Latest Updates
-
நவம்பர் 03, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்கப்போகுதாம் -
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிலையில் நட்சத்திரத்தை மாற்றுவதால் கோடிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தீபாவளிக்கு மொறுமொறுன்னு பேக்கரி ஸ்டைல் தட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
உத்தர பிரதேச ஸ்டைல் தஹ்ரி புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் ராஜவாழ்க்கை வாழ்வார்களாம்.. உங்க பிறந்த தேதி என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப டாக்ஸிக்கான காதலன், காதலியாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Dhanteras 2026: தந்தேராஸ் என்றால் என்ன? அந்நாளில் என்னென்ன பொருட்களை வாங்குவது நல்லது? -
இந்த தீபாவளிக்கு வேர்க்கடலையை வைச்சு இந்த வித்தியாசமான இனிப்பை செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
138 நாட்கள் கழித்து வக்ர நிவர்த்தி அடையும் சனிபகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது!
இந்த 4 ராசிக்காரங்க பேசியே எல்லோருடைய உயிரையும் எடுப்பாங்களாம்... இவங்ககிட்ட பேச்சு குடுத்துறாதீங்க!
நீங்கள் மட்டும் இடைவிடாமல் பேசிக் கொண்டிருக்கையில், நீங்கள் உரையாடலை சொற்பொழிவாக மாற்றி , மற்றவருக்குப் பேச வாய்ப்பளிக்காமல் உங்களைப் பற்றிய அனைத்தையும் பேச முனைகிறீர்கள்.
பேசுவது கெட்ட குணம் அல்ல. உண்மையில், உங்களிடம் யாரிடமும், எதைப்பற்றியும் தயக்கம் இல்லாமல் தைரியமாக பேசும் குணம் உங்களிடம் இருந்தால் மிகவும் நல்லது, ஏனென்றால் அவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் நட்பாகவும் அணுகக்கூடியவராகவும் இருப்பீர்கள். ஆனால் அதிகமாகப் பேசுவதும், மற்றவரைப் பேச விடாமல் இருப்பதும் நிச்சயமாக நல்ல குணம் அல்ல.

நீங்கள் மட்டும் இடைவிடாமல் பேசிக் கொண்டிருக்கையில், நீங்கள் உரையாடலை சொற்பொழிவாக மாற்றி , மற்றவருக்குப் பேச வாய்ப்பளிக்காமல் உங்களைப் பற்றிய அனைத்தையும் பேச முனைகிறீர்கள். அத்தகைய நேரங்களில், எதிரில் இருப்பவர்கள் உரையாடலில் ஆர்வத்தை இழக்கிறார்கள் மற்றும் உங்களை வெறுக்கத் தொடங்குகிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி, அளவிற்கு அதிகமாக பேசும் ராசிகாரர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் வெளிப்படையான மற்றும் நேர்மையானவர்கள். அவர்களுக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால், அதை உங்கள் முகத்திற்கு நேராக சொல்வதற்கு ஒருபோதும் யோசிக்க மாட்டார்கள். இதைச் செய்வதன் மூலம், அவர்கள் நேரடியாகவும் உண்மையாகவும் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் கொஞ்சம் இராஜதந்திரமாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும், நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பதாக நினைத்து மற்றவர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளக் கூடாது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அதிகமாகப் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் உண்டு. அவர்களைப் பொறுத்தவரை, தொடர்பு முக்கியமானது மற்றும் அவர்கள் இதை மிகவும் நேர்மையாகப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் யாரிடமும் எதைப் பற்றியும் பேசலாம் மற்றும் சில சமயங்களில் எதிரில் இருப்பவர்கள் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஆர்வம் காட்டவில்லை என்று தெரிந்தாலும் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசுவார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் பழகிய சில நிமிடங்களில் தங்களைப் பற்றிய அனைத்து ரகசியங்களையும் பகிர்ந்து கொள்பவர்களாக இருப்பார்கள். அதிகமாகப் பகிரும் இந்தப் பழக்கம் பெரும்பாலும் மற்றவர்களை இவர்களை விட்டு தள்ளி வைக்கிறது, மேலும் துலாம் ராசிக்காரர்கள் சில விஷயங்களைத் தங்களுக்குள் வைத்துக்கொள்ளவும், மக்களைக் கவரும் வகையில் அவர்களைச் சுற்றி ஒரு மர்மமான ஒளியை உருவாக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் யாருடனும் எந்த விதமான உரையாடலையும் எளிதில் தொடங்கலாம். ஆனால் அவர்களிடம் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் அவர்கள் உரையாடலை ஒரு தலைப்பிலிருந்து மற்றொரு தலைப்பிற்கு எளிதாக மாற்றி விடுவார்கள். அவர்கள் சிறிய பேச்சிலிருந்து தொடங்கி, தங்கள் ஆழ்ந்த ரகசியங்கள் வரை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.



Click it and Unblock the Notifications
