Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
ஏன் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது தெரியுமா?
இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி மற்றும் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் இந்தியாவில் ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை உண்டாக்குவதை நினைவுபடுத்தும் விதமாக, ஆசிரியர்களை போற்றும் விதமாக, அவர்களை கௌரவிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி மற்றும் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் இந்தியாவில் ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அவர் ஒரு ஆசிரியர் மற்றும் கல்வியாளர் ஆவார்.

ஆசிரியர் தினத்தின் வரலாறு
1962 ஆம் ஆண்டு டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இந்திய ஜனாதிபதியாக பதவியேற்றார். அவருடைய நண்பர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அவருடைய பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாட விரும்புவதாக கூறினர். அதற்கு பதிலளித்த திரு. ராதாகிருஷ்ணன் தன்னுடைய பிறந்த நாளை ‘ஆசிரியர் தினம்' என்று கொண்டாடினால் அது தனக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று கூறினார்.
இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் இந்த வேண்டுகோள் மூலம் ஆசியர்கள் மீது அவர் கொண்ட அன்பு மற்றும் அர்ப்பணிப்பு தெரிய வருகிறது. அந்த ஆண்டு முதல் அவருடைய பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி, ஆசிரியர் தினமாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. டாக்டர். ராதாகிருஷ்ணன் குடியரசு தலைவராக பதியேற்ற 1962 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்கள் உலகின் மிகச் சிறந்த மனதுடன் இருப்பவர்கள் என்பது அவருடைய கருத்து.

சிறப்பம்சம்
ஒரு நாட்டின் எதிர்காலம் அந்த நாட்டில் உள்ள குழந்தைகள் கையில் உள்ளது என்பது பல காலமாக நம்பப்பட்டு வருகிறது. மாணவர்களை நாளைய தலைவர்களாக வடிவமைக்கும் பொறுப்பு ஆசிரியன் கையில் உள்ளது. நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் தலைவர்களை ஆசிரியர்கள் உருவாக்குகின்றனர். ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்தை வெற்றிகரமாக உருவாக்குவதில் ஆசிரியர்கள் பங்கு மிகவும் இன்றியமையாதது. மேலும் நம்மை ஒரு சிறந்த மனிதனாக, சமூகத்தின் ஒரு சிறந்த அங்கமாக, நாட்டின் சிறந்த குடிமகனாக மெருகேற்றுவது ஆசிரியர்களின் பணியாகும். ஆசிரியர்களின் கடின உழைப்பு, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் ஒவ்வொருவர் வாழ்விலும் அவர்களுடைய ஈடு செய்ய முடியாத பங்கு ஆகியவற்றை அங்கீகரிக்கும் ஒரு விழாவாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

உண்மைகள்
* சமூகத்தில் ஆசிரியர்களின் முக்கிய பங்கை நினைவு கூர்வதற்காக உலகம் முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
* உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5ம் தேதி கொண்டாடப்பட்டாலும், ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு தேதிகளில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
* ஒவ்வொரு நாட்டிலும் அங்கு புகழ்பெற்ற பிரபலங்கள் அவர்களுடைய சாதனைகள் அல்லது கல்வி களத்தில் அடைந்த மைல் கற்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விழா நடைபெறுகிறது.
* டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1962 இல் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அவர் ஒரு தீவிர கல்வியாளர், புகழ்பெற்ற இராஜதந்திரி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு சிறந்த ஆசிரியர்.
* டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் எப்போதும் ஆசிரியர்கள் சிறந்த மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும் என்று நம்பினார்.

கொண்டாட்டம்
ஆசிரியர் தினத்தன்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தாங்கள் பயிலும் இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி ஆசிரியர்களை மகிழ்விப்பார்கள். நடன போட்டி, பாட்டு போட்டி, ஆசிரியர்களைப் போல் மிமிக்ரி செய்வது, விளையாட்டு, கவிதை போட்டி என்று பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறும். சில மாணவர்கள் ஆசிரியர்களுடன் சுற்றுலா செல்வது, ஆசிரியர்களுக்கு பரிசுகள் வாங்கித் தருவது, பூக்கள், பூச்செண்டு, கைவினைப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை தருவது போன்றவை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவற்றின் மூலம் ஆசிரியர்களிடம் உள்ள அன்பு மற்றும் மரியாதையை மாணவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பகிர்ந்து கொள்ளும் அழகான அன்பை, நட்பை, பந்தத்தை வெளிப்படுத்தும் ஒரு அழகிய நாளாக ஆசிரியர் தினம் விளங்குகிறது. இன்றும் வாழ்க்கையில் சாதித்த சில முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் தினத்தன்று தாங்கள் கல்வி கற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஆசிரியர்களுடன் தங்கள் நேரத்தை செலவழித்து வருகின்றனர். அதனால் இந்த நாள் அவர்கள் நினைவை விட்டு நீங்காமல் இருக்கும். இந்த ஆண்டு, பெருந்தொற்று காரணமாக வீட்டில் இருந்து வெளியில் செல்ல முடியாமல் இருந்தாலும், உங்களுக்கு விருப்பமான ஆசிரியரிடம் போனில் பேசுவது, செய்திகள் பரிமாறுவது, போன்றவற்றை நீங்கள் செய்யலாம். ஆசிரியர்களுக்கு பரிசுகள் அனுப்பலாம் அதனுடன் ஒரு கடிதமும் எழுதி அனுப்பலாம். ஆசிரியர்கள் மற்றும் உங்களுடன் படித்த மாணவர்களுடன் ஒரு காணொளி அழைப்பில் தொடர்பு கொள்ளலாம் . இவற்றின் மூலம் இந்த நாளை நீங்களும் அழகான முறையில் கொண்டாடலாம்.



Click it and Unblock the Notifications