For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 5 ராசிக்காரங்களுக்கு குளிர்காலத்துல காதல் கைகூட வாய்ப்பிருக்காம்... அது ஏன் தெரியுமா?

குளிர்காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒரு நல்ல நேரமாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் அன்பைக் கண்டுபிடிப்பதில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் குளிர்காலத்தை மிகவும் விரும்புகிறார்கள்.

|

காதல் என்பது மிகவும் அற்புதமானது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மாதிரியான விருப்பங்கள் மற்றும் ஆசைகள் இருக்கும். காதல் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. சிலர் மிகவும் விரைவாக காதல் வாழ்க்கைக்குள் சென்றுவிடுவார்கள். சிலர் நீண்ட காலம் காத்திருப்பார்கள். சிலர் எப்போது நமக்கு ஒரு துணை கிடைக்கும் என ஏங்கி கொண்டிருப்பார்கள். அதற்கு பருவமும் ஒரு காரணம். குளிர்காலத்தை விரும்பாத தம்பதிகளோ அல்லது மக்களோ இருக்க முடியாது. ஏனெனில், குளிர்காலம் காதல், கவனிப்பு மற்றும் படுக்கையில் அரவணைக்கும் நேரம். காதலர்களுக்கு மிகவும் ரொமெண்டிக்கான பல நினைவுகளை கொடுக்கும் நேரம். ஆதலால், விரைவாக காதலித்து குளிர்காலத்தில் தங்கள் துணையுடன் நேரம் செலவிட விரும்பும் ரொமெண்டிக் நபர்கள் பலர் உள்ளனர். அந்த நபர்களை பற்றி தெரிந்துகொள்ள ஜோதிடம் உங்களுக்கு உதவும்.

Zodiac signs who are likely to find love this winter season in tamil

ஆம், சில ராசிக்காரர்கள் கவலைப்பட வேண்டாம், இந்த குளிர்காலம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். நீங்கள் மிகவும் எதிர்பாராத விதத்தில் உங்களுக்கான துணையை காணலாம். அது உங்களின் ஆத்ம துணையுடன் இருப்பதற்கான நம்பிக்கையை அதிகரிக்கும். எனவே, இந்த குளிர்காலத்தில் தங்கள் காதலை காணக்கூடிய ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தங்கள் ஆற்றலுடன் பொருந்தக்கூடிய ஒருவரைக் கண்டுபிடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளனர். இந்த குளிர்காலத்தை தங்கள் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக கடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். உண்மையில், இந்த பருவத்தில் அவர்கள் பயணம் செய்யும்போது யாரையாவது சந்திக்கலாம். மக்களுடன் பழகுவதற்கு இது ஒரு நல்ல நேரமாக மேஷ ராசிக்காரர்களுக்கு இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

குளிர்காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒரு நல்ல நேரமாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் அன்பைக் கண்டுபிடிப்பதில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் குளிர்காலத்தை மிகவும் விரும்புகிறார்கள். மேலும் இந்த நேரத்திலும் அவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கையான மனப்பான்மையால் அவர்களுக்கு விரைவில் ஒரு நல்ல கூட்டாளி அமையும்.

சிம்மம்

சிம்மம்

குளிர்காலம் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்பதால் சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களை ஆழமாக நேசிக்கும் மற்றும் கவனித்துக் கொள்ளும் ஒரு துணையுடன் இருக்க வேண்டும் என்ற அவர்களின் கனவு இறுதியாக நிஜமாக மாறும். சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் கூட்டாளரை மிகவும் எதிர்பாராத விதமாக, ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் சந்திக்கக்கூடும்.

துலாம்

துலாம்

துலாம் ராசி நேயர்கள் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் நபர்கள். ஏனெனில் இந்த நேரம் எங்கும் உண்மையான அன்பைக் கண்டுபிடிக்க அவர்களை ஊக்குவிக்கும். துலாம் ராசிக்காரர்கள் தொழில்முறைப் பகுதியில் மட்டும் அன்பைக் கண்டுபிடிப்பதில் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் அவர்களுக்கு நேர்மாறான ஒருவர் குறுக்கு வழியில் வர வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் யாரையாவது தேடுவதில் குறிப்பாக ஆர்வம் காட்டாவிட்டாலும், அவர்கள் தங்கள் ஆத்ம துணையுடன் கனவில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் அவர்களை அடையாளம் காண முடியாமல் போகலாம். ஆனால் அவர்களின் உண்மையான காதல் இறுதியாக இருப்பதை அவர்களால் உணர முடியும். அவர்கள் குளிர்காலத்தில் மிகவும் உற்சாகமாக இருப்பார்கள்.

இதர ராசிக்காரர்கள்

மிதுனம், கடகம், கன்னி, தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த குளிர்காலத்தில் காதல் கிடைக்காமல் போகலாம். அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஒருவரை இறுதியாக சந்திக்க இன்னும் கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டியது அவர்களின் விதியாக இருக்கலாம். இதனால், அவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Zodiac signs who are likely to find love this winter season in tamil

Here we are talking about the Zodiac signs who are likely to find love this winter season in tamil.
Story first published: Thursday, December 8, 2022, 17:30 [IST]
Desktop Bottom Promotion