Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இந்த 5 ராசிக்காரங்க சண்டை போடுறதுக்காகவே பிறந்தவங்களாம்... இவங்ககிட்ட எப்பவும் வம்பு வைச்சுக்காதீங்க...!
உங்களின் அதீத கோபத்திற்கு பல வெளிப்புற காரணங்கள் இருந்தாலும், உங்களின் ராசியும், கிரக நிலைகளும் உங்கள் கோபத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
உங்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் இறுதியில் சண்டையால் முடிவு பெறுகிறதா? உங்களின் அதீத கோபத்திற்கு பல வெளிப்புற காரணங்கள் இருந்தாலும், உங்களின் ராசியும், கிரக நிலைகளும் உங்கள் கோபத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. உங்களின் கட்டுப்பாடற்ற கோபம் உங்களை பல விரும்பத்தகாத சூழ்நிலைக்கு அழைத்து செல்லலாம்.

முன்கோபக்காரர், ஆத்திரக்காரர், போராளி மற்றும் மாவீரன் என கோபம் பல வகைகளில் வருகிறது. இதில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள உங்களின் பிறந்த ராசி உதவியாக இருக்கும். சில ராசிகளில் பிறந்தவர்கள் போரை வழிநடத்த பிறந்தவர்கள் ஆக்ரோஷத்துடனேயே காணப்படுவார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி சண்டையிடுவதற்காகவே பிறந்த ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
மிகவும் ஆக்ரோஷமான ராசிகளில் முதன்மையானது மேஷம். அவர்கள் மனக்கிளர்ச்சி மட்டுமல்ல, எளிதில் விரக்தியடைகிறார்கள், இது அவர்களை மேலும் சிக்கல் மற்றும் சண்டைகளை நோக்கி அழைத்துச் செல்கிறது. மேலும் மேஷ ராசிக்காரர்கள் மனதிற்குள் ஒருபோதும் வெறுப்பைக் கொண்டிருக்கமாட்டார்கள், ஆனால் கோபம் ஏற்படும்போது அவர்கள் தங்கள் மோசமான வாக்குவாதங்கள் மற்றும் குத்துக்களால் பேசுவார்கள். மிகக் குறைந்த பொறுமையுடன், மேஷம் எப்போதும் சண்டையைத் தொடங்கி, அதனை வாய்மொழியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ முடிப்பார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சமரசம் இல்லாதவர்கள் என்றாலும், அவர்கள் ஒருபோதும் சண்டையைத் தொடங்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் அவர்களுடன் உடன்படவில்லை, அவர்கள் உங்களை அழைத்துச் செல்லும் கடினமான பயணத்திலிருந்து உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. அவர்கள் வழக்கமாக முதலில் அமைதியாக விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் அது எப்போதும் முழு அளவிலான சண்டையில் முடிவடையும். அவர்கள் எப்போதும் சரியானவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்கள், அவர்களின் தவறான செயல்களை ஒப்புக்கொள்ள வைப்பது மிகவும் கடினம். ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் செயல்களில் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதால் அதனை நிரூபிக்க கடினமாக சண்டையிடுவார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் யாரும் தங்கள் வழியில் வருவதை விரும்ப மாட்டார்கள், ஒருமுறை அவர்களின் வழி தடைபட்டால், அவர்கள் பின்னால் நின்று நடப்பதைப் பார்ப்பவர்கள் அல்ல - அவர்கள் வாதங்களைத் தொடர்ந்து சண்டையைத் தொடங்கும் அளவுக்கு அவநம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் எப்போதும் தங்கள் முதல் ஆயுதமாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள், ஏனென்றால் அவர்களின் வார்த்தைகள் மிகவும் தீங்கு விளைவிக்கும். இது தவிர மிதுன ராசிக்காரர்கள் மிகவும் கணிக்க முடியாதவர்கள், ஏனெனில் அவர்களின் செயல்கள் அவர்களின் மனநிலையைப் பொறுத்தது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் புத்திசாலிகள் மற்றும் கடினமான மற்றும் ஆக்ரோஷமான வாய்மொழி சண்டைகள் மூலம் அவர்கள் உங்களை மோசமாக உணர வைக்க முடியும். அவர்கள் அகங்கார வெறி பிடித்தவர்கள், அவர்களின் ஈகோவை தொட்டால் அவர்கள் அதற்கு காரணமானவர்களை பழிவாங்காமல் விடமாட்டார்கள். ஏதாவது அவர்களை காயப்படுத்தினால், அவர்கள் அதனை மிகவும் பர்சனலாக எடுத்துக் கொள்வார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுடன் பேசும்போது சிறப்பு கவனம் செலுத்துங்கள், ஏனெனில் எதுவும் அவர்களின் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அவர்கள் பொதுவாக அமைதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் புத்திசாலிகள், ஆனால் நீங்கள் அவர்களை புண்படுத்தினால் அவர்கள் அதனை மறக்க மாட்டார்கள். அவர்கள் பழைய சண்டைகளை நினைவில் வைத்துக் கொள்ளலாம் மற்றும் உங்கள் தற்போதைய வாதங்களில் அவற்றை ஒரு குறிப்புகளாகப் பயன்படுத்தலாம் மற்றும் உங்களுடன் ஆணவத்துடன் சண்டையிடலாம்.



Click it and Unblock the Notifications