பாண்டவர்கள் ஒவ்வொருவராக தற்கொலை செய்து கொள்ள அவர்கள் செய்த பாவம் என்ன தெரியுமா?

வாழ்க்கை எப்பொழுதும் இரண்டு துருவப்பாதைகளுக்கு இடையில் பிரிகிறது. ஒரு பாதை அதிகம் பயணித்த பாதையாக இருக்கும், மற்றொரு பாதை குறைவான பயணம் செய்யாத பாதையாக இருக்கும்.

வாழ்க்கை எப்பொழுதும் இரண்டு துருவப்பாதைகளுக்கு இடையில் பிரிகிறது. ஒரு பாதை அதிகம் பயணித்த பாதையாக இருக்கும், மற்றொரு பாதை குறைவான பயணம் செய்யாத பாதையாக இருக்கும். பொதுவாக குறைவான பயணம் செய்த பாதையில் பயணம் செய்வதே தனிமனிதனின் சிறப்பாகும். அந்த பாதையில் இருக்கும் மேடு பள்ளங்கள் நமக்கு தெரியாது, அங்கு நம்மை வழிநடத்தவும் யாரும் இருக்க மாட்டார்கள்.

Why Yudhisthira refused Heaven for his dog

இந்த உண்மையை உணர்த்த மாபெரும் இதிகாசமான மகாபாரதத்தில் ஒரு அழகிய கதை உள்ளது. இந்த கதை பாண்டவர்கள் குருஷேத்திர போரில் வெற்றி பெற்ற பிறகு மேற்கொண்ட அவர்களின் இறுதி பயணத்தின் போது நடந்ததாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாண்டவர்களின் இறுதி பயணம்

பாண்டவர்களின் இறுதி பயணம்

மகாபாரதப் போரில் வெற்றி பெற்ற பிறகு பாண்டவர்கள் தங்களின் இராஜ்ஜியத்தை துறந்து சொர்க்கத்தை நோக்கி தங்களின் இறுதி பயணத்தை மேற்கொண்டனர். பயணத்தின் இறுதியில் அவர்கள் ஒரு மலையில் ஏறும்போது முதலில் பாண்டவர்களில் மூத்தவர்களான யுதிஷ்டிரன் அவர்களை வழிநடத்தினார். அவரைத் தொடர்ந்து பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரௌபதி சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து ஒரு நாயும் சென்றது.

பிணைப்புதான் துன்பத்திற்கு காரணம்

பிணைப்புதான் துன்பத்திற்கு காரணம்

மலையில் இருந்து முதலில் விழுந்தது திரௌபதிதான். பீமன் ஏன் திரௌபதி முதலில் இறந்தார் என்று யுதிஷ்டிரனிடம் கேட்டார். அவர் புனிதமற்றவளா அல்லது நல்ல இதயம் கொண்டவள் இல்லையா? என்று கேட்டார். அதற்கு யுதிஷ்டிரர் " அவள் மற்றவர்களை விட அர்ஜுனன் மீது அதிக பிணைப்பு கொண்டிருந்தாள். அதுதான் அவள் செய்த பாவம் " என்று விளக்கினார்.

அறிவார்ந்த ஆணவம் விவேகமற்றவராக்கும்

அறிவார்ந்த ஆணவம் விவேகமற்றவராக்கும்

மலையிலிருந்து அடுத்து கீழே விழுந்தது சகாதேவன். " சகாதேவன் ஏன் மரணமடைந்தான்? என்று பீமன் கேட்டார். அதற்கு யுதிஷ்டிரர் " சகாதேவன் தனது ஞானத்தின் மீது அதிக கர்வம் கொண்டிருந்தான் " அந்த ஆணவம்தான் அவனது மரணத்திற்கு காரணம் என்று கூறினார்.

தற்பெருமை அழிவிற்கு வழிவகுக்கும்

தற்பெருமை அழிவிற்கு வழிவகுக்கும்

சகாதேவனை தொடர்ந்து நகுலன் தன் உயிரை மாய்த்துக் கொண்டான். அவனது மரணத்திற்கு காரணமாக யுதிஷ்டிரர் கூறியது, " நகுலன் தன்னுடைய அழகின் மீதும் வசீகரம் மீதும் அதிக தற்பெருமை கொண்டவனாக இருந்தான் '. அதுதான் அவனது மரணத்திற்கு காரணமாக அமைந்தது.

அதிக தன்னம்பிக்கை ஆபத்தை ஏற்படுத்தும்

அதிக தன்னம்பிக்கை ஆபத்தை ஏற்படுத்தும்

அதற்கு பிறகு அர்ஜுனன் தனது உயிரை மாய்த்துக் கொண்டான். பீமன் அழுது கொண்டே " அர்ஜுனன் செய்த தவறு என்ன? " என்று கேட்டார். அதற்கு யுதிஷ்டிரர் " அர்ஜுனன் புத்திசாலியாகவும், வீரத்தில் சிறந்தவனாகவும் இருந்தான். ஆனால் அவன் அதீத தன்னம்பிக்கையுடன் இருந்தான். அதுதான் அவன் மரணத்திற்கு காரணம் " என்று கூறினார்.

