For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரியின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகள்!

|

Navratri 2023: நவராத்திரி என்பது துர்கா தேவியின் 9 அவதாரங்களை போற்றி தொழுவதற்கான தினங்களாகும். 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருநாளில் துர்கா தேவி, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியை போற்றி சிறப்பு வழிபாடு நடைபெறும்.

நவராத்திரியின் போது வீடுகளில் கொலு வைப்பவர்கள், அனைத்து தெய்வங்களையும் தங்களது கொலுவில் வைத்து, 9 நாட்களும், பிரசாதம் படைத்து வழிபடுவர். ஒவ்வொரு கடவுளுக்கும் வருடத்தில் பண்டிகை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது போல தான், துர்கா தேவிக்கான பண்டிகையாக இந்த நவராத்திரி பண்டிகை விளங்குகிறது.

Navratri 2023: What to Do and What Not to Do During Navratri

நவராத்திரி பண்டிகை இந்துக்களின் பண்டிகையாக திகழ்ந்தாலும், இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. உதாரணத்திற்கு, குஜராத்தில், நவராத்திரி என்றாலே தாண்டியா தான் பிரசித்தி பெற்றது. அதேபோல், வங்காளத்தில் துர்கா பூஜை வெகு விமர்சையானது.

MOST READ: இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான சில துர்கை அம்மன் கோயில்கள்!

வேடிக்கை மற்றும் திருவிழா கொண்டாட்டத்தை தவிர, நவராத்திரியின் போது கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. கடவுளை வேண்டி வழிபாடு நடத்தும் போது, அதனை முறையாக செய்வதற்கு என்று சில நியதிகள் இருக்க தானே செய்கின்றன. வாருங்கள், இப்போது நவராத்திரியின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி தெரிந்து கொள்வோம்...

MOST READ: செல்வம், கல்வி, வீரம் பெருக சொல்ல வேண்டிய நவதுர்கை மந்திரங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நவராத்திரியின் போது செய்ய வேண்டியவை:

நவராத்திரியின் போது செய்ய வேண்டியவை:

தினசரி ஆலய தரிசனம்

நவராத்திரியின் 9 நாட்களும் தினந்தோறும் கோயிலுக்கு சென்று, துர்கை அம்மனை வழிபட வேண்டும். விளக்கேற்றி, மலர்கள் அணிவித்து, தீப ஆராதனை கண்டு வழிபடுவதன் மூலம், தேவியின் முழு ஆசிகளையும் பெற்றிடலாம்.

தண்ணீர் வழங்குவது

தண்ணீர் வழங்குவது

தினந்தோறும் துர்கா தேவிக்கு தண்ணீர் வழங்க வேண்டியது அவசியம். நவராத்திரியின் மிக புனிதமான செயலாக இது கருதப்படுகிறது.

தூய்மையான ஆடைகள்

தூய்மையான ஆடைகள்

நவராத்திரியின் 9 நாட்களும் தூய்மையான ஆடைகளை அணிய வேண்டியது கட்டாயம். மேலும், வீட்டில் கொலு வைப்பவர்கள், வீடுகளுக்குள் செருப்பு அணிவதை முற்றிலும் தவிர்த்தே ஆக வேண்டும். வெளியே அணியும் செருப்புகளும், வாசலிற்கு வெளியே விடப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

விரதம்

விரதம்

நவராத்திரியின் 9 நாட்களும், முடிந்தவர்கள் விரதம் மேற்கொள்ள வேண்டும். விரதம் என்பது நவராத்திரி பண்டிகையின் ஓர் முக்கிய அம்சமாகும். விரதமிருந்து தேவியின் ஆசிகளை வேண்டவும். விரதமிருப்பது உடலின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. அதனால், உடலில் இருக்கக்கூடிய நச்சுக்கள் நீங்கி, உடல் தூய்மையாகும்.

துர்கா அலங்காரம்

துர்கா அலங்காரம்

நவராத்திரி தினங்களில் ‘ஷிரிங்கர்' அல்லது தேவியின் அலங்காரமானது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். மேலும், இது தேவிக்கு மரியாதை செலுத்துவதற்கான ஓர் அடையாளமாகவும் காணப்படுகிறது. பூக்கள், மலர் மாலைகள், உடைகள், வளையல்கள் போன்றவற்றால் துர்கா தேவியை அலங்கரிக்கவும்.

கன்னி பூஜை

கன்னி பூஜை

நவராத்திரியின் எட்டாம் தினத்தன்று, அதாவது அஷ்டமி நாளில் கன்னி பூஜை செய்யப்படும். இந்த பூஜையின் போது, 9 பெண் குழந்தைகளை வீட்டிற்கு வரவழைத்து, அவர்களுக்கு பாத பூஜை செய்து, அன்னமளித்து வழிபட வேண்டும். இந்த பூஜையில் பங்குபெறும், 9 குழந்தைகளும், 9 கன்னிமார்களாக கருதப்படுகின்றனர்.

விளக்கேற்றுவது

விளக்கேற்றுவது

வீட்டில் நவராத்திரி கொண்டாடுபவர்கள், சாமிக்கு முன்பு அகல்விளக்கேற்றி, அதனை 9 நாட்களும் தொடர்ந்து எரிய விடுவர். இத்தகைய அகல்விளக்கு, இல்லத்தில் மகிழ்ச்சியையும், செல்வ வளத்தையும் வழங்குவதோடு, புனிதமானதாகவும், கருதப்படுகிறது. இந்த அகல்விளக்கு ஏற்றுவதற்கு, பசு நெய்யை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், பசு நெய் பரிசுத்தமானதாக கருதப்படும் ஒன்று. நெய் இல்லாவிட்டால், வேறு எந்த எண்ணெய் வேண்டுமானால் பயன்படுத்தி விளக்கேற்றலாம். ஆனால், கடுகு எண்ணெயை மட்டும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.

பிரம்மச்சரியம் கடைபிடித்தல்

பிரம்மச்சரியம் கடைபிடித்தல்

திருமணமானவர்கள் நவராத்திரியின் 9 நாட்களும் சுத்தபத்தமாக இருந்து, பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

நவராத்திரியின் போது செய்யக் கூடாதவை

நவராத்திரியின் போது செய்யக் கூடாதவை

* உணவில் பூண்டு மட்டும் வெங்காயம் சேர்ப்பதை தவிர்க்கவும்.

* ஷேவிங் செய்வது, முடி வெட்டுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது.

* அசைவ உணவை கட்டயாம் தவிர்த்திட வேண்டும்.

* மது அருந்தும் பழக்கமுள்ளவர்கள், இந்த 9 நாட்களில் அதனை தொடவே கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri 2023: What to Do and What Not to Do During Navratri

Navratri 2023: What to do and what not to do during navratri in tamil? Read on to know more...
Desktop Bottom Promotion