For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு நைட் வானத்துல தோன்றும் ப்ளூ மூனை தெளிவா எப்படி பாக்கணும் தெரியுமா?

இரட்டை நீல நிலவு என்று அழைக்கப்படும் இந்த பருவகால நிகழ்வு அசாதாரணமானது. இது ஒரு நூற்றாண்டில் மூன்று அல்லது ஐந்து முறை மட்டுமே நிகழ்கிறது.

|

கொரோனா வைரஸுடன் இந்த வருடம் மக்கள் அனைவரும் போராட்டிக்கொண்டியிருக்கையில், ஓர் அறிய நிகழ்வு நிகழப்போகிறது. ஆம், நாம் அனைவரும் வானில் ஒரு அறிய காட்சியை காண விருக்கிறோம். அதுதான் "ப்ளூ மூன்". இன்று இரவு, வானம் ஒரு அற்புதமான காட்சிக்கான இடமாக இருக்கும். ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவுகளைப் பார்ப்பது மிகவும் அரிது.

what is a blue moon? time to significance and everything you need to know in tamil

வியத்தகு, மர்மமான மற்றும் திகில் கதைகளின் பின்னணியில் ஒரு முக்கிய அங்கமாக இருந்தபோது, பழங்காலத்தில் இருந்து நாட்டுப்புறக் கதைகளை கவர்ந்திழுப்பதில் ப்ளூ மூன் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகும். அதைத் தொடர்ந்து, இன்று இரவு 8.19 மணி முதல் இரவு வானத்தில் ப்ளூ மூன் தெரியும். ஒரே மாதத்தில் இரண்டு முறை தோன்றும் பெளர்ணமி நிலவான புளூ மூன் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புளூ மூன்

புளூ மூன்

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை முழு நிலவு பௌர்ணமியும், ஒருமுறை அமாவாசையும் தென்படும். ஆனால் மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு தோன்றலாம். அப்படியாக இந்த அக்டோபரில் இரண்டு முழு நிலவுகள் காணப்படுகிறது. அவற்றில் இரண்டாவது சந்திரன் பொதுவாக ‘ப்ளூ மூன்' என்று அழைக்கப்படுகிறது. முதல் பெளர்ணமி நிகழ்வு அக்டோபர் 1 ஆம் தேதி நடந்தது. ப்ளூ மூன் என்றழைக்கப்படும் இரண்டாவது பெளர்ணமி இன்று (அக்டோபர் 31) இரவு 8.19 மணியளவில் வானத்தில் தெரியும்.

நிலவு சுற்றி வரும் காலம்

நிலவு சுற்றி வரும் காலம்

புளூ மூன்னிற்கும் சந்திரனின் நிறத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. புளூ மூன் என்பதால் இது நீல நிறத்தில் தெரிவதில்லை. மற்ற நாட்களை போலவே தெரியும். ஆனாலும், அறிவியல் ரீதியாக புளூ மூன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சந்திர நாட்காட்டியின் படி, நிலவு தன்னைத் தானே ஒருமுறை சுற்றுவதற்கு, 29.531 நாட்கள் அல்லது 29 நாட்கள், 12 மணி, 44 நிமிடம், 38 வினாடிகள் ஆகிறது.

இரண்டு அல்லது மூன்று மாதங்கள்

இரண்டு அல்லது மூன்று மாதங்கள்

உலகம் முழுவதும், கிரிகோரியன் காலண்டர் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, மாதத்தின் நீளம் 28 முதல் 31 நாட்கள் ஆகும். எனவே முழு நிலவுகள் மாதத்திற்கு இரண்டு முறை ஏற்படலாம், ஆனால் அரிதாகவே. 1550 முதல் 2650 வரையிலான 1100 ஆண்டுகளில், 408 பருவகால நீல நிலவுகள் மற்றும் 456 மாதாந்திர நீல நிலவுகள் இருந்தன. அதாவது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதோ ஒரு நீல நிலவு தோன்றும். பருவகால நீல நிலவுகள் மாதாந்திர நீல நிலவுகளை விட சற்று குறைவாகவே நிகழ்கின்றன.

இரட்டை நீல நிலவு

இரட்டை நீல நிலவு

இரட்டை நீல நிலவு என்று அழைக்கப்படும் இந்த பருவகால நிகழ்வு அசாதாரணமானது. இது ஒரு நூற்றாண்டில் மூன்று அல்லது ஐந்து முறை மட்டுமே நிகழ்கிறது. 2018 ஆம் ஆண்டில், 'இரட்டை நீல நிலவு' நிகழ்வு தோன்றியது. அடுத்தது 19 ஆண்டுகளுக்குப் பிறகு 2037 இல் தோன்றும்.

புகைப்படம் எடுக்க முடியாது

புகைப்படம் எடுக்க முடியாது

ப்ளூ மூனை புகைப்படம் எடுப்பது அவ்வளவு சுலபமில்லை என்கிறார் வானியல் ஆராய்ச்சியாளர்கள். புளூ மூனை ஸ்மார்ட் போனில் புகைப்படம் எடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். டெலிபோட்டோ உதவியுடன் எடுத்தால் நிலவை சற்று பெரிதாக காட்டும் என்றும் கூறப்படுகிறது.

தெளிவாக பார்க்க முடியும்

தெளிவாக பார்க்க முடியும்

2001ம் ஆண்டு தென்பட்ட புளூ மூன் மத்திய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் மட்டுமே தெளிவாக காணமுடிந்தது. ஆனால் இன்று தோன்றுவதை அனைத்து இடங்களிலும் இருந்து தெளிவாக பார்க்க முடியும். ஆதலால் தான் இன்றைய புளூ மூன் சிறப்பம்சம் கொண்டதாக உள்ளது.

இந்தியாவில் ப்ளூ மூன் பார்ப்பது எப்படி?

இந்தியாவில் ப்ளூ மூன் பார்ப்பது எப்படி?

குறைந்த மாசுபாட்டுடன் வானம் தெளிவாக இருந்தால், நீல நிலவு வானத்தில் தெளிவாகத் தெரியும். கவனிக்க வேண்டியது, இன்றிரவு (அக்டோபர் 31) இரவு 8:19 மணிக்கு உச்சத்தை எட்டும், இது பார்வையாளர்களுக்கு சிறந்த காட்சியைக் கொடுக்க வேண்டும். இந்த முறை நீல நிலவு செவ்வாய் கிரகத்திற்கு அருகில் தோன்றும் என்றும் நாசா குறிப்பிடுகிறது. இது ஹாலோவீன் இரவு என்பதால், வானம் தெளிவாக இருந்தால் பார்வையை ரசிக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

what is a blue moon? time to significance and everything you need to know in tamil

what is a blue moon? time to significance and everything you need to know in tamil
Desktop Bottom Promotion