வலிமை

வலிமை

தனது சகோதரர்கள் இறந்ததை கண்டு துக்கம் தாளாத பீமன் தானும் விழுந்து உயிரை விட்டான். அப்போது யுதிஷ்டிரர் தனக்குத்தானே பேசிக் கொண்டார். " பீமன் தனது உடல் வலிமை மீது அதிக பெருமிதம் கொண்டிருந்தான். மேலும் அதிகம் சாப்பிடுபவனாக இருந்தான். அதுதான் அவன் மரணத்திற்கு காரணமாக அமைந்தது " என்று கூறிக்கொண்டார்.

கடைசி பாண்டவர்

கடைசி பாண்டவர்

இறுதியாகயுதிஷ்டிரனும் அவர்கள் உடன் வந்த நாயும் மீதமிருந்தனர். இருவரும் குதித்து உயிரை விட எத்தனித்த போது, மலையின் உச்சியில் இந்திரன் தனது ரதத்தில் வந்து யுதிஷ்டிரனின் குணங்களை புகழ்ந்து அவரை தன்னுடன் சொர்க்கத்திற்கு வரும்படி அழைத்தார்.

யுதிஷ்டிரனின் நிபந்தனை

யுதிஷ்டிரனின் நிபந்தனை

யுதிர்ஷ்டிரன் இந்திரன் கூறியதை கேட்டு அவ்வளவாக மகிழ்ச்சிக் கொள்ளவில்லை. அவர் இந்திரனிடம் ஒரு நிபந்தனையை முன்வைத்தார். " நாயும் என்னுடன் சொர்க்கத்திற்கு வர வேண்டும் " என்று அவர் கூறினார்.

இந்திரனின் மறுப்பு

இந்திரனின் மறுப்பு

யுதிஷ்டிரன் விதித்த நிபந்தனைக்கு இந்திரன் மறுப்பு தெரிவித்தார். " இது நடக்க சாத்தியமில்லை " என்று இந்திரன் கூறினார். மேலும் " அனைவராலும் சொர்க்கத்திற்கு வந்து விட முடியாது, இந்த நாய் வயதானதாகவும், பலவீனமானதாகவும் இருக்கிறது " என்று கூறினார்.

நிபந்தனையற்ற அன்பு சொர்க்கத்தையே வெல்லும்

நிபந்தனையற்ற அன்பு சொர்க்கத்தையே வெல்லும்

இந்திரனின் பதிலை கேட்ட யுதிஷ்டிரன் " அப்படியெனில் நானும் சொர்க்கத்திற்கு வர விரும்பவில்லை " என்று கூறினார். " நாய் எனக்கு பூமியில் நன்றியுள்ள துணையாக இருந்தது, என்னால் அதனை விட்டு வர இயலாது. அது என் உதவியை நாடி எனக்கு நிபந்தனையற்ற அன்பைக் கொடுத்தது. உண்மையான அன்பிற்கு முன்னால் சொர்க்கத்தின் சுகங்கள் ஒன்றும் பெரிதல்ல என்று கூறினார்.

நிலையான பார்வை

நிலையான பார்வை

தனது உடன்பிறந்தவர்களின் மரணத்தை பார்த்த யுதிஷ்டிரர், தனது நாயை இழக்க வேண்டும் என்ற எண்ணம் நெருங்கியபோது மேலும் உணர்ச்சிவசப்பட்டார். மேலும் " இதனை நான் கைவிடுவதற்கு இது எதுவும் செய்யவில்லை மேலும் இது என் மனைவி மற்றும் சகோதரர்களை போல பலவீனம் எதையும் கொண்டிருக்கவில்லை. எனவே இதற்கு சொர்க்கம் செல்ல தகுதி இல்லை என்றால் எனக்கும் தேவையில்லை " என்று கூறி சொர்க்கம் செல்லும் வாய்ப்பை நிராகரித்தார்.

சோதனை

சோதனை

யுதிஸ்டிரை நிறுத்திய இந்திரன் " உன்னை போல தகுதிகள் யாருக்கும் இல்லை. நீ வாழ்க்கையின் தார்மீக சோதனையை வென்றுவிட்டாய் " இந்த நாய்தான் தர்மத்தின் கடவுள், அதனை பிரதிபலிப்பது நீ " என்று கூறினார்.

நீதி தேவன்

நீதி தேவன்

யுதிஷ்டிரனுடன் இருந்த நாய் இப்போது தர்மத்தின் கடவுளாக உண்மையான உருவத்திற்கு மாறியது. யுதிஷ்டிரனை அவரின் குணத்திற்காகவும், சரியான நடத்தைக்காகவும், அர்ப்பணிக்காகவும் பாராட்டினார். அதன்பின் இருவரும் சொர்க்கத்திற்கு சென்றனர். வழிநடத்த யாரும் இல்லை என்றாலும் யாரும் செல்லாத பாதையில் பயணிப்பதே இறுதியில் வெற்றியைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, August 9, 2019, 12:30 [IST]
Desktop Bottom Promotion