Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
குரு வக்ர நிவர்த்தியால் உருவாகும் விபரீத ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகுது...
குரு நவம்பர் 24 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். அப்படி வக்ர நிவர்த்தி அடையும் போது சக்தி வாய்ந்த எதிர் ராஜயோகமான விபரீத ராஜயோகம் உருவாகிறது.
கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றுவது வழக்கம். அதில் சில கிரகங்கள் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் பல முக்கிய கிரகங்கள் தற்போது வக்ர நிலையில் பயணித்து வருகின்றன. கிரகங்கள் வக்ர நிலையில் பயணிக்கும் போது, அதன் வேகம் குறைவாக இருப்பதோடு, அதனால் பெறும் நற்பலன்களும் குறையும். இந்நிலையில் சுப கிரகமான குரு தற்போது வக்ர நிலையில் தனது சொந்த ராசியான மீன ராசியில் பயணித்து வருகிறார்.

நவகிரகங்களில் குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருடம் ஆகும். அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குரு தனது சொந்த ராசியில் வக்ர நிலையில் உள்ளார். இந்த வக்ர நிலையானது நவம்பர் 24 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. அதாவது குரு நவம்பர் 24 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். அப்படி வக்ர நிவர்த்தி அடையும் போது சக்தி வாய்ந்த எதிர் ராஜயோகமான விபரீத ராஜயோகம் உருவாகிறது. இப்போது குரு வக்ர நிவர்த்தியால் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
விபரீத ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். ஏனெனில் குரு வக்ர நிவர்த்தியானது ரிஷப ராசியில் 11 ஆவது வீட்டில் நடக்கிறது. இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். எனவே இக்காலத்தில் வருமானத்தில் நல்ல அதிகரிப்பு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபம் தரும் ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலை வலுவாகும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பழைய நோயிலிருந்து விடுபடுவார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களும் விபரீத ராஜயோகத்தால் தங்கள் துறையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ஏனெனில் குரு மிதுன ராசியில் 10 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இது வேலை, வணிகம் மற்றும் பணியிடத்தின் வீடாகும். ஆகவே இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளைப் பெறக்கூடும். அதாவது பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் புதிய வணிக உறவுகள் உருவாவதோடு, வணிகத்தை விரிவுபடுத்துவீர்கள்.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் விபரீத ராஜயோகம் உருவாகிறது. இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்தின் வீடாகும். எனவே இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதுவரை தடைபட்டு வந்த வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். வணிகம் தொடர்பான பயணங்களுக்கு வாய்ப்புள்ளது. இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகர்கள் நல்ல லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் நல்ல வெற்றி பெறுவார்கள். மொத்தத்தில் இக்காலம் மங்களகரமானதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications