கள். எனவே, தங்களை ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, ஒரு இடத்தில் சிக்கிக்கொள்ளும் எண்ணம் அவர்களை முடிவில்லாமல் பயமுறுத்துகிறது. தனுசு ராசிக்காரர்களால் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்க முடியாது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உணர்ச்சி மற்றும் வெளிப்படையான பகுதியை மறைத்து வைக்கிறார்கள். அவர்கள் தங்கள் உண்மையான சுயரூபத்தை யாரையும் தெரிந்து கொள்ள விடாமல் மிகவும் சந்தேகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மக்கள் அவர்களை ஒரு சிறப்பு வழியில் நடத்தத் தொடங்கும் போது கும்ப ராசிக்காரர்கள் சித்தப்பிரமை அடைகிறார்கள். இது அவர்களை உறவிலிருந்து முற்றிலும் தள்ளி வைக்கிறது. அவர்கள் உறவில் பிணைக்கப்பட்டதாக உணரும் நிமிடத்தில் உறவிலிருந்து பின்வாங்குகிறார்கள்.

இதர ராசிக்காரர்கள்
மேஷம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், மகரம், மீனம் ராசிக்காரர்கள் உறவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். நீண்ட காலத்திற்கு வலுவான உறவுகளை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். உறவுகளைத் தக்கவைத்துக் கொள்ள தங்களால் இயன்றவரை முயற்சி செய்வார்கள். ஏனெனில், இந்த ராசிக்காரர்கள் உறவுகளை மிகவும் உயர்வாகக் கருதுகின்றனர்.



Click it and Unblock the Notifications
