Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
கும்ப ராசியில் சனியும் சுக்கிரனும் இணைந்திருப்பதோடு, கேதுவின் பார்வையும் விழுகிறது. இதன் காரணமாக விபரீத ராஜயோகம் உருவாகிறது.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது அதனால் சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்கள் 12 ராசிகளிலுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜனவரி 17 ஆம் தேதி சனி கும்ப ராசிக்கு சென்றார், அதன் பின் ஜனவரி 22 ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசிக்கு சென்றார். இதனால் கும்ப ராசியில் சனியும் சுக்கிரனும் இணைந்திருப்பதோடு, கேதுவின் பார்வையும் விழுகிறது. இதன் காரணமாக விபரீத ராஜயோகம் உருவாகிறது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தினால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதோடு, தொழிலில் முன்னேற்றத்தையும் காண்பார்கள். இப்போது அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதைப் பாருங்கள்.

தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகியிருப்பதால், வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகத்தை செய்யும் தனுசு ராசிக்காரர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இந்த யோக காலத்தில் உங்கள் கடன்கள் அனைத்தையும் அடைத்துவிடுவீர்கள். ஒருவேளை கடன் வாங்க நினைத்தால், அது எளிதில் கிடைக்கும். முதலீடுகள் செய்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகியிருப்பதால், மீன ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். பிப்ரவரி 15 வரை இந்த ராசிக்காரர்கள் எந்த வேலையை செய்தாலும் அதில் வெற்றி காண்பார்கள். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், அதை பிப்ரவரி 15-க்குள் செய்தால் அந்த தொழிலில் வெற்றிகரமாக ஓடும். மேலும் வணிகர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வாகனம் மற்றும் சொத்து வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகியிருப்பதால், இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நற்பலன்களைப் பெறுவார்கள். அதே வேளையில் உங்களைத் தேடி பிணம் வரும். ஒருவேளை உங்கள் பணம் சிக்கியிருந்தால், அது இந்த காலத்தில் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வரும். வணிகர்கள் இந்த யோக காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் இந்த விபரீத ராஜயோகம் உருவாகியிருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 15 வரை லாபகரமான காலமாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்கு வலுவாக இருக்கும். மேலும் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் அற்புதமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புக்கள் உங்களைத் தேடி வரும். வணிகர்களுக்கு இக்காலம் லாபத்தை அள்ளித் தரும் காலமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
