Latest Updates
-
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும்
உலக மக்கள் விரும்பி சாப்பிடும் சில விசித்திரமான மற்றும் அருவெறுக்கத்தக்க உணவுகள்!
உலகின் சில பகுதிகளில் கற்கால மனிதர்கள் சாப்பிட்டு வந்த சில இறைச்சிகள் சாப்பிடப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால் அந்த இறைச்சிகளின் பெயர்களை கேட்டால், நீங்கள் தொடுவதற்கு கூட தயங்கக்கூடியவையாக இருக்கும்.
உலகெங்கிலும் பல வகையான இறைச்சிகள் மக்களால் சாப்பிடப்படுகிறது. அதில் கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, வெனிசன், பன்றி இறைச்சி போன்றவை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் இறைச்சி வகைகளாகும். மனிதன் பயிர்களை வளர்ப்பதற்கும், மரங்களை நடவு செய்வதற்கும் போதுமான அறிவு இல்லாத காலத்திற்கு முன், அதாவது கற்காலத்தில் இறைச்சியைத் தான் சாப்பிட்டு வந்தான். தங்களுக்கான உணவை தாங்களே உருவாக்குவதற்கான அறிவு இல்லாததால், ஆரம்ப காலத்தில் மனிதன் உயிர் வாழ்வதற்காக விலங்குகளை வேட்டையாடி சாப்பிட தொடங்கினான்.

அப்போது எந்த ஒரு உணவுப் பொருளுடனும், எந்தவிதமான வெறுப்பு உணர்வும் இல்லாததால், கொல்ல முடிந்த அனைத்தையும் கொன்று கற்கால மக்கள் சாப்பிட்டார்கள். பின்னர், பரிணாம வளர்ச்சியுடன், எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்ற ஒன்றை உருவாக்கினர். என்ன தான் நாகரீகம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், இன்னும் உலகின் சில பகுதிகளில் கற்கால மனிதர்கள் சாப்பிட்டு வந்த சில இறைச்சிகள் சாப்பிடப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால் அந்த இறைச்சிகளின் பெயர்களை கேட்டால், நீங்கள் தொடுவதற்கு கூட தயங்கக்கூடியவையாக இருக்கும். இப்போது உலகில் சாப்பிடப்படும் அப்படிப்பட்ட விசித்திரமான மற்றும் அருவெறுக்கத்தக்க விலங்குகள் எவையென்று காண்போம்.

வெட்டுக்கிளி
வெட்டுக்கிளியை வறுத்தோ, நெருப்பில் வாட்டியோ அல்லது டோஸ்ட் செய்தோ என பல வழிகளில் சாப்பிடலாம். அவை சுவையாக கருதப்படுவதோடு, பலரால் விரும்பப்படுகின்றன. இதில் உள்ள ஒட்டுண்ணியை அகற்றவதற்காக சமைப்பதற்கு முன், இதன் கால்கள் மற்றும் இறக்கைகள் நீக்கப்படுகின்றன. பொதுவாக இந்த வெட்டுக்கிளிகள் மெக்ஸிகோ, தாய்லாந்து மற்றும் மத்திய அமெரிக்காவில் சாப்பிடப்படுகின்றன.

அலிகேட்டர்
தெற்கு அமெரிக்காவின் பல உணவகங்களில் அலிகேட்டர் இறைச்சி/ முதலை இறைச்சி பயன்படுத்தப்படுகிறது. அலிகேட்டரின் முட்டைகளும் சாப்பிடப்படுகின்றன. மேலும் இந்த வகை இறைச்சி அதிக புரோட்டீன் மற்றும் குறைவான கொழுப்பு காரணமாக ஆரோக்கியமான இறைச்சியாக கூறப்படுகிறது.

கினியா பன்றி
தெற்கு அமெரிக்காவின் ஆண்டியன் கலாச்சாரத்தில் "குய்" என்று அழைக்கப்படும் கினியா பன்றி இறைச்சி சாப்பிடப்படுகிறது. பண்டைய இன்கான் காலங்களில், குய் ராஜாக்களால் சாப்பிடப்பட்டது அல்லது அதிர்ஷ்டம் சொல்லும் முறை மற்றும் தியாகமாகவும் பயன்படுத்தப்பட்டது. இன்று, இந்த இறைச்சி ஒரு சத்தான பிரதானமாக பார்க்கப்படுகிறது.

கோப்ரா பாம்பு
இந்த வகை பாம்பின் இறைச்சி வியட்நாம்மின் பல பகுதிகளில் சாப்பிடப்படுகிறது. அதுவும் அங்குள்ள உணவகங்களில் பாம்பு ரத்தத்துடன் கலந்த அரிசி ஒயினுடன் வழங்கப்படுகிறது. இந்த பாம்பின் ஒவ்வொரு பகுதியும் பலவாறு சமைக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதில் பாம்பு முட்டை சூப், க்ரில் செய்யப்பட்ட பாம்பு விலா எலும்புகள், மொறுமொறுப்பான பாம்பு தோல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. வியட்நாமிய மக்கள் பாம்பு ஒரு பாலுணர்ச்சியைத் தூண்டும் உணவாக நம்புகிறார்கள். மேலும் ஆண்கள் தங்களின் வலிமையையும், வீரியத்தையும் அதிகரிக்க இதை சாப்பிடுவது நல்லது.

சிலந்திகள்
சிலந்திகள் ஒருபுறம் மக்களுக்கு பயத்தை உண்டாக்கும் ஒரு பூச்சியாக இருந்தாலும், மறுபுற மக்களுக்கு ஒரு சுவையான உணவாக உள்ளன. பெரும்பாலும் இந்த வகை பூச்சி ஸ்கூன் மற்றும் கம்போடியாவில் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் மற்றும் இது சுவையானதாகவும் நம்பப்படுகிறது.

யானை
கடவுளாக வழிபடும் யானை, கேமரூன், மத்திய ஆப்ரிக்க குடியரசு, காங்கோ குடியரசு மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு ஆகிய நாடுகளில் யானைகளின் அனைத்து இனங்களும் வேட்டையாடப்படுகின்றன. யானை தந்த வேட்டையாடலின் போது வேட்டைக்காரர்களால் இதன் இறைச்சி விற்கப்படுகிறது அல்லது வெற்றிகரமாக வேட்டையாடியதை கொண்டாடும் பார்ட்டியில் உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

எலிகள்
எலிகள் மிகவும் அருவெறுக்கத்தக்க விலங்குகளில் ஒன்றாக கருதப்பட்டாலும், அவை இந்தியா, சீனா, இந்தோனேசியா, கானா, தாய்லாந்து போன்ற சில பகுதிகளில் சாப்பிடப்படுகின்றன. இந்தியாவில் உள்ள மிஷ்மி கலாச்சாரத்தில், எலிகள் கட்டாயம் பாரம்பரிய உணவாக எடுக்கப்படுகின்றன. மேலும் மிஷ்மி பெண்கள் மீன், பன்றி இறைச்சி, காட்டு பறவைகள் மற்றும் எலிகளைத் தவிர வேறு எந்த இறைச்சியையும் சாப்பிடக்கூடாதாம்.

கொரில்லா
கொரில்லாவை சாப்பிடுவது ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு பழைய நடைமுறையாகும் மற்றும் இன்னும் அங்கு தொடர்கிறது. ஆனால் குரங்குகள் மற்றும் கொரில்லா போன்றவை எச்.ஐ.வி வைரஸைக் கொண்டு வரக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்த பின்னர், கொரில்லாவை சாப்பிடும் முறை கைவிடப்பட்டது.



Click it and Unblock the Notifications