Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
இந்த 5 ராசிக்காரங்கள வேலையை விட்டு சீக்கிரம் தூக்க அதிக வாய்ப்பிருக்காம்... உஷாரா இருந்துக்கோங்க...!
அனைத்து பணியிடங்களும் கடுமையான போட்டி நிறைந்த இடமாக இருக்கின்றன. அதிலும் கொரோனா காலக்கட்டத்தில் பணியிடங்கள் மிகவும் சவாலானதாக மாறிவிட்டது.
அனைத்து பணியிடங்களும் கடுமையான போட்டி நிறைந்த இடமாக இருக்கின்றன. அதிலும் கொரோனா காலக்கட்டத்தில் பணியிடங்கள் மிகவும் சவாலானதாக மாறிவிட்டது. ஏதாவது தவறு செய்தால், வேலையை விட்டு நீக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் ஊழியர்கள் தொடர்ந்து வாழ்கின்றனர். தங்கள் முதலாளிகள் அல்லது சக ஊழியர்களுடன் பழக முடியாதவர்களுக்கு இது கடினமானது.

இறுதியில், அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் விதியை எதிர்கொள்கின்றனர். அத்தகைய நபர்கள் மற்றவர்களை விட சவால்களை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் அவர்கள் பொதுவாக மிகவும் உணர்திறன் உடையவர்களாக இருப்பார்கள். எனவே, வேலையில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள ராசிக்காரர்கள் யாரென்று பார்க்கலாம்.

மேஷம்
இவர்கள் தங்கள் செயல்களிலும் வார்த்தைகளிலும் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அதனால், மேஷ ராசிக்காரர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள்அதிகம். தங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதையே பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள். இவர்கள் மீது எதிர்மறையான அபிப்பிராயத்தை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளைப் பற்றி அவர்கள் சிந்திப்பதே இல்லை.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதக்காரர்கள், இவர்கள் ஏதாவது சரியாக இருப்பதாக உணர்ந்தால், அவர்கள் எந்த காலத்திலும் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் மற்றவர்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள், அது இவர்களின் மேலதிகாரிகள் அல்லது முதலாளியாக இருந்தாலும் கூட இது அவர்களை பணிநீக்கம் செய்ய வழிவகுக்கும். ஆனால் ரிஷப ராசிக்காரர்கள் புத்திசாலிகள். அவர்கள் விரைவில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அவர்கள் நினைத்தால், இவர்கள் வேறு வேலையைத் தேடுவார்கள்.

மிதுனம்
இவர்கள் சொல்வதைக் கவனிக்கும் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவதில்லை. இவர்களின் கூர்மையான நாக்கு இவர்களுக்கேத் தெரியாமல் மற்றவர்களை புண்படுத்தும். இது சக ஊழியர்கள் மற்றும் முதலாளிகளுடன் தந்திரமான சூழ்நிலைகளில் இவர்களை பிரச்சினைகளில் சிக்க வைக்கலாம். இவர்களின் இந்தப் பண்பு யாருக்குமே பிடிக்காது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கடினமான சூழ்நிலைகளில் நெகிழ்வாக இருப்பது கடினம். இந்த மனப்பான்மையால் பணியிடத்தில் எளிதாக எதிரிகளை உருவாக்கி விடுவார்கள். இந்த அடையாளம் அணி வீரராக இருக்க மறுத்தால் மற்ற சக ஊழியர்கள் எரிச்சலடையலாம். சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் பிடிவாதத்தை குறைத்து, சக ஊழியர்களுடன் ஒருங்கிணைப்பாக இல்லையென்றால், அவர்கள் விரைவில் வேலையிலிருந்து நீக்கப்படலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் பணியிடத்தில் தான் மற்றவர்களால் பயன்படுத்தப்படுவதை உணரும்போது, அவர்கள் வேலையைச் செய்வதற்கான ஆர்வத்தையும் ஊக்கத்தையும் இழக்கிறார்கள். இதனால் அவர்கள் விரைவில் பணி நீக்கம் செய்யப்படும் அபாயம் உள்ளது. ஆனால் இது மீன ராசியினருக்கு சாதகமான சூழ்நிலையாகும், ஏனென்றால் அவர்களே அத்தகைய பணியிடத்தில் நீண்ட காலம் இருக்க மாட்டார்கள். அடுத்த வேலை இவர்களுக்கு விரைவிலேயே கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
