Latest Updates
-
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
கிருஷ்ண ஜெயந்திக்கு எப்படி பூஜை செய்யணும், எவ்வாறு விரதம் இருக்கணும் தெரியாதா? இத படிங்க...
பகவான் கிருஷ்ணர் பிறந்ததை நினைவுகூறும் வகையில் நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகை தான் கிருஷ்ண ஜென்மாஷ்டமி. தென்னிந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.
பகவான் கிருஷ்ணர் பிறந்ததை நினைவுகூறும் வகையில் நாடு முழுவதும் கொண்டாடப்படும் வண்ணமயமான பண்டிகை தான் கிருஷ்ண ஜென்மாஷ்டமி. தென்னிந்தியாவில் இப்பண்டிகையானது கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை கிருஷ்ண பக்ஷத்தின் எட்டாம் நாள் அதாவது அஷ்டமி நாளில் வருகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 19 அன்று நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில், உயிர்களைப் பாதுகாப்பவரான விஷ்ணு, தீமைகளை எதிர்த்துப் போராடுவதற்காக கிருஷ்ணராக பூமியில் அவதரித்தார் என்று நம்பப்படுகிறது. விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கிருஷ்ணர் கருதப்படுகிறார்.

கிருஷ்ண ஜெயந்தி கதை
சுமார் 5,200 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் பகவான் கிருஷ்ணர் பிறந்தார். இது துவாபர் யுகம் என்றும் அழைக்கப்படுகிறது. விஷ்ணுவின் மிக சக்தி வாய்ந்த மனித அவதாரமாக கிருஷ்ணர் கருதப்படுகிறார்.
இந்த நாளில் பக்தர்கள் நல்ல ஆரோக்கியத்துக்காகவும், சந்தோஷத்திற்காகவும் விரதத்தைக் கடைப்பிடித்து கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்வார்கள். பூஜை சடங்கு நள்ளிரவில் நடைபெறுகிறது. ஏனெனில் கிருஷ்ணர் நள்ளிரவில் ஒரு சிறையில் பிறந்தார், அங்கு அவரது தாயும் தந்தையும் அவரது மாமா மன்னர் கன்சாவால் பூட்டப்பட்டனர்.
பகவான் கிருஷ்ணரின் பெற்றோரான, தேவகி மற்றும் வாசுதேவர் மதுராவின் கொடூரமான மன்னர் கம்சாவால் சிறையில் தள்ளப்பட்டனர். தேவகியின் திருமண நாளில் (கம்சாவின் சகோதரி), அவரது எட்டாவது மகன் கன்சாவைக் கொன்றுவிடுவான் என்று அசரீரீ கூறியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கம்சா தனது சகோதரி மற்றும் மைத்துனர் இருவரையும் சிறைக்குள் அடைத்தார். கிருஷ்ணர் பிறக்கும் வரை கம்சன் அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் அனைவரையும் கொன்றார்.
பகவான் கிருஷ்ணர் பிறந்த இரவு, கம்சாவின் தாக்குதலில் இருந்து குழந்தையை காப்பாற்ற பிருந்தாவனத்திற்கு கொண்டு செல்லுமாறு தெய்வீக குரல் வாசுதேவருக்கு அறிவுறுத்தியது.

பூஜை தேதி
இந்த ஆண்டு கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஆகஸ்ட் 19, 2022 அன்று கொண்டாடப்படுகிறது. மக்கள் இந்நாளில் விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். ஆகஸ்ட் 19 நள்ளிரவில் கிருஷ்ணரை வழிபடுவார்கள். வழிபாட்டிற்குப் பிறகு, அவர்கள் நோன்பை முடித்துக் கொள்வார்கள்.

பூஜை நேரம்
* அஷ்டமி திதி தொடக்கம் - ஆகஸ்ட் 18, 2022 அன்று நள்ளிரவு 01:49 மணி முதல்
* அஷ்டமி திதி முடிவு - ஆகஸ்ட் 19, 2022 அன்று நள்ளிரவு 2:47 மணி வரை
* பூஜை நேரம் - காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை

விரத முறை
மக்கள் நாள் முழுவதும் விரதத்தைக் கடைப்பிடித்து, நள்ளிரவில் கிருஷ்ணர் பிறந்த பிறகு தான் அதை முடிக்கிறார்கள். மேலும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாட புதிய ஆடைகளை அணிந்து, நடனமாடுகிறார்கள், பாடுகிறார்கள்.
மேலும் இந்த நாளில், நாடு முழுவதும் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் கிருஷ்ணர் சிலை அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. பூஜை சடங்கு நள்ளிரவில் நடைபெறுகிறது, அதில் பகவான் கிருஷ்ணரின் சிலை வழிபடப்படுகிறது. மக்கள் கிருஷ்ணருக்குப் பிடித்த பூக்கள், பழங்கள் மற்றும் இனிப்புகளைப் படைத்து, தங்கள் குடும்பத்தின் நலனுக்காக பிரார்த்தணை செய்கிறார்கள்.

தஹி ஹண்டி
ஜென்மாஷ்டமியின் இரண்டாம் நாளில் கொண்டாடப்படும் மற்றொரு முக்கியமான பண்டிகை தான தஹி ஹண்டி. இந்த பண்டிகை மகாராஷ்டிரா மற்றும் இந்தியாவின் பிற மேற்கு மாநிலங்களில் பிரபலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், தயிர் பானைகள் (தஹி) ஒரு உயரத்தில் தொங்கவிடப்படுகின்றன. இது ஒரு மனித பிரமிட் மூலம் இளைஞர் குழுக்களால் உடைக்கப்படுகிறது. தஹி ஹண்டி பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் ஒரு குழந்தையாக கிருஷ்ணர் வெண்ணெய் மற்றும் தயிரை ஒரு உயரமான பானையில் கட்டி வைப்பர். அதை அடைய கிருஷ்ணர் தனது நண்பர்களுடன் சேர்ந்து எடுத்து உண்டு மகிழ்வார். இதை நினைவுக்கூறும் வகையில் மக்கள் இந்த பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.



Click it and Unblock the Notifications