For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹாலோவீன் திருவிழா எதனால் கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதலாம் நாள் கிறிஸ்தவர்களின் திருவிழாவான "அனைத்துப் புனிதர்களின் விழா" கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கு முந்தைய நாளான அக்டோபர் 31 அன்று ஹாலோவீன் கொண்டாடப்படுகிறது.

|

அக்டோபர் மாதத்தை ஹாலோவீன் மாதம் என்று கூட அழைக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 31 ஆம் நாளன்று ஹாலோவீன் திருவிழா கொண்டாடப்படுகிறது. புத்தாடைகளை அணிவது மற்றும் பலவிதமான பயமுறுத்தும் மாறுவேடங்களை போடுவது ஆகியவையே இந்த விழாவின் முக்கிய சிறப்பம்சமாகும்.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் ஹாலோவீன் திருவிழாவின் தோற்றம் மற்றும் அது எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம். அது நமக்கு ஒரு புதிய அனுபத்தைத் தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹாலோவீன்

ஹாலோவீன்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதலாம் நாள் கிறிஸ்தவர்களின் திருவிழாவான "அனைத்துப் புனிதர்களின் விழா" கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கு முந்தைய நாளான அக்டோபர் 31 அன்று ஹாலோவீன் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக கிறிஸ்துமஸ் அன்று 100 விழுக்காட்டு அமெரிக்கர்களும் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை அலங்காரம் செய்வர். அதுபோல ஒவ்வொரு ஆண்டும் ஹலோவின் திருவிழா அன்று 65 விழுக்காடு அமெரிக்கர்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விதவிதமாக, அழகாக அலங்கரிக்கின்றனர். ஆகவே கிறிஸ்துஸ் விழாவிற்கு அடுத்த முக்கிய விழா என்று ஹாலோவீன் கருதப்படுகிறது.

ஹாலோவீன் தோற்றம்

ஹாலோவீன் தோற்றம்

ஹாலோவீன் வரலாறு 2000 ஆண்டுகால பழமை கொண்டது. தொடக்கத்தில் இந்த விழா பேகன்களின் விழாவாக கருதப்பட்டது. அதாவது இறந்தவர்களுக்கு மரியாதை செய்வதற்காக பேகன்களால் இந்த விழா கொண்டாடப்பட்டது.

பண்டைய காலத்தில் ஹாலோவீன் விழா, அன்றைய செல்டிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மக்களின் (இன்றைய அயர்லாந்து, பிரிட்டன் மற்றும் வட ஐரோப்பிய மக்கள்) சம்ஹைன் என்ற சமய விழாவாக் கொண்டாடப்பட்டது. இறந்த பின்பும் இவ்வுலகில் உலாவிக் கொண்டிருக்கும் ஆவிகளை விரட்டுவதற்காக, ஹாலோவீன் விழா அன்று, அந்த மக்கள் விதவிதமான ஆடைகளை அணிந்து கொண்டும், பலவிதமான மாறுவேடங்கள் பூண்டும், சொக்கப்பானை கொளுத்துவர். நாளடைவில் இறந்தவர்களான தங்களின் மூதாதையருக்கு மரியாதை செய்வதற்காக அக்டோபர் 31 அன்று இந்த விழாவைக் கொண்டாடத் தொடங்கினர்.

ஹாலோவீன் - அறுவடைத் திருவிழா

ஹாலோவீன் - அறுவடைத் திருவிழா

ஹாலோவீன் ஒரு அறுவடைத் திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டது. மிகப் பெரிய சொக்கப்பானை ஒன்றைக் கொளுத்தி இந்த அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடினர். மேலும் இந்த விழா, பழைய ஆண்டு முடிவுற்று புத்தாண்டின் தொடக்க விழாவாகவும் கொண்டாடப்பட்டது.

ஹாலோவீன் - கேளிக்கைத் திருவிழா

ஹாலோவீன் - கேளிக்கைத் திருவிழா

தொடக்கத்தில் செல்டிக் மொழிக் குடும்பத்து மக்களின் மூட நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த ஹாலோவீன் விழா தொடங்கியது. அதாவது இறந்தவர்களின் ஆன்மாக்கள் அல்லது ஆவிகள் இரவு நேரங்களில் வீதிகளிலும், கிராமங்களிலும் அலைந்து திரிவதாக அந்த மக்கள் நம்பினர். மேலும் எல்லா ஆவிகளும் மனிதர்களோடு தோழமையுடன் இருப்பதில்லை என்றும், தீய ஆவிகளும் இருக்கின்றன என்பது அவர்களின் நம்பிக்கை. எனவே அவர்கள் தீய ஆவிகளை சமாதானப்படுத்த சொக்கப்பானையில் ஒரு சில பொருட்களை இட்டு எரித்தனர். அதன் மூலம் தீய ஆவிகளை சமாதானப்படுத்த முடியும் என்று நம்பினர். அவ்வாறு சமாதானப்படுத்தினால் அடுத்த ஆண்டு அறுவடை அமோகமாக இருக்கும் என்றும் நம்பினர். அதன் அடிப்படையில் ஹாலோவீன் ஒரு கேளிக்கை விழாவாகக் கொண்டாடப்பட்டது.

ஹாலோவீன் - மாறுவேட திருவிழா

ஹாலோவீன் - மாறுவேட திருவிழா

ஹாலோவீன் விழாவின் முக்கிய அம்சம் என்னவென்றால், மக்கள் பலவிதமான மற்றும் பயமுறுத்தம் வகையில் மாறுவேடங்களை பூண்டு விருந்துகளில் கலந்து கொள்வதாகும். அதன் மூலம் இந்த விழாவின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றனர். நீங்களும் இந்த அக்டோபரில் ஹாலோவீன் கொண்டாடலாமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Halloween 2020: Date, History, Significance And Why we Celebrated

It is October and its Halloween time! But, have you ever known as to why Halloween is even celebrated or how did the trend begin? This time of the year is the best time to dress up and make unique things that signify the Halloween celebration.
Desktop Bottom Promotion