Latest Updates
-
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்..இவர்களின் தோல்விக்கு காரணமே இதுதான்..உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது..
இந்த குணங்களில் ஒன்று இருந்தாலும் நீங்கள் உலகில் 2 சதவீதம் மட்டுமே இருக்கும் அதிசய பிறவிகளாம்...!
இந்த உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்தான். இத்தனை கோடி மக்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் 16 ஆளுமைகளுக்குள்தான் இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது.
இந்த உலகத்தில் 195 நாடுகளில் மொத்தம் 760 கோடி மக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாடும் கலாச்சாரம், மொழி, மரபுகள், சூழ்நிலை என பலவற்றில் வித்தியாசமானதாக இருக்கும். இந்த உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்தான். இத்தனை கோடி மக்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் 16 ஆளுமைகளுக்குள்தான் இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது.

இந்த 16 வகை ஆளுமை மிக்க மனிதர்களில் மிகவும் அரிதான அதேசமயம் சிறப்பான ஆளுமையாக அறியப்படுவது INFJ என்னும் ஆளுமையாகும். உலகில் வெறும் 2 சதவீதத்தினர் மட்டுமே இந்த தனித்துவமான ஆளுமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். நெல்சன் மண்டேலா, ஆப்ரஹாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் இந்த ஆளுமையை கொண்டவர்களாக இருந்தார்கள். இந்த பதிவில் INFJ ஆளுமை கொண்டவர்களிடம் எப்படிப்பட்ட குணங்கள் இருக்கும் என்று பார்க்கலாம்.

எதிர்கால உணர்வுள்ள மக்கள்
INFJ ஆளுமையை சேர்நதவர்கள் ஒருபோதும் சிறிய விஷயங்களை நினைத்து கவலைப்படமாட்டார்கள். மாறாக அவர்களின் எண்ணம் எப்பொழுதும் எதிர்காலம் குறித்தே இருக்கும். சவால்களை ஏற்றுக்கொள்ள இவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள். 'முடியாது' என்ற வார்த்தை இவர்கள் அகராதியிலேயே கிடையாது. தன் இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள், அதனால் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள்.

இலக்குகளை நோக்கி கடின உழைப்பு
INFJ ஆளுமை கொண்டவர்கள் தங்கள் இலக்குகளை அடைய மிகவும் கடினமாக உழைப்பதில் இருந்து வெட்கப்படுவதில்லை. இந்த சவாலான உலகில் எதுவும் இலவசமாக வருவதில்லை என்பதை அவர்கள் அறிவார்கள், மேலும் அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்று அறிவார்கள். சவாலை எதிர்கொள்ள எப்போதும் 100 சதவீதம் தயாராக இருப்பார்கள்.

அற்புதமான உள்ளுணர்வு
INFJ ஆளுமை கொண்டவர்கள் மிகவும் அற்புதமான உள்ளுணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள், இவர்களின் உள்ளுணர்வு எப்போதாவதுதான் தவறாகும். ஏனெனில் அது அவ்வளவு துல்லியமானதாக இருக்கும். எந்த விஷயம் சரியாக நடக்கும், எந்த விஷயம் சொதப்பும் என்று இவர்கள் சரியாக கணிப்பார்கள். இவர்களின் உள்ளுணர்வு இவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும்.

உண்மையை தேடுபவர்கள்
இவர்கள் இந்த உலகத்தின் மீதும் பிரபஞ்சத்தின் மீதும் தீவிர நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். தான் இந்த பிரபஞ்சத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டவர்கள் என்று இவர்கள் நம்புவார்கள். தங்கள் வாழ்க்கையின் நோக்கம் மற்றும் உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள தனக்குள்ளும், உலகத்திலும் தேடிக்கொண்டே இருப்பார்கள்.

தனி உலகம்
இந்த வகை ஆளுமை கொண்டவர்கள் எப்பொழுதும் பெரிய குழுக்களில் ஒருவராக இருக்கமாட்டார்கள், எப்போதும் சிறிய குழுக்களில் ஒருவராக மட்டுமே இருப்பார்கள். இவர்கள் நீங்கள் எளிதில் சந்திக்கும் நபர்களின் வகை அல்ல, மேலும் அவர்கள் வாழ்க்கையைப் பற்றிய மிகப்பெரிய பார்வையை கொண்டிருப்பதால் அவர்களைப் புரிந்துகொள்வது கடினம்.

இரக்க குணம்
INFJ ஆளுமை கொண்டவர்கள் நீங்கள் முழுமையாக நம்பக்கூடியவர்களாக இருப்பார்கள். ஒருபோதும் உங்களை சோகமாக இருக்க விடமாட்டார்கள். உங்களின் கோபத்தையும், சோகத்தையும் போக்கி உங்களை அமைதிப்படுத்த எப்போதும் தங்கள் தோள்களை தயாராக வைத்திருப்பார்கள். அவர்களுடன் இருக்கும்போது நீங்கள் பாதுகாப்பாக உணர்வீர்கள்.

மனதை படிப்பார்கள்
இவர்கள் அதிக உணர்ச்சிவசப்பக்கூடியவர்கள் மட்டுமல்ல மற்றவர்களை நன்கு கவனிப்பதன் மூலம் அவர்கள் மனதை படிக்கும் ஆற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒருவரின் மனதை படிப்பதன் மூலம் தங்கள் குழுவில் மோசமான எண்ணத்துடன் இருப்பவரை இவர்கள் எளிதில் வெளியேற்றிவிடுவார்கள்.

தனிமையை விரும்புபவர்கள்
INFJ ஆளுமை கொண்டவர்கள் பெரும்பாலும் தனிமையில் இருப்பதால் இவர்களால் பலருடன் தொடர்பில் இருக்க முடிவதில்லை. எவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்தாலும் இவர்கள் தனிமையில் இருக்கத்தான் விரும்புவார்கள்.

உள்ளார்ந்த முரண்பாடுகள்
முரண்பாடுகள் அவர்களின் ஆளுமையின் உள்ளார்ந்த பகுதியாகும், ஏனெனில் அவை இரண்டு உச்சநிலைகளுக்கு இடையில் மிக விரைவாக மாறக்கூடும், மேலும் அவர்களின் மனநிலையை சரிபார்க்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதற்கு காரணம் அவர்களின் INFJ ஆளுமையாகும்.

பிடிவாதம்
இந்த வகை ஆளுமை கொண்டவர்கள் அதிக உறவுச்சிக்கல்களை சந்திப்பார்கள். உங்களிடம் இருக்கும் அனைத்தையும் அவர்களுக்கு கொடுங்கள் இல்லையென்றால் எதையும் கொடுக்காதீர்கள். ஏனெனில் இவர்கள் நடுத்தரமான உறவுகளை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். இவை மட்டுமின்றி இந்த ஆளுமை கொண்டவர்கள் அனைவரிடமும் நன்றாக பேசக்கூடியவர்களாகவும், நன்றாக எழுதக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications











