For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லக்ஷ்மி தேவியை வழிபடும் போது பிள்ளையாரையும் சேர்த்து வழிபடுவதற்கான காரணம் என்ன தெரியுமா?

பொதுவாக லக்ஷ்மி தேவியை வழிபடும் போது விநாயகரையும் சேர்த்தே நாம் வழிபடுகிறோம். செல்வத்தின் தெய்வமான லட்சுமியை தனி தெய்வமாக வணங்க முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை.

|

பொதுவாக லக்ஷ்மி தேவியை வழிபடும் போது விநாயகரையும் சேர்த்தே நாம் வழிபடுகிறோம். செல்வத்தின் தெய்வமான லட்சுமியை தனி தெய்வமாக வணங்க முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. லக்ஷ்மியை வழிபடும்போது ஏன் விநாயகரையும் வழிபடுகிறோம் என்று தெரியாமலேயே நாம் அதனை பல காலமாக செய்து வருகிறோம்.

Why Goddess Lakshmi and Lord Ganesha Are Worshiped Together?

இந்து மதத்தில் உள்ள பல்வேறு கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் ஒரே கடவுளின் வெவ்வேறு அம்சங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளையாரும், லக்ஷ்மி தேவியும் ஒன்றாக வழிபடபடுவதற்கான காரணம் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விநாயகரின் ஆசீர்வாதம்

விநாயகரின் ஆசீர்வாதம்

விநாயகர் மிகவும் புத்திசாலித்தனமான கடவுளாக கருதப்படுகிறார். விநாயகரின் பிரதிநிதித்துவம் அவர் எவ்வாறு ஞானத்தை பிரதிபலிக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. விநாயகர் நேர்மையான பாதையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்குபவராகவும் கருதப்படுகிறார். எனவே அவர் ஒரு புதிய தொழிலைத் தொடங்குவது, ஒரு புதிய வீட்டிற்குள் நுழைவது, அல்லது எந்த முக்கிய வேலையைத் தொடங்கும் முன் எந்த ஒரு சுப காரியத்தின் தொடக்கத்திலும் வணங்கப்படுகிறார்.

லக்ஷ்மி தேவியின் முக்கியத்துவம்

லக்ஷ்மி தேவியின் முக்கியத்துவம்

லக்ஷ்மி தேவி செல்வத்தின் அதிபதி என்பது நாம் நன்கு அறிந்துதான். செழிப்பு இல்லாமல் செல்வம் இருந்து என்ன பயன்? செல்வத்தை சரியாக பயன்படுத்த புத்திசாலித்தனம் இன்றி என்ன பயன்? உலகில் உள்ள அனைத்து பொருள் ஆதாயங்களும் புத்திசாலித்தனம் இல்லாமல் நிரந்தரமாக இருக்குமா?

இருவரின் ஆசீர்வாதம்

இருவரின் ஆசீர்வாதம்

பாதையில் உள்ள தடைகளை நீக்காமல் யாராவது பெரிய செழிப்பை அடைய முடியுமா? அதற்காகத்தான் விநாயகர் மற்றும் லக்ஷ்மி தேவி இருவரையும் பாரம்பரிய முறைப்படி நாம் இருவரும் ஒன்றாக வழிபட வேண்டும்.

நோக்கம்

நோக்கம்

விநாயகர் மற்றும் லக்ஷ்மி தேவியை ஒன்றாக வழிபடுவதன் நாம் பொருள் செல்வத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ள வேண்டியதில்லை, அதேசமயம் விவேகத்தையும் ஞானத்தையும் இலக்காகக் கொள்ள வேண்டும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது.

பூஜையின் நோக்கம்

பூஜையின் நோக்கம்

இந்து மதத்தில் புத்திசாலித்தனம் மற்றும் ஞானத்துடன் செழிப்பு மற்றும் செல்வத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் பொருள் மற்றும் ஆன்மீகத் தேவைகளுக்கு இடையே மிகச் சிறந்த சமநிலையை பராமரிக்கிறது.

சரஸ்வதி

சரஸ்வதி

சில சமயங்களில், லட்சுமி, விநாயகர் மற்றும் கற்றலின் தெய்வமான சரஸ்வதி தேவி ஒன்றாக வழிபடபடுகிறார்கள், ஏனெனில் லட்சுமி (செல்வம்) மட்டும் எங்கள் குறிக்கோளாக இல்லை என்பதை மீண்டும் அடையாளப்படுத்துகிறார்கள். மேலும், பெரும்பாலான படங்கள் அல்லது சிற்பங்களில், விநாயகரின் வலது பக்கத்தில் லக்ஷ்மி தேவியின் சிலை வைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Goddess Lakshmi and Lord Ganesha Are Worshiped Together?

Read to know why goddess Lakshmi and Lord Ganesha are worshiped together.
Story first published: Saturday, August 14, 2021, 17:26 [IST]
Desktop Bottom Promotion