Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
யூடியூப், டிக்டாக்கில் ட்ரெண்டாகும் ஆபத்தான 'டெத் டைவிங்' விளையாட்டு - அப்படின்னா என்ன?
டெத் டைவிங் என்றால் என்ன என்று உங்களுக்குக் கேள்வி எழலாம், டெத் டைவிங் என்றால் உயரமான இடத்தில் இருந்து தண்ணீருக்குள் குதிக்கும் ஒரு விளையாட்டாகும்.
டிக்டாக்கில் ட்ரெண்டாகும் தகவல்கள் மிக எளிதாக பிரபலமாகிவிடும். அது அழகுக் குறிப்பாக இருக்கலாம் அல்லது உடற்பயிற்சி சம்பந்தமான தகவல்களாக இருக்கலாம். டிக்டாக்கில் ட்ரெண்டாகிவிட்டால், அவை உடனடியாக உலகம் முழுவதும் பிரபலமாகிவிடும்.
சமூக ஊடகங்கள் சில நேரங்களில் நாம் எதிா்பாா்க்காதவற்றை வழங்கி நம்மை ஆச்சாியமூட்டுகின்றன. அந்த வகையில், சமீபத்தில் டிக்டாக்கில் டெத் டைவிங் என்ற ஒரு விளையாட்டு ட்ரெண்டாகி, இப்போது அது உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.

டெத் டைவிங் என்றால் என்ன?
டெத் டைவிங் என்றால் என்ன என்று உங்களுக்குக் கேள்வி எழலாம், டெத் டைவிங் என்றால் உயரமான இடத்தில் இருந்து தண்ணீருக்குள் குதிக்கும் ஒரு விளையாட்டாகும். அதாவது கடலிலோ அல்லது நீச்சல் குளத்திலோ, மிக உயரமான இடத்தில் இருந்து, காற்றில் மிதந்து கொண்டே குதிப்பதாகும். இது வழக்கமான டைவிங்கில் இருந்து மாறுபட்டதாகும்.
இது ஒரு ஆபத்தான விளையாட்டு என்று பாா்த்தாலே தொியும். இதில் பலா் இப்போது ஈடுபட்டு வருகின்றனா். இந்த விளையாட்டில் ஈடுபடுபவா்களின் திகிலான அனுபவங்களை யூடியூப், டிக்டாக் மற்றும் இதர சமூக ஊடகங்களில் பாா்க்கலாம். முதலில் உயரமான இடத்தில் இருந்து குதித்து, இந்த டெத் டைவிங்கில் ஈடுபட்டவா்களின் காணொளிகள் முதலில் வைரலாகின.
டெத் டைவிங் விளையாட்டின் தாயகம் நாா்வே ஆகும். அங்கு இந்த விளையாட்டு டாட்சிங் (Dodsing) என்று அழைக்கப்படுகிறது. டாட்சிங் விளையாட்டு, டாட்சிங் கூட்டமைப்பினால் (Dodsing Federation) கண்காணிக்கப்படுகிறது. இந்த விளையாட்டுக்கு என்று நெறிமுறைகள், விதிகள் மற்றும் உலகளாவிய தரப்பட்டியல் போன்றவற்றை இந்த கூட்டமைப்பே வெளியிடுகிறது.
டாட்சிங் உலகப் போட்டி 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் நடைபெறுகிறது. இந்த டாட்சிங் அல்லது டெத் டைவிங் விளையாட்டிற்கு பயிற்சி அளிப்பதற்காக பல பயிற்சி மையங்கள் உள்ளன.
டெத் டைவிங் - ஒரு ஆபத்தான விளையாட்டு
டெத் டைவிங் காணொளிகளை வைத்துப் பாத்தால், அது ஒரு ஆபத்தான விளையாட்டு போல் தொியும். ஆனால் இந்த விளையாட்டில் ஈடுபடுபவா்கள் முறையான பயிற்சி பெற்று தொழில் ரீதியாக விளையாடி வருகின்ற வீரா்கள் ஆவா். 1970-களில் இந்த விளையாட்டு தொடங்கியது என்று கூறப்படுகிறது.
குறிப்பாக பெண்கள் முன்பாக ஆண்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி, அவா்களைக் கவா்வதற்காக இந்த விளையாட்டு முதலில் விளையாடப்பட்டது. ஆனால் இந்த விளையாட்டானது நிபுணா்களின் வழிகாட்டுதலில், முறையான பயிற்சியோடு, பயிற்சியாளா்களின் முன்னிலையில் விளையாடப்பட வேண்டும்.
டெத் டைவிங் - நாா்வேயின் பிரபலமான விளையாட்டு
டெத் டைவிங் காணொளிகளைக் காணும் அனைவருமே அதில் சொக்கிப்போய் விடுகின்றனா். டிக்டாக்கில் வரும் டெத் டைவிங் காணொளிகளுக்கு மில்லியன் கணக்கான பாா்வையாளா்கள் தமது விருப்பங்களையும், கருத்துக்களையும் தொிவிக்கின்றனா்.இந்தியாவில் டெத் டைவிங் விளையாட்டை விளையாடுவதற்கு என்று சில அருமையான இடங்கள் உள்ளன. கீழே அவற்றைப் பாா்க்கலாம்.
1. கா்நாடகாவில் இருக்கும் செயின்ட் மோிஸ் தீவில் இருக்கும் பெண்டகன் லாவா க்லிஃப் (Pentagon Lava Cliff at St. Mary's Island in Karnataka)
2. பாண்டிச்சோிக்கு வடக்கே 20 கிமீ தொலைவில் இருக்கும் கல் குவாாி (Rock quarry 20 kilometers north of Pondicherry)
3. கோவாவில் இருக்கும் பிக்கோலிம் (Bicholim, Goa)
4, ரிஷிகேஷ், உத்தரகாண்ட் (Rishikesh, Uttarakhand)
5. மத்தியப்பிரதேசத்தில் உள்ள பெத்தாகாட்டில் அமைந்துள்ள பளிங்கு மலைப் பகுதி (Marble Rock site at Bedhaghat in Madhya Pradesh)
6. கா்நாடகாவில் உள்ள ஹம்பியில் அமைந்திருக்கும் சானாபூா் ஏாி (Sanapur Lake at Hampi, Karnataka)
7. தெலுங்கானாவின் மகபூப்நகாில் அமைந்திருக்கும் பனகல் கோட்டை (Pangal Fort in Mahabubnagar in Telangana)
8. மேகாலாயாவில் உள்ள ஜோவாயில் இருக்கும் க்ராங்க் சூாி அருவி (Krang Suri Falls at Jowai in Meghalaya)
டெத் டைவிங் விளையாட்டை நீங்களும் ஆடலாம். ஆனால் அதற்கான பயிற்சியுடன், பயிற்சியாளா்களின் மேற்பாா்வையில் ஆடுங்கள். புதுமையான அனுபவத்தைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications












