சனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..

இந்த வாரம் கிரக மாற்றங்களின்படி சனி பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நல்லதும் கெட்டதுமான பலன்களைத் தரப்போகிறது. பணவரவு யாருக்கு கிடைக்கும், வேலை மாற்றம் ஏற்படுமா?

இந்த வாரம் கிரக மாற்றங்களின்படி சனி பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நல்லதும் கெட்டதுமான பலன்களைத் தரப்போகிறது. பணவரவு யாருக்கு கிடைக்கும், வேலை மாற்றம் ஏற்படுமா? சொந்த பந்தங்களுடன் சேர்ந்து உல்லாச பயணம் செல்ல வாய்ப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறதா? இதோ இந்த வார ராசிபலன்கள் உங்கள் கேள்விகளுக்கான பதில்களைத் தரப்போகிறது. இந்த வாரம் சனிபகவான் பெயர்ச்சி அடைந்து மகரம் ராசிக்கு மாறப்போகிறார். இந்த சனிப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறது. யாருக்கு என்ன பலன் கிடைக்கும் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இந்த வாரம் உங்களுக்கு ரொம்ப நார்மலான வாரம் தான். இருந்தாலும் சந்தோஷமாக ஃபீல் பண்ணுவீங்க. உங்க ஃபேமிலி மெம்பர்ஸும் உங்களுக்கு பக்க பலமா இருப்பாங்க. இந்த வாரம் உங்க ஒய்ஃபுக்கு இனிமையான வாரமா இருக்கக்கூடும். குடும்பத்துல சின்ன சின்னதா வாக்குவாதம் இருந்தாலும், அதைப்பத்தி கவலைப்படாம சந்தோஷமா இருப்பீங்க. லவ் பண்றவங்க லவ்வர் கூட ரொம்ப நேரம் செலவழிக்க வாய்ப்பு இருக்கு. அதோடு எதிர்பாராத ஒரு திருப்பமும் ஏற்படலாம். பிசினஸ் பண்றவங்களுக்கு இந்த வாரம் நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாம இருக்குறவங்க வெளியூர் பிரயாணம் செய்ய வாய்ப்பிருக்கு. பண வரவு இந்த வாரம் கொஞ்சம் மந்தமாவே இருக்கும். அதனால அநாவசிய செலவு எதையும் செய்யாதீங்க. ஹெல்த் கண்டிஷனும் இந்த வாரம் நார்மலாவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக்கிழமை

ரிஷபம்

ரிஷபம்

லவ் பண்றவங்க இந்த வாரம் ரொம்ப கவனமா இருக்க வேண்டியது அவசியம். லவ்வர் கிட்ட ரொம்ப அன்பா அந்நியோன்யமா இருந்தா தான் உறவு வலுப்படும். மேரேஜ் ஆனவங்க இந்த வாரம் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். ஒய்ஃப் கூட ரொம்ப நேரம் செலவழிக்குறதுனால அவங்களும் சந்தோஷமா ஃபீல் பண்ணுவாங்க. அதோட அவங்களுக்கு ஒரு கிஃப்ட் வாங்கிக் கொடுத்து சந்தோஷத்துல திக்குமுக்காட வைக்கலாம். வேலை பாக்குறவங்களுக்கு இந்த வாரம் எல்லா வேலையும் ரொம்ப சுலபமா முடியும். பிசினஸ் பண்றவங்களுக்கு இந்த வாரம் ரொம்ப முக்கியமான வாரமா அமையும். உங்க பிசினஸ் ப்ளானை மாத்துறதுனால, எதிர்காலத்துல பிசினஸ் நல்ல நிலைமைக்கு வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. இந்த வாரம் பண விஷயத்துல ரொம்ப கவனமா இருக்குறது நல்லது. யாரையுமே கண் மூடித்தனமா நம்பிடாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கைப்ளு

