Latest Updates
-
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம்
இந்த 6 ராசிக்காரங்களுக்கு 2022-ல் நிச்சயமாக திருமணம் நடக்கிற அதிர்ஷ்டம் இருக்காம்... உங்க ராசி என்ன?
நீங்கள் ஒருவரைச் சந்திக்கும் போது, உங்கள் மனதில் தோன்றும் முதல் எண்ணம் 'திருமணம்' என்று மக்கள் கூறுகிறார்கள். திருமணம் என்பது இருவரை நித்தியமாக இணைக்கும் ஒரு புனிதமான பந்தம்
நீங்கள் ஒருவரைச் சந்திக்கும் போது, உங்கள் மனதில் தோன்றும் முதல் எண்ணம் 'திருமணம்' என்று மக்கள் கூறுகிறார்கள். திருமணம் என்பது இருவரை நித்தியமாக இணைக்கும் ஒரு புனிதமான பந்தமாகும். திருமணம் என்பது அனைவருக்கம் மகிழ்ச்சியானதாக இருப்பதில்லை, இருப்பினும் திருமண உறவை ஆரம்பிக்க ஆர்வத்துடன் காத்திருக்கும் பலர் உள்ளனர்.

நல்ல செய்தி என்னவென்றால், 2022 சிலருக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்குப்போகிறது, ஏனெனில் அவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் கூடிவர வாய்ப்புள்ளது. குறிப்பாக சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு கண்டிப்பாக திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. 2022 இல் திருமணம் செய்து கொள்ளப்போகும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தனுசு
இந்த ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. உங்களை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர வைக்கும் ஒருவரிடம் நீங்கள் இறுதியாக திருமண பந்தத்தில் இணையப்போகிறீர்கள். உங்களின் வாழ்க்கைத்துணையிடம் உங்களை முழுமையாக அர்ப்பணிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். புதிய பரிசோதனை முயற்சிகள் எதையும் செய்யாமல் உங்களின் வழக்கமான வழியிலேயே திருமண உறவிற்குள் நுழையுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த ஆண்டு சரியான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும், இந்த ஆண்டு, அந்த வாய்ப்பு உங்களை முழு மனதுடன் அரவணைக்கும், மேலும் நீங்கள் நினைத்தது அனைத்தும் இந்த ஆண்டு நிறைவேற வாய்ப்புள்ளது. நீங்கள் திருமணம் செய்துகொண்டு ஒருவருடன் செட்டில் ஆக இதுவே சரியான நேரமாக இருக்கும். உங்களுக்கான சரியான துணையைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.

கடகம்
நீங்கள் ஒருவரை திருமணம் செய்து நீண்ட காலமாக காத்திருந்தால் இந்த ஆண்டு முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சரியான ஆற்றல்கள் உங்களை திருமணத்தை நோக்கி இழுக்கும், மேலும் உங்களுக்கு பொருத்தமான துணையையும் கண்டுபிடிக்கும். உங்களின் திருமணம் பெரும்பாலும் காதல் திருமணமாக இருக்க வாய்ப்புள்ளது.

துலாம்
இந்த ஆண்டு நீங்கள் ஒருவருக்கு காதலை முன்மொழிய வாய்ப்புள்ளது. நீங்கள் பொதுவாக முடிவுகளை எடுப்பதில் சந்தேகம் உள்ளதால், சரியான முடிவை எடுப்பதற்கு இது ஒரு நல்ல காலமாகும். நீங்கள் அதை நம்பினால் மட்டுமே உங்கள் திருமணம் சரியானதாக இருக்கும். இது பிரமாண்டமாகவும் ஆடம்பரமாகவும் இருக்க வேண்டியதில்லை, நீங்களும் உங்கள் கூட்டாளியும் உங்கள் இதயத்தைக் காதலில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். உங்களின் திருமண வாழ்க்கை இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது.

மீனம்
நேர்மறையான ஆற்றல்கள் இந்த ஆண்டு திருமணத்தை நோக்கி உங்களை வழிநடத்தும். இந்த ஆண்டு உங்கள் நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆத்ம துணையை அடைவதற்கான உங்கள் தேடல் இந்த ஆண்டு முடிவடையும், ஏனெனில் நீங்கள் இறுதியாக நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு, தங்கள் ஆத்ம துணையுடன் இணைய வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு இந்த ஆண்டு நிறைவேற்றப் போகிறது. தங்களின் சரியான ஒருவரைக் கண்டுபிடிக்கக் காத்திருப்பவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் கனவுகளின் துணையைக் கண்டுபிடிப்பார்கள். ஜாதகம் 2022 கணிப்புகளின்படி ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்வதற்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. காதல் உறவுகளில் இருப்பவர்களும் 2022 ஆம் ஆண்டில் திருமணம் செய்யத் திட்டமிடுவார்கள்.



Click it and Unblock the Notifications