Just In
- 7 hrs ago
ஈஸியான... மாம்பழ மில்க் ஷேக்
- 8 hrs ago
உங்க கரியர்ல இந்த 4 தப்ப மட்டும் தெரியாம கூட செஞ்சிடாதீங்க....இல்லனா ரொம்ப வருத்தப்படுவீங்க!
- 8 hrs ago
இந்த இடங்களில் வலி இருந்தால் உங்க உடலில் அளவுக்கு அதிகமாக கொலஸ்ட்ரால் இருக்குனு அர்த்தமாம்... உஷார்!
- 9 hrs ago
உங்க கால் பெருவிரல் இப்படி இருக்கா? அப்ப தினமும் இத ஒரு கையளவு சாப்பிடுங்க...
Don't Miss
- News
மோடியை வரவேற்கும் நிகழ்வில் பெண் செய்தியாளரிடம் பாஜக பிரமுகர் தவறாக நடந்துகொண்டதாக சிஎம்பிசி புகார்
- Automobiles
இந்தியாவை கலக்க வரும் கியா எலெக்ட்ரிக் கார்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே வாங்கணும் போல தோணுது!
- Movies
11 மாதமாக என் மனைவியுடன் அந்த நபர் ஒரே வீட்டில்...புலம்பும் பிக்பாஸ் பிரபலம்
- Finance
ஈகாமர்ஸ் துறைக்குள் நுழையும் ஸ்விக்கி.. ஷாக்கான சோமேட்டோ..!
- Sports
"கொஞ்சம் அடி ஓவரோ" ரியான் பராக்கால் சர்ச்சையில் சிக்கிய சூர்யகுமார் யாதவ்.. ஒரே நாளில் அந்தர் பல்டி
- Technology
Samsung Galaxy A23 5G மாறுபாடு பட்ஜெட் விலையில் விரைவில் அறிமுகமா? லீக்கான புது தகவல்..
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ஆடம்பரமான ராஜவாழ்க்கை வாழ்வாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஆடம்பரமும், செல்வமும், மகத்துவமும் நிறைந்த உயர்வான வாழ்க்கை சிலருக்கு நிறைவாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். ஆடம்பரமும், விலையுயர்ந்த வாழ்க்கை முறையும் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதே பலரின் வாழ்க்கை இலக்காகும். இந்த நபர்கள் பொதுவாக கவலையற்றவர்களாகவும், நம்பிக்கையுடையவர்களாகவும், ஆனால் லட்சிய உணர்வு கொண்டவர்களாகவும் மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் விரும்புவதைப் பெற, அவர்கள் கடினமாகவும் புத்திசாலித்தனமாகவும் உழைக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள். ஜோதிட சாஸ்திரம் ஒருவரின் பிறந்த ராசியின் உதவியுடன் அவர்களின் ஆளுமைகளை மதிப்பிட உதவுகிறது. எனவே ஆடம்பரமான உயர்ந்த வாழ்க்கையை விரும்பும் சில ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
இவர்கள் பிடிவாதமாகவும் மிகவும் லட்சியமாகவும் இருக்கிறார்கள், இதன் பொருள் அவர்கள் தங்கள் இலக்குகளை அடையும் வரை இவர்கள் நிறுத்த மாட்டார்கள். இவர்கள் வசதியான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை நடத்த முடியும். அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கும் போதுமான அளவு வழங்க விரும்புகிறார்கள். மலிவான எதையும் அவர்கள் வெறுக்கிறார்கள், எனவே அவர்கள் உயர்ந்த வாழ்க்கையை வாழும் வரை வேலை செய்வார்கள்.

மிதுனம்
இவர்கள் மனக்கிளர்ச்சி உடையவர்கள், பொறுப்பற்றவர்கள் மற்றும் பொழுதுபோக்குகளை விரும்புகிறார்கள். விலையுயர்ந்த பொருளை வாங்குவது இவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று இவர்கள் நினைத்தால், அது அப்படியே இருக்கும். இவர்கள் மிகவும் தேர்ந்தெடுத்து வாங்கும் பழக்கம் கொண்டவர்கள், எனவே இவர்கள் பொருட்கள் வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டலாம், ஆனால் அது ஆடம்பரக் கடையாக இருந்தாலும் பணத்தைப் பற்றி கவலைப்படமாட்டார்கள்.
MOST READ: இந்த தவறுகளை செய்யும்வரை உங்களால் தலைகீழாக நின்னாலும் எடையைக் குறைக்க முடியாதாம் தெரியுமா?

சிம்மம்
இவர்கள் மற்றவர்களுக்கு பரிசளிப்பதையும் மற்றவர்களிடமிருந்து பரிசுகளைப் பெறுவதையும் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதையாவது பிடிக்கவில்லை என்றால் அவர்கள் தங்கள் உணர்வுகளில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். இவர்கள் மிகவும் விலையுயர்ந்த ரசனைக் கொண்டவர்கள். எனவே தங்கள் ரசனையை பூர்த்தி செய்யும் பொருட்களை வாங்க பெரும் தொகையை செலவிட விரும்புவார்கள், அதனை சம்பாதிப்பதற்கான வழிகளையும் அறிவார்கள்.

தனுசு
இவர்கள் அதிக பயணம் செய்ய விரும்புகிறார்கள், அதில் முதல்-வகுப்பு விமான டிக்கெட்டுகள், 5-நட்சத்திர ஹோட்டல் தங்குமிடங்கள் மற்றும் உணவகங்கள் போன்றவை அடங்கும். உயர்ந்த வாழ்க்கை இவர்களுக்கு ஒரு போதை மருந்து போன்றது. இவர்கள் அதிக பணம் செலவழிக்கக்கூடாது என்று ஆழ் மனதில் நினைக்கிறார்கள், ஆனால் இவர்களின் ஆசை இவர்களின் மனஉறுதியை சிதைத்து பணம் செலவழிக்க வைத்துவிடும்.
MOST READ: சீக்கிரம் கர்ப்பமாக பெண்கள் இந்த 3 பொருட்களை சாப்பிடுவது அவசியமாம்... மறந்துறாதீங்க!

மகரம்
இவர்கள் மிகவும் லட்சிய மனப்பான்மைக் கொண்டவர்கள்; இவர்கள் கடினமாக உழைக்கிறார்கள் மற்றும் தங்கள் இலக்குகளை அடைய மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். இவர்கள் முழு அளவில் மிகவும் கவனம் செலுத்தும் ராசி அறிகுறிகளில் ஒன்றாக அறியப்படுகிறார்கள். இவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள் மற்றும் இவர்கள் தங்கள் ஆடம்பரமான பொருட்களை புத்திசாலித்தனமாக வாங்குகிறார்கள். இவர்களின் வாழ்க்கை முறைக்கு எது அதிகம் உதவும் என்பது அவர்களுக்குத் தெரியும். இவர்கள் தேவையில்லாமல் துள்ளிக்குதிக்க மாட்டார்கள், ஆனால் நேரம் வரும்போது அவர்கள் நிச்சயமாக ஆடம்பரமான ஒன்றைப் பெறுவார்கள்.