Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
உங்களுக்கு எந்த விரலில் வெள்ளை புள்ளி இருக்குன்னு சொல்லுங்க.. உங்களுக்கு ஒரு ரகசியத்தை சொல்றோம்..
நகங்களில் உள்ள அடையாளங்களைக் கொண்டு ஒருவரைப் பற்றி நிறைய விஷயங்களை அறிந்து கொள்ளலாம். நகங்களில் உள்ள வெள்ளைத் திட்டுக்கள் ஒருவரின் வாழ்க்கைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை காண்போம்.
எப்படி ஒருவரது முகம், புருவம், மூக்கு, கண்கள் போன்றவை ஒருவரின் குணாதிசயங்களைக் கூறுமோ, அதேப் போல் நகங்களின் வடிவம், நிறம் மற்றும் நகங்களில் உள்ள திட்டுக்களும் ஒருவரது வாழ்க்கையைப் பற்றி கூறும் என்பது உண்மை தான். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு கலாச்சாரமும் நகங்களில் உள்ள திட்டுக்களுக்கு வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளன. நீங்கள் கூட உங்கள் கை விரல் நகங்களில் வெள்ளை நிறப் புள்ளிகளை கண்டிருப்பீர்கள். இப்படி கை விரலில் வெள்ளை புள்ளிகள் வந்தால், உங்கள் தாத்தா, பாட்டி உங்களிடம் உங்களுக்கு புதிய ஆடை கிடைக்கப் போகிறது என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.

ஆனால் நகங்களில் உள்ள திட்டுக்களைக் கொண்டு ஒருவரின் நடத்தை மற்றும் இயல்பை பகுப்பாய்வு செய்யும் ஒரு ஆய்வு தான் ஓனிகோமான்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த செயல்முறையைக் கொண்டு, நகங்களின் வடிவம், நகங்களின் நிறம் மற்றும் நகங்களில் உள்ள அடையாளங்களைக் கொண்டு ஒருவரைப் பற்றி நிறைய விஷயங்களை அறிந்து கொள்ளலாம். இப்போது நகங்களில் உள்ள வெள்ளைத் திட்டுக்கள் ஒருவரின் வாழ்க்கைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

நகங்கள்
முதலில் நகங்களில் உள்ள வெள்ளை புள்ளிகள் ஒருவரின் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இம்மாதிரியான கருத்து ஜெர்மனியில் இருந்து வந்தது. அதன்படி நகங்களில் அதிக வெள்ளைப் புள்ளிகளைக் கொண்டிருந்தால், அந்நபர் நீண்ட ஆயுளைக் கொண்டவர் என்பதைக் குறிக்கிறதாம்.

ஆள்காட்டி விரலில் வெள்ளை புள்ளி
ஒருவரது ஆள்காட்டி விரலில் வெள்ளைப் புள்ளி இருந்தால், அது அந்நபரின் வாழ்வில் புதிய நண்பர் அல்லது வாழ்க்கைத் துணை வரவிருப்பதைக் குறிக்கிறது. உங்களின் ஆள்காட்டி விரலில் வெள்ளைப் புள்ளி உள்ளதா என்று பாருங்கள். ஒருவேளை நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், உங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

நடுவிரலில் வெள்ளை புள்ளி
நீங்கள் உங்களின் நடுவிரலில் வெள்ளை புள்ளியைக் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் அது யாரோ ஒருவர் உங்களை பழிவாங்குவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை குறிக்கிறது. இத்தகையவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது.

மோதிர விரலில் வெள்ளை புள்ளி
ஒருவர் தங்களின் மோதிர விரலில் வெள்ளைப் புள்ளியைக் கொண்டிருந்தால், அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இது அந்நபரின் வாழ்வில் புதிய வாழ்க்கைத் துணை வரவிருப்பதை குறிப்பதோடு, நிறைய பணம் கையில் சேரப் போவதையும் குறிக்கிறதாம்.

சிறிய விரலில் வெள்ளை புள்ளி
ஒருவரது சிறிய விரல் அல்லது சுண்டுவிரலில் வெள்ளைப் புள்ளிகள் திடீரென்று வந்தால், நீங்கள் ஒரு நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தமாம்.

பெருவிரலில் வெள்ளை புள்ளி
நீங்கள் உங்களின் பெருவிரலில் வெள்ளைப் புள்ளியை காண்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு யாரோ ஒருவர் அல்லது உங்கள் அன்புக்குரியவர் உங்களுக்கு ஆச்சரியமான பரிசை அளிக்கப் போகிறார் என்று அர்த்தமாம். எனவே சிறப்பு பரிசைப் பெற காத்திருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications