Just In
- 15 min ago World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- 45 min ago வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- 1 hr ago 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- 2 hrs ago கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
Don't Miss
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- News நிருபர் கேட்டாரே ஒரு கேள்வி.. வாயை கொடுத்து சிக்கிக் கொண்ட ராதிகா சரத்குமார்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வார ராசிபலன் (22.05.2022-28.05.2022) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்களாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்...
இந்த வாரம், அதாவது மே 22, 2022 முதல் மே 28, 2022 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்...
நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களுமே நமது ஜாதக கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலைகளின் படி எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தை பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம். சரி, இந்த வாரம், அதாவது மே 22, 2022 முதல் மே 28, 2022 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் பண விஷயத்தில் சற்று சிரமமாகவே இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கலாம். பண விஷயத்தால் பிறருடன் பிரச்சனை ஏற்படலாம். இந்த வாரத்தின் ஆரம்ப நாட்கள் நன்றாக இருக்காது. ஆனால் போக போக சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான புரிதல் மேம்படும். வேலை தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும். இந்த வாரத்தில் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நாள்: புதன்
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் கிரக நிலைகளால் நற்பலன்களை பெறுவீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்தக் காலகட்டத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொருளாதார நிலை மேம்படும். பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்கும். இந்த வாரத்தில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமண வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று சோர்வாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் மனதில் உள்ள பிரச்சனைகளை அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால், மன அழுத்தம் அதிகரித்து எதையும் செய்ய முடியாமல் போகும். அதோடு உடல் ஆரோக்கியம் மோசமாவதற்கு வழிவகுக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய பாதை திறக்கும். வேலைச்சுமை அதிகரித்தாலும், ஓய்வின்றி மிகவும் கடினமாக உழைக்க வேண்டாம். தொழிலதிபர்கள் பண விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்தவொரு பெரிய வணிக முடிவையும் எடுப்பதற்கு முன், உங்கள் நிதி நிலைமையைப் பார்க்க வேண்டும். இந்த வாரத்தில் நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். குறிப்பாக உடல்நலத்தில் பெரிய சரிவை சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
கடகம்
கடக ராசிக்காரர்களே! பணத்தைப் பொறுத்தவரை ஓரளவு சிறப்பாக இருக்கும். கடனாக கொடுத்த பணத்தை திரும்பப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இந்த வாரத்தில் சிந்திக்காமல் எந்த நிதி பரிவர்த்தனைகளையும் செய்யாமல் இருந்தால் நல்லது. வணிகர்கள் குறுகிய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலையைச் செய்பவர்கள் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளுடன் நல்ல உறவை வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். வீட்டுச் சூழல் சிறப்பாக இருக்க, உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இந்த காலகட்டத்தில் உங்கள் திருமண வாழ்க்கையில் சில குழப்பங்கள் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் பிரச்சனைகளை சந்திக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் நன்றாக நினைத்தால் நல்லது நடக்கும். உங்களை நம்புங்கள், தொடர்ந்து கடினமாக உழையுங்கள். விரைவில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். அவசரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு உங்களை சிக்கலில் மாட்டிவிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். பதவி உயர்வு பற்றிய நல்ல செய்தியைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் கடின உழைப்புக்கு வெற்றி கிட்டும். இந்த வாரம் உங்களுக்கு மிகவும் பிஸியாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உணர்ச்சிப்பூர்வமான இணைப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் வெளியாட்களை தலையிட அனுமதிக்காதீர்கள். இல்லாவிட்டால் பிரச்சனைகள் அதிகரிக்கும். இந்த வாரத்தில் நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும், உங்கள் அன்புக்குரியவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். பணியிடத்தில், சக ஊழியர்களுடன் நல்ல உறவைப் பேண முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் உங்கள் இமேஜ் பாழாகும் மற்றும் அது உங்கள் வேலையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். சில்லறை வியாபாரிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். இந்த வாரத்தில் உங்கள் நிதி நிலை மேம்படும். உங்கள் வாழ்க்கை துணையின் மீது நம்பிக்கையை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். பணத்தைப் பொறுத்தவரை, இந்த நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். கூடுதல் பணம் செலவழிப்பது உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஒரு வேலையைச் செய்தால், உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மறுபுறம், உங்கள் சம்பளம் தொடர்பான ஏதேனும் சிக்கல் இருந்தால், இந்த நேரத்தில் உங்கள் பிரச்சினை தீரும். தொழிலதிபர்கள் எந்த ஒரு முக்கிய வியாபார முடிவையும் எடுப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள், இந்த வாரத்தில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பண நெருக்கடி காரணமாக உங்கள் சில வேலைகள் பாதியில் நிற்கும் வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தேவைக்கு அதிகமாக செலவு செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கத்தில் சில பெரிய சவாலை சந்திப்பீர்கள். ஆனால் இந்த காலம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும், மேலும் உயர் அதிகாரிகளுடனான உங்கள் ஒருங்கிணைப்பும் மேம்படும். வெளிநாடு செல்லும் கனவு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வேலையில் சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் நடத்தை மற்றும் பேச்சில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். பண நிலை நன்றாக இருக்கும். சொத்து தொடர்பான ஆதாயங்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இதய நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் பழைய விஷயங்களை நினைவில் வைத்துக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எனவே புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுங்கள். வேலையில் இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணிச்சுமை ஓரளவுக்கு இருக்கும். தொழிலதிபருக்கு நிதி திட்டங்களில் மாற்றம் ஏற்படும். வார இறுதியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். தாயாரின் உடல்நிலை மேம்படும். சகோதர சகோதரிகளுடனான உறவு நன்றாக இருக்கும். உங்கள் துணையுடன் உங்கள் உறவை நன்றாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் தினமும் பழங்களுடன் பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் வீட்டின் சூழல் இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் வரலாம். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் முக்கியமானதாக இருக்கும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், கடந்த வாரத்தை விட இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு, அலுவலகத்தில் பெரிய திட்டங்களில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நன்றாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நாள்: புதன்
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் பரபரப்பாக இருக்கும். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு சுமாராக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இது தவிர, எந்த ஒரு நிதி பரிவர்த்தனையையும் சிந்திக்காமல் செய்யாதீர்கள். வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இடைவெளி குறையும். உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் மிகவும் கவனக்குறைவாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வாரத்தில் வேலை சம்பந்தமான நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த வாரத்தில் பெரிய நிதி பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். வீட்டின் சூழ்நிலை சாதகமாக இருக்கும், மேலும் உங்கள் அன்புக்குரியவர்களுடனான உங்கள் உறவும் வலுவாக இருக்கும். இந்த வார தொடக்கத்தில் பெரிய செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த, உங்கள் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை