Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
அட்சய திருதியை நாளில் ஒவ்வொரு ராசிக்காரரும் எதை தானமா கொடுத்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் தெரியுமா?
ஜோதிட ரீதியாக, ஒவ்வொருவரும் தங்களின் ராசிக்கேற்ப குறிப்பிட்ட பொருட்களை தானமாக வழங்குவது நல்லது. இந்த செயல்முறை கிரகங்களின் எதிர்மறை விளைவுகளை அகற்றும் மற்றும் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்படி செய்யும்.
அட்சய திருதியை ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் வரும் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் செய்யப்படும் தானங்கள் மற்றும் பூஜைகள் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டு வருகிறது. மேலும் அட்சய திருதியை நாளானது எந்தவொரு ஜோதிடரையும் கலந்தாலோசிக்காமல் நல்ல விஷயங்களை செய்யலாம். அந்த அளவு மிகவும் புனிதமான நாள்.

இந்நாளில் விஷ்ணுவை பக்தியுடனும், அர்ப்பணிப்புடனும் வணங்கினால், அவரின் முழு ஆசீர்வாதத்தையும் பெறலாம். அட்சய திருதியை நாளானது தங்கம், ஆபரணங்கள், நகைகள், வெள்ளி மற்றும் பாத்திரங்களை வாங்குவதற்கான புனிதமான நாளாக கருதப்படுகிறது.
ஜோதிட ரீதியாக, ஒவ்வொருவரும் தங்களின் ராசிக்கேற்ப குறிப்பிட்ட பொருட்களை தானமாக வழங்குவது நல்லது. இந்த செயல்முறை கிரகங்களின் எதிர்மறை விளைவுகளை அகற்றும் மற்றும் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்படி செய்யும். இப்போது எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை தானமாக வழங்கினால் அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பருப்பு வகைகள், கோதுமை, சிவப்பு மலர்கள், சிவப்பு உடைகள் மற்றும் காப்பர் போன்றவற்றை தானமாக வழங்குவது நல்லது. இதனால் அதிர்ஷ்டம் இவர்களைத் தேடி வரும். அதோடு மாங்கல்ய தோஷம் நீங்கும், தன்னம்பிக்கை மேம்படும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று பசுக்கள், கன்றுகள், வைரங்கள், அரிசி, வாசனை திரவியம் மற்றும் நீல நிற உடைகளை தானமாக வழங்குவது நல்லது. இதனால் இவர்களின் காதல் வாழ்க்கை மேம்படும் மற்றும் திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் பருப்பு வகைகள், மரகதம், தங்கம், பச்சை நிற ஆடைகள், காய்கறிகள், மணி பிளாண்ட் போன்ற தாவரங்களை தானமாக அட்சய திருதியை நாளில் வழங்குவது நல்லது.

கடகம்
கடக ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று சர்க்கரை, அரிசி, நெய், பால், தயிர், தண்ணீர், வெள்ளி, வெள்ளை நிற உடைகள் மற்றும் முத்துக்களை தானமாக வழங்கினால், அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் பெருகுவதோடு, மனச்சோர்வு மற்றும் மனநோயைக் கட்டுப்படும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சிவப்பு நிற உடைகள், குங்குமம், மெழுகுவர்த்தி, கற்பூரம், காப்பர், வெல்லப்பாகு மற்றும் பாத்திரங்களை தானமாக வழங்குவது மிகவும் நல்லது. இதனால் சமூகத்தில் அவர்களின் பெயர், புகழ் மேம்படுவதோடு, அங்கீகாரமும் கிட்டும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் காய்கறிகள், தாவரங்கள், பச்சை நிற உடைகள், பச்சை நிற வளையல்கள், புத்தகங்கள், விதைகள் மற்றும் உணவுப் பொருட்களை தானமாக வழங்குவது வருடம் முழுவதும் அதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் வாசனை திரவியம், பால் பொருட்கள், நீல நிற உடைகள், நீல நிற வளையல்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சந்தனம் போன்றவற்றை தானமாக வழங்குவது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் குங்குமம், சிவப்பு நிற வளையல்கள், லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ், சந்தனம், குங்குமப்ழு, சிவப்பு நிற உடைகள் மற்றும் மலர்களை தானமாக வழங்குவது நல்லது. இதனால் வாழ்வில் உள்ள தடைகளை விலகும் மற்றும் மாங்கல்ய தோஷமும் நீங்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் மத புத்தகங்கள், ஸ்டேஷனரி பொருட்கள், மஞ்சள் நிற உடைகள், பாத்திரங்கள், புஷ்பராகம், மலர்கள் மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றை தானமாக வழங்குவது நல்லது. இது வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வைப் பெறும் அதிர்ஷ்டத்தை வழங்கும். மேலும் வியாபாரம் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி காணவும் உதவும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று எண்ணெய், இரும்பு பாத்திரங்கள், கருப்பு நிற உடை, காலணிகள், பேனா, ஃபேன் போன்றவற்றை தானமாக வழங்குவது வாழ்வில் வெற்றி காண உதவும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் கடுகு எண்ணெய், தேங்காய் நீர், பாத்திரங்கள், குடை, போர்வை, காலணிகள் மற்றும் ஏழு தானியங்களை அட்சய திருதியை அன்று தானமாக வழங்குவது நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் கொண்டைக்கடலை பருப்பு, தங்கம், குங்குமப்பூ, புத்தகம், சீருடை மற்றும் மஞ்சள் ஆகிய பொருட்களை தானமாக வழங்குவது, வாழ்வில் செல்வ செழிப்புடன் இருக்க உதவும்.



Click it and Unblock the Notifications