For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று புதன்கிழமை பிரதோஷம்: புத்திரபேறு கிடைக்க சிவன் நந்திக்கு அபிஷேகம் செய்யுங்க

இன்று புதன்கிழமை பிரதோஷம். இன்றைய தினம் விரதம் இருந்து மாலையில் பிரதோஷ வேலையில் சிவன் நந்திக்கு அபிஷேக பொருட்களை வாங்கிக்கொடுத்து தரிசனம் செய்தால் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். கல்விச் செல்வம் உயரும்

|

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அப்பேர்ப்பட்ட புதன்கிழமை நாளில் வருகிற பிரதோஷத்தன்று சிவ தரிசனம் நன்மை தரக்கூடியது. இன்று மாலையில் சிவ ஆலயம் சென்று அபிஷேகத்துக்கு நம்மாலான பொருட்களை வழங்கி இறைவனை தரிசிக்க வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும். புத்திர பாக்கியம் கிடைக்கும். இளநீரைக் கொண்டு அபிஷேகம் செய்தால் நல்ல புத்திசாலியான மக்கள் பேறு உண்டாகும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடந்தேறும் என்பது ஐதீகம்.

சுக்ல பிரதோஷம், கிருஷ்ண பிரதோஷம், சனிப் பிரதோஷம் என்று ஒவ்வொரு வாரத்திற்கும் ஒவ்வொரு பிரதோஷம் இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை வரும் பிரதோஷம் ஆதிப் பிரதோஷம் என்றும், திங்கட்கிழமை வரும் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம் என்றும், செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷம் மங்கள வாரப் பிரதோஷம் என்றும்,

Wednesday Pradosham Viratham Benefits

புதன்கிழமை வரும் பிரதோஷம் புதவாரப் பிரதோஷம் என்றும், வியாழக்கிழமை வரும் பிரதோஷம் குருவாரப் பிரதோஷம் என்றும், வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷம் சுக்ர வாரப் பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.

இது எல்லாவற்றையும் விட சிறப்பு வாய்ந்தது சனிக் கிழமையில் வரும் பிரதோஷம்தான். இந்த பிரதோஷத்தைத்தான் மகா பிரதோஷம் என்று அழைக்கிறோம். சனிதான் அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் என்று அனைவரும் நினைக்கிறார்கள். எனவே அந்தக் கிழமையில் பிரதோஷம் வந்துவிட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் விலகும் என்பது நம்பிக்கை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
20 வகை பிரதோஷங்கள்

20 வகை பிரதோஷங்கள்

தினசரி பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், நட்சத்திரப் பிரதோஷம், பூரண பிரதோஷம், திவ்யப் பிரதோஷம், தீபப் பிரதோஷம், அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம், மகா பிரதோஷம், உத்தம மகா பிரதோஷம், ஏகாட்சர பிரதோஷம், அர்த்தநாரி பிரதோஷம், திரிகரண பிரதோஷம், பிரம்மப் பிரதோஷம், அட்சரப் பிரதோஷம், கந்தப் பிரதோஷம், சட்ஜ பிரபா பிரதோஷம், அஷ்ட திக் பிரதோஷம், நவக்கிரகப் பிரதோஷம், துத்தப் பிரதோஷம் என 20 வகை பிரதோஷங்கள் உள்ளன.

MOST READ: பிள்ளையாருக்கு ஏன் தோப்புக்கரணம் போடறோம்றங்கிற ரகசியம் தெரியுமா? இப்போ தெரிஞ்சிக்கங்க

தினசரி பிரதோஷம்

தினசரி பிரதோஷம்

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம். நித்தியப் பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ, அவர்களுக்கு முக்தி நிச்சயம் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.

நட்சத்திரப் பிரதோஷம்

நட்சத்திரப் பிரதோஷம்

பிரதோஷ திதியாகிய திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை வழிபடுவது நட்சத்திரப் பிரதோஷம் ஆகும். இந்த நாளில் மாலை வேளையான பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

மாதப் பிரதோஷம்

மாதப் பிரதோஷம்

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ண பட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் திரயோதசி திதியே ‘மாதப் பிரதோஷம்' ஆகும். இந்தத் திதியின் போது மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.

பட்சப் பிரதோஷம்

பட்சப் பிரதோஷம்

அமாவாசைக்குப் பிறகான, சுக்ல பட்சம் என்ற வளர்பிறை காலத்தில் 13-வது திதியாக வருவது திரயோதசி திதி. இந்தத் திதியே ‘பட்சப் பிரதோஷம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திதியின் மாலை நேரத்தில் பட்சி லிங்க வழிபாடு (பறவையோடு சம்பந்தப்பட்ட லிங்கம்) செய்வது நல்லது. அதாவது மயிலாப்பூர், மயிலாடுதுறை ஆகிய திருத்தலங்களில் உள்ள சிவலிங்கத்தை வழிபட வேண்டும்.

