Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
இந்த 5 ராசிக்காரங்க தனிமை காதலர்களாம்..இவங்களோடு இருக்குறது ரொம்ப கஷ்டமாம்...உங்க துணையோட ராசி என்ன?
துலாம் ராசிக்காரர்கள் சுய அன்பை வலுவாக ஆதரிக்கின்றனர். மற்றவர்களுக்கு முன் தங்களை நேசிப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இது அவர்களை நம்பிக்கையான நபர்களாக ஆக்குகிறது.
வாழ்க்கை என்பதே வாழ்ந்து பார்க்கத்தானே...வா வாழ்ந்து பார்ப்போம் என்ற வரிகளை நாம் அதிகமாக கேட்டிருப்போம். ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைத்த இந்த வாழ்க்கையை எவ்வாறு வாழலாம் என்று ஒரு ஆசையோ விருப்பமோ இருக்கும். சிலர் உறவுகளோடும் சொந்தங்களோடும் அதிக நேரம் செலவிட்டு மக்கள் கூட்டத்துடன் வாழ விரும்புவார்கள். எந்த உறவும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை தாங்கள் தனிமையில் வாழலாம் என்ற முடிவோடு சிலர் இருக்கலாம். தனிமையில் இருப்பதை மனப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் உண்மையில் மிகவும் வலிமையான மற்றும் உறுதியானவர்கள். ஏனெனில், தனிமையில் இருப்பதைத் தேர்ந்தெடுப்பது உண்மையில் கடினமான பணியாகும்.

சொந்தமாக நேரத்தை செலவிட விரும்புவது ஒரு நல்ல விஷயமாக இருக்கலாம். நீங்கள் இந்த வகைக்குள் வருகிறீர்களா? என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், உணர்வுபூர்வமாக தனிமையில் இருக்க விரும்பும் ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தனிமையான வாழ்கையை அனுசரித்து செல்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் எந்தத் தலையீடும் இல்லாமல், எப்படி வேண்டுமானாலும் தங்கள் வாழ்க்கையை வாழக்கூடிய இடத்தில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அவர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ கடினமாக உழைக்க விரும்புகிறார்கள். சில நேரங்களில், ஒரு உறவைக் கையாளும் அளவிற்கு அவர்களுக்கு நேரமோ விருப்பமோ இருப்பதில்லை. ஆதலால், எப்போதும் தனிமையில் வாழ இந்த ராசிக்காரர்கள் விரும்புகிறார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் தனிமையில் இருக்க விரும்புகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களை மதிக்காத அல்லது அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காத ஒருவருடன் இந்த ராசிக்காரர்கள் வாழ மாட்டார்கள். ஏனெனில், இந்த ராசிக்காரர்களின் மதிப்பு அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கான ஒரு பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்பதற்காக தாங்கள் ஒரு உறவில் இருக்க வேண்டும் என விரும்ப மாட்டார்கள். எனவே, எப்போதும் தனிமையில் இருப்பதையே இந்த ராசிக்காரர்கள் விரும்புகிறார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நம்பமுடியாத அளவிற்கு பிஸியாக இருக்கிறார்கள். இதனால், அவர்கள் உறவுகளுக்கு நேரம் ஒதுக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துவதற்காக தனிமையில் இருக்கத் தேர்வு செய்கிறார்கள். அவர்கள் தங்களை யாரும் அன்பால் திசைதிருப்ப அனுமதிக்க மாட்டார்கள். அவர்களால் அரை மனதுடன் யாரையும் காதலிக்க முடியாது. எனவே, அவர்கள் சரியான உறவுக்காக காத்திருக்கவும் தேர்வு செய்கிறார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சுய அன்பை வலுவாக ஆதரிக்கின்றனர். மற்றவர்களுக்கு முன் தங்களை நேசிப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இது அவர்களை நம்பிக்கையான நபர்களாக ஆக்குகிறது. இந்த ராசிக்காரர்கள் தன்னிறைவு பெற்றவர்கள் மற்றும் அவர்களின் தேவைகள் மற்றும் கனவுகளில் கவனம் செலுத்துவதற்கு நிறைய முயற்சி செய்கிறார்கள். இதனால், மற்ற உறவுகளுடன் இருக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் மிக உயர்ந்த இலக்குகளைக் கொண்டுள்ளனர். ஆதலால், அவர்கள் உறவில் ஈடுபட விரும்ப மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் அதிக நேரம் கவனம் செலுத்துகிறார்கள். அதனால் அவர்கள் உறவுகளுடன் நேரத்தை செலவிட முடியாது. சரியான துணையுடன் இருப்பதற்கான வாய்ப்பை அவர்கள் நிராகரிக்க மாட்டார்கள், ஆனால் அவர்களால் முற்றிலும் தனியாக வாழ முடியும்.

இந்த ராசிக்காரர்கள் தனியாக இருக்கவே முடியாது
மேஷம், மிதுனம், கடகம், விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தனிமையில் வாழ்வது மிகவும் சிரமம். அவர்கள் காதல் மற்றும் உறவுகள் இருக்கும் வாழ்க்கையை வாழத்தான் விரும்புவார்கள். அவர்களால் வாழ்க்கையில் தனிமையில் இருக்க முடியாது. எப்போதும் உறவுகளுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.



Click it and Unblock the Notifications