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நாள் : திங்கள் கிழமை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்கார்கள் இந்த வாரம் எடுக்குற அனைத்து முயற்சிகளும் ஜெயிக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. இந்த வாரம் எக்ஸ்ட்ரா வருமானம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதுனால குடும்பத்துக்கும் தாராளமா செலவு செய்வீங்க. போன வாரம் வரைக்கும் வேலை விஷயத்துல ரொம்ப பிசியா இருந்தீங்கன்னா, இந்த வாரம் ரொம்ப ஜாலியா ஃபீல் பண்ணுவீங்க. உங்க வேலையை பாத்து உங்க சீனியர் சந்தோஷப்பட்டு உங்களுக்கு ப்ரமோஷன், இன்க்ரீமெண்ட் தர்றதுக்கும் வாய்ப்பிருக்கு. குடும்பத்துல இந்த வாரம் சின்னதா மனஸ்தாபம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. இருந்தாலும் உங்க கோபத்தை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கிறது நல்லது. சாப்பாட்டு விஷயத்துல கொஞ்சம் கவனமா இருக்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 33

அதிர்ஷ்ட நாள் : சனிக் கிழமை

கடகம்

கடகம்

இந்த வாரம் முக்கியமான விஷயத்தை முடிக்க முடியாம இழுபறி ஏற்படலாம். மத்தவங்களை நம்பாம நீங்களே நேரடியா அந்த விஷயத்தை முடிக்கிறது நல்லது. அதே சமயத்துல டென்சன் ஆகாம காரியத்துல கண்ணா இருந்தா நல்லது. இல்லேன்னா சிக்கல் தான் ஜாஸ்தியாகும். வேலை விஷயத்துல கவனமா இருந்து ஹெல்த் கண்டிஷன்ல கோட்டை விட்டுடாதீங்க. அலட்சியமா இருந்தா பின்னாடி பெரிய பிரச்சனையில கொண்டுபோய் விட்டுடும், கவனமா இருந்துக்கோங்க. டைம் பாஸுக்கு பணத்தை செலவு பண்ணுனீங்கன்னா, பின்னாடி பணச்சிக்கல்ல மாட்டி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அது உங்க லைஃபையே மாத்தக்கூடும், கவனமா இருந்துக்கோங்க.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

சிம்மம்

சிம்மம்

இந்த வாரம் வேலை விஷயத்துல ரொம்பவும் அவசரப்படாம பொறுமையா, நிதானமா இருந்து வேலையை முடிக்க பாருங்க. அதனால அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். எந்த சிக்கலும் தற்காலிகம் தான்கிறதை மனசல நினைச்சிக்கிட்டு உங்க வேலையில கண்ணும் கருத்துமா இருக்க பாருங்க. பண விஷயத்தை பொறுத்த வரை இந்த வாரம் கொஞ்சம் மந்தமா தான் இருக்கும். ஆனாலும் வரம்புக்கு மீறி செலவு வரிசை கட்டி நிக்கும். அதனால இன்வெஸ்ட் பண்ற ஐடியாவை கொஞ்சம் ஒதுக்கி வைச்சிடுங்க. குடும்பத்துலயும் இந்த வாரம் அமைதி தவழும். அவங்களும் உங்களுக்கு பக்க பலமா இருப்பாங்க. இந்த வாரம் ஹெல்த் கண்டிஷன் கொஞ்சம் மந்தமாவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நாள் : ஞாயிற்று கிழமை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரங்களுக்கு இந்த வாரம் அமோகமா இருக்கும். பிசினஸ் விஷயத்துல நல்ல நியாயமான முடிவு கிடைக்கும். நல்ல லாபம் கிடைச்சி, பிசினஸ்ல முன்னேறுறதுக்கு அருமையான வாய்ப்பிருக்கு. பிசினஸை டெவலப் பண்றதுக்கு புதிய கூட்டாளியை சேக்குறதுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். வேலை பாக்குறவங்க இந்த வாரம் எதிர்பார்த்த ப்ரமோஷன் கிடைக்க வாய்ப்பிருக்குது. ஃபேமிலி மேட்டரை பொருத்த வரை, இந்த வாரம் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்படலாம். அதனால கொஞ்சம் அமைதியா இருக்குறது எல்லாருக்குமே நல்லது. பண வரவும் இந்த வாரம் அமோகமா இருக்கக்கூடும். இந்த வாரம் ஹெல்த் கண்டிஷன் நல்லா இருந்தாலும் அசட்டையா இருந்துடாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக்கிழமை

துலாம்

துலாம்

துலா ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு பணவரவு அமோகமா இருக்கும், அதனால பணச்சிக்கல் ஏற்படாது. கூடவே எதிர்காலத்துக்காக கொஞ்சம் இண்வெஸ்ட் பண்றதும் நல்லது. அதோட, குடும்பத்துக்கு தேவையான செலவையும் செஞ்சிக்கலாம். இந்த நேரத்துல யாருக்கும் கடன் கொடுக்காதீங்க. அப்படி கடன் கொடுத்தீங்கன்னா, அது யானை வாயில போன கரும்பு மாதிரி, திரும்ப வராது, கவனமா இருங்க. நீங்க ஒண்டிக்கட்டையா இருந்தா, காதல்ல சிக்குறதுக்கும் வாய்ப்பிருக்கு. இருந்தாலும் ரொம்பவும் அவசரப்படாம யோசிச்சி முடிவெடுங்க. ஆஃபீஸ் வேலை இந்த வாரம் நார்மலாவே இருக்கும். பிசினஸ் பண்றவங்க இந்த வாரம் மார்க்கெட் நிலைமையை நல்லா கவனிச்சி வியாபாரம் செஞ்சி லாபம் சம்பாதிக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. மேரேஜ் லைஃப் சுமூகமாவே நகரும். ஒய்ஃபும் உங்களை புரிஞ்சி நடந்துக்குவாங்க. இந்த வாரம் உங்க ஹெல்த் கண்டிஷனும் நார்மலாவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை

விருச்சிகம்

விருச்சிகம்

ரொம்ப நாளாவே குடைச்சல் கொடுத்திட்டு இருந்த பிரச்சனை இந்த வாரம் முடிவுக்கு வந்துடும். அதனால நீங்க ரொம்ப ரிலாக்ஸா ஃபீல் பண்றதோட கோவிலுக்கும் போயி கும்பிடு போட்டுட்டு வருவீங்க. உங்க பசங்க சைடுல இருந்து படிப்பு சம்பந்தமா நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். வீட்டு சூழ்நிலையும் அமைதியாவே இருக்கும். ரொம்ப நாளைக்கு அப்புறமா கூடப்பிறந்தவங்க கூட மனசு விட்டு பேசுறதுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதனால வீட்டு பிரச்சனையிலும் கவனம் செலுத்துறதுக்கு வாய்ப்பிருக்கு. ஒய்ஃப் கூட அந்நியோன்யமா இருப்பீங்க. காதலர்கள் மீட் பண்ணி பேசுறதுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். பணப் பிரச்சனை இந்த வாரம் தலை தூக்காது. பாக்கெட்டுல இருக்குற பணத்தை வச்சி செலவழிப்பீங்க. இந்த வாரம் உங்க ஹெல்த் கண்டிஷனும் நார்மலா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நாள் : வியாழக் கிழமை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரங்களே, ரொம்ப நாளா உடம்புக்க முடியாம இருந்த உங்க தாயாரின் உடல் நிலை சீரடையும். அதனால நீங்க நிம்மதிப் பெருமூச்சு விடுவீங்க. கல்யாணம் ஆகதவரா இருந்தா, இந்த வாரம் கல்யாண பேச்சு வார்த்தை நல்ல விதமா முடியும். கல்யாணம் ஆனவரா இருந்தா, ஒய்ஃப் கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா நடந்துக்க பாருங்க. பண விஷயத்தைப் பொருத்த வரை இந்த வாரம் அதிர்ஷ்டவாய்ப்பு காத்திட்டு இருக்கு. பிசினஸ் பண்றவரா இருந்தா கொழுத்த லாபம் கிடைக்கும். எந்த ஒரு பொறுப்பையும் ஏத்துக்குறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்க நாலு தடவை யோசிச்சி முடிவெடுங்க. அப்படி இல்லேன்னா உங்க பேர் கெட்டுப்போறதுக்கு வாய்ப்பிருக்கு. இந்த வாரம் உங்க ஹெல்த் கண்டிஷன் கொஞ்சம் மந்தமாவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நாள் : சனிக் கிழமை

மகரம்

மகரம்

இந்த வாரம் லவ் பண்றவங்களுக்கு சிக்கல் காத்திட்டு இருக்கு. ரெண்டு பேரும் சண்டை போட்டு பிரியுறதுக்கும் சந்தர்ப்பம் இருக்குங்குறதுனால, சந்தேகப்பட்டு எந்த வார்த்தையையும் விட்டுட்டு அவஸ்தைப்படாதீங்க. எதுவா இருந்தாலும் நிதானமா யோசிச்சி பேசி பிரச்சனையை முடிக்க பாருங்க. மேரேஸ் லைஃப்ல ஒய்ஃப் கூட பேசும் போது கவனா பேசப்பாருங்க. இல்லேன்னா சேதாரம் உங்களுக்கு தான். இந்த சந்தர்ப்பத்துல உங்க கூடப்பிறந்தவங்க உங்களுக்கு உதவுறதுக்கு முன்னாடி வந்து நிப்பாங்க. இந்த வாரம் உங்க பசங்க கூட மனசு விட்டு பேசுவீங்க. ஆஃபீஸ் வேலை இந்த வாரம் கொஞ்சம் அதிகமா இருக்கும். இந்த வாரம் பணப்பிரச்சனையைப் பத்தி அதிகமா கவலைப்படுவீங்க. அதனால நிதானமா யோசிச்சி திட்டம்போட்டு சேமிக்க பாருங்க. பிசினஸ் பண்றவங்க இந்த வாரம் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்க பாருங்க. எந்த டாக்குமெண்ட்லயும் படிச்சி பாக்காம கையெழுத்து போட்டுடாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை

கும்பம்

கும்பம்

இந்த வாரம் ஆஃபீஸ் வேலை உங்க தலைக்கு மேல வந்து குவிஞ்சிருக்கும். அதனால சாப்பிடக்கூட டைம் இல்லாம வேலை பாப்பீங்க. இந்த கடின உழைப்பு தான் உங்களை எதிர்கால முன்னேற்றத்துக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கும். பிசினஸ் பண்றவரா இருந்தா, நிதானமா யோசிச்சி முடிவெடுத்து வியாபாரம் செஞ்சா பிசினஸ் டெவலப் ஆகும். நல்ல லாபமும் கிடைக்கும். வீட்டு நிலைமை ரொம்பவும் அமைதியா இருக்கும். வீட்டுல இருக்குற எல்லோரும் உங்க கிட்ட அந்நியோன்யமா இருப்பாங்க. கூடப்பிறந்தவங்க கூட இருந்து வந்த மனக்கசப்பு இந்த வாரம் சரியாகிடும். மேரேஜ் லைஃப் இந்த வாரம் சந்தோஷமா நகரும். ஒய்ஃப் கூட ஒரு சுப நிகழ்ச்சிக்கு போய்ட்டு வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. லவ் பண்றவங்க இந்த வாரம் லவ்வருக்கு ஒரு கிஃப்ட் வாங்கி கொடுத்து அவங்களை திக்குமுக்காட வைப்பீங்க. பண வரவும் இந்த வாரம் திருப்திகரமா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நாள் : வியாழக் கிழமை

மீனம்

மீனம்

இந்த வாரம் தனிப்பட்ட வாழ்க்கையில சில பிரச்சனைங்க தலை தூக்கலாம். உங்களுக்கு பிரியமானவங்க கூட சில கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பிருக்குங்குறதுனால, கவனமா புத்திசாலித்தனமா நடந்துகிட்டு, அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டு சமாதானமாயிடுங்க. கையோட உங்க கோபத்தையும் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்குறது நல்லது. லவ் பண்றவங்களா இருந்தா லவ்வரோட அப்ரோச் உங்களுக்கு புரியாத புதிரா இருக்கும். அவங்க உங்களை அவாய்ட் பண்றதா நினைச்சி குழம்பி போயிடுவீங்க. மேரேஜ் ஆனவரா இருந்தா, ஒய்ஃப் சப்போர்ட் உங்களுக்கு பக்கபலமா இருக்கும். பண வரவு இந்த வாரம் நார்மலா இருக்கும். எதிர்காலத்துக்கு உதவுற மாதிரி இண்வெஸ்ட்மெண்ட் பண்றதைப் பத்தி யோசிக்க ஆரம்பிப்பீங்க. இந்த வாரம் மனசளவுல ரொம்பவே டல்லாவே பண்றதோட ஹெல்த் கண்டிஷனும் கொஞ்சம் டல்லாவே இருக்கும். அதனால டாக்டர்கிட்ட போய் காட்டி செக்கப் செஞ்சிக்கிறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நாள் : ஞாயிற்று கிழமை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, January 19, 2020, 17:17 [IST]
Desktop Bottom Promotion