MOST READ: கீரை நிறைய சாப்பிடறவங்களுக்கு மாரடைப்பு வருமா வராதா? ஆராய்ச்சி என்ன சொ்லலுது?...

தீபப் பிரதோஷம்

தீபப் பிரதோஷம்

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து வழிபடுவதற்கு தீபப் பிரதோஷம் என்று பெயர். இந்த பிரதோஷ வழிபாட்டை செய்வதன் மூலம் சொந்த வீடு அமையும்.

மகா பிரதோஷம்

மகா பிரதோஷம்

ஈசன் ஆலகால விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்த பிரதோஷம் மகா பிரதோஷம் எனப்படுகிறது. அன்றைய தினம் எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது சிறப்பு.

அபயப் பிரதோஷம்

அபயப் பிரதோஷம்

வானத்தில் வ வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டம், சப்தரிஷி மண்டலம் ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதி யில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசிப்பதற்கு அபயப் பிரதோஷம் அல்லது சப்தரிஷி பிரதோஷம் என்று பெயர்.

திவ்யப் பிரதோஷம்

திவ்யப் பிரதோஷம்

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது திவ்யப் பிரதோஷம் ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ் வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால், பூர்வ ஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

உத்தம மகா பிரதோஷம்

உத்தம மகா பிரதோஷம்

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங் களின் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. இது மிகவும் சிறப்பும், கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

MOST READ: மோடியும் வனமகனும் - வைரலாகும் இந்த வனமகன் யார்? தெரிஞ்சிக்கணுமா?

பூரண பிரதோஷம்

பூரண பிரதோஷம்

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது சுயம்பு லிங்கத்தைத் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

கந்தப் பிரதோஷம்

கந்தப் பிரதோஷம்

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப்பெருமான் சூரசம்ஹாரத் துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு என்று சொல்லப்படுகிறது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிடைக்கும்.

ஏகாட்சர பிரதோஷம்

ஏகாட்சர பிரதோஷம்

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை, ஏகாட்சர பிரதோஷம் என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்ன தானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

அர்த்தநாரி பிரதோஷம்

அர்த்தநாரி பிரதோஷம்

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால், அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாட்களில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைபட்ட திருமணம் இனிதே நடந்தேறும். மேலும் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர்வார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

திரிகரண பிரதோஷம்

திரிகரண பிரதோஷம்

வருடத்துக்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால், அது திரிகரண பிரதோஷம் எனப்படும். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமி களுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

பிரம்ம பிரதோஷம்

பிரம்ம பிரதோஷம்

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அதற்கு பிரம்மப் பிரதோஷம் என்று பெயர். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

MOST READ: அட நம்ம ஜெனீலியாவா இது?... அந்த அழகோட ரகசியம் இதுதானாமே!

அட்சரப் பிரதோஷம்

அட்சரப் பிரதோஷம்

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம் ஆகும். தாருகா வனத்து ரிஷிகள் நான் என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

சட்ஜ பிரபா பிரதோஷம்

சட்ஜ பிரபா பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, சட்ஜ பிரபா பிரதோஷம். தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தாராம். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

அஷ்டதிக் பிரதோஷம்

அஷ்டதிக் பிரதோஷம்

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷங்கள் வந்தால் அதனை அஷ்டதிக் பிரதோஷம் என்கிறார்கள். இந்த எட்டு மகா பிரதோஷங்களையும் முறையாக கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நமக்கு நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

நவக்கிரக பிரதோஷம்

நவக்கிரக பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷங்களில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

MOST READ: கணவன் மனைவி ஒற்றுமை ஏற்பட... செல்வம் பெருக இதை முக்கியமா செய்யுங்க

துத்தப் பிரதோஷம்

துத்தப் பிரதோஷம்

இது அரிதிலும் அரிதான பிரதோஷ வழிபாடு இது வாகும். ஒரு வருடத்தில் பத்து மகாபிரதோஷம் வருவதைத் தான் துத்தப் பிரதோஷம் இந்த பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync
English summary

Wednesday Pradosham Viratham Benefits

Pradosham’s numerous benefits can be enjoyed regardless of the day it falls on Wednesday budha Vaara Pradosh helps immensely in enhancing knowledge and education.
Story first published: Wednesday, August 28, 2019, 11:35 [IST]
Desktop Bottom Promotion