சுக்கிர பெயர்ச்சியால் மார்ச் 12 வரை இந்த ராசிக்காரங்களுக்கு செம சூப்பரா இருக்கப்போகுது...

சுக்கிரன் 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறினார். இந்த மீன ராசியில் சுக்கிரன் 2023 மார்ச் 12 ஆம் தேதி வரை இருப்பார். சுக்கிரனின் ராசி மாற்றமானது 12 ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் ஆடம்பரம், செல்வம், செழிப்பு, புகழ், காதல், அழகு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். ஒருவருக்கு சுக்கிரனின் அருள் இருந்தால், அவர் நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை பெறுவதோடு, காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

Venus Transit in Pisces On February 2023: Effects on 12 Zodiac Signs In Tamil

இந்த சுக்கிரன் 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறினார். இந்த மீன ராசியில் சுக்கிரன் 2023 மார்ச் 12 ஆம் தேதி வரை இருப்பார். சுக்கிரனின் ராசி மாற்றமானது 12 ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் குரு ஆளும் மீன ராசிக்கு சுக்கிரன் சென்றுள்ளதால், அதன் தாக்கம் நிச்சயம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இப்போது சுக்கிர பெயர்ச்சியால் மார்ச் 12 வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாமல் செலவு செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் நிதி பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் உங்களின் ஆசைகளை பூர்த்தி செய்ய அதிகம் பணம் செலவழிப்பீர்கள். உங்கள் எதிரிகளை இக்காலத்தில் வெற்றி காண்பீர்கள். இக்காலத்தில் தொழில் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அது நிறைவேறலாம். காதல் வாழ்க்கை றிப்பாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதியவற்றை சிறப்பாக கற்றுக் கொள்வார்கள். பணிபுரிபவர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு இது நல்ல காலமாக இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் வேலையில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் அதிகம் தற்பெருமை கொள்வதோடு, அதிக திமிருடன் இருப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் வேலையில் கவனம் செலுத்தினால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டை அலங்கரிப்பதற்காக நிறைய செலவழிப்பீர்கள். காதல் வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கலாம். திருமணமாகாதவர்கள், தன்னுடன் வேலை புரிபவரின் மேல் காதலில் விழ வாய்ப்புள்ளது.

கடகம்

கடகம்

கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் உங்களின் பிரச்சனைகள் தீரும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். பண பிரச்சனையால் நிலுவையில் இருந்த பணிகள் இக்காலத்தில் சிறப்பாக முடிக்கப்படும். இக்காலம் உங்களுக்கு அதிர்ஷ்டமான காலமாகும். இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடனான உறவு மேம்படும். நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவழிப்பீர்கள். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்ப உறவுகளுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வர முயற்சித்து, அதில் வெற்றி காண்பீர்கள். வேலையில் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். ஆனால் பிரச்சனைகள் ஏதும் இருக்காது. இந்த காலம் உங்கள் ஆசைகளை நிறைவேற்ற உதவியாக இருக்கும்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் பெயரில் தொழில் தொடங்க முயற்சித்தால், வெற்றி காணலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் சுக்கிரனின் அருளால் சிறப்பாக இருக்கும். இருப்பினும் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். பணியிடத்தில் சூழல் சாதகமாக இருக்கும். வணிகர்களுக்கு சற்று மந்தமாக இருக்கும். இருப்பினும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்திற்கு சற்று கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் திருமணமாகாதவர்களுக்கு வாழ்க்கைத் துணை கிடைக்கலாம். காதலானது திருமணம் வரை செல்ல வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். உங்கள் வருமானம் மேம்படும். மாணவர்கள் தேர்வில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் உங்களின் புகழும், வசதிகளும் பெருகும். புதிய வாகனம் மற்றும் நிலம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உங்கள் தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். இரண்டிற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த முயற்சிப்பீர்கள்.

மகரம்

மகரம்

மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். நிறைய பணத்தை செலவிடுவீர்கள். பயணங்களை அதிகம் செய்ய வேண்டியிருக்கும். பணியிடத்தில் உங்கள் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இது பொன்னான நேரம். வணிகத்தில் நல்ல வளர்ச்சியை காண்பார்கள். இக்காலத்தில் உங்கள் உடன்பிறந்தவர்களும் நல்ல பலனைப் பெறுவார்கள் மற்றும் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் விருந்துகள், சுப நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ள வேண்டியிருகும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். உணவுகளால் ஆரோக்கிய பிரச்சனைகள் எழுவதற்கான வாய்ப்புள்ளது. பல்வலி அல்லது வாய் புண்களால் அவதிப்படலாம். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சொத்துக்களை விற்பதால் நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் வங்கி இருப்பு இக்காலத்தில் அதிகரிக்கும்.

மீனம்

மீனம்

மீன ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் உங்களின் நடத்தையில் மாற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் பேச்சால் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பீர்கள். இக்காலத்தில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உங்கள் துணையுடனான உறவு வலுபெறும். வணிகர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். புதிய தொழில் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் நன்றாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, February 16, 2023, 11:50 [IST]
Desktop Bottom Promotion