Latest Updates
-
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க.. -
தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் ராசிகள் என்ன?ராசிப்படி அவர்கள் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார்கள் தெரியுமா -
Nombu Kanji Benefits: நோன்பு கஞ்சி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் திருஷ்டி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
இந்த 4 ராசி பெண்கள் தங்கத்துக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
துலாம் செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரருக்கு யோகம் அடிக்கப் போகுது தெரியுமா?
ஜோதிடத்தின் படி, அழகு, படைப்பாற்றல், ரொமான்ஸ் மற்றும் நம்பத்தகுந்த சக்திகளைக் குறிக்கும் சுக்கிரன் கன்னி ராசியில் பலவீனமான நிலையில் இருந்து 2020 நவம்பர் 17 அன்று துலாம் ராசிக்கு செல்கிறார்.
நவகிரகங்களில் சுபகிரகமாக கருதப்படுபவர் சுக்கிரன் ஆவார். இல்லற வாழ்க்கை சந்தோஷமாகவும், இனிமையாகவும் அமைய வேண்டுமானால் மற்றும் புகழுடன் இருக்க வேண்டுமானால், ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல வலிமையான நிலையில் இருக்க வேண்டும். சொல்லப்போனால் சுகங்களை தாராளமாக அள்ளித் தருபவர் தான் சுக்கிரன்.

ஜோதிடத்தின் படி, அழகு, படைப்பாற்றல், ரொமான்ஸ் மற்றும் நம்பத்தகுந்த சக்திகளைக் குறிக்கும் சுக்கிரன் கன்னி ராசியில் பலவீனமான நிலையில் இருந்து 2020 நவம்பர் 17 அன்று அதன் மூல திரிகோண ராசியான துலாம் ராசிக்கு செல்கிறார். இந்த ராசியில் சுக்கிரன் 2020 டிசம்பர் 11 ஆம் தேதி வரை இருப்பார். சுக்கிரன் தனது சொந்த ராசிக்கு செல்வதால், நல்ல முடிவுகளையே வழங்குவார்.
இப்போது துலாம் ராசிக்கு செல்லும் சுக்கிரனால், எந்தெந்த ராசிக்காரர்கள் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியில் சுக்கிரன் 7 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது உங்களுக்கு சாதகமான முடிவுகளையே வழங்கும். உங்களின் திருமண வாழ்க்கையில் அற்புதமான மாற்றத்தைக் காண்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணத்திற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். இந்த காலம் உங்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நல்ல ரிலாக்ஸை உணர வைக்கும். உங்களின் தொழில் வளர்ச்சிக்கு பயனுள்ளவாறு புதிய இணைப்புக்கள் சமூகத்தில் தோன்றக்கூடும். ஒரு ரொமான்டிக்கான கேன்டில்லைட் டின்னர் உங்கள் துணையுடனான பிணைப்பை மேம்படுத்தும்.

ரிஷபம்
ரிஷப ராசியில் சுக்கிரன் 6 ஆவது வீட்டில் இடம் பெயர்கிறார். இந்த பெயர்ச்சி ஒரு கலவையான முடிவுகளையே வழங்கும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் உணவுப் பழக்கங்களைக் கவனியுங்கள். இல்லாலிட்டால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் எதிரியுடனான பகைமை ஒரு நல்ல முடிவுக்கு வருவதற்கான தருணம் இது. உங்கள் துணையின் ஆரோக்கியத்தைக் கண்காணியுங்கள். ஏனெனில் அவர்கள் சிறு உடல்நல பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.

மிதுனம்
மிதுன ராசியில் சுக்கிரன் 5 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது உங்களுக்கு சாதகமான முடிவுகளையேத் தரும். உங்கள் குழந்தை மற்றும் வாழ்க்கை துணை உங்கள் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிப்பார்கள். உங்களின் வருமானம் மேம்படும். ஆனால் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். இருந்தாலும், சில முக்கிய செலவுகளை இக்காலத்தில் செய்யலாம். உங்கள் செயல்திறன் அலுவலகத்தில் மேலதிகாரிகளால் சிறப்பாக பேசப்படும்.

கடகம்
கடக ராசியில் சுக்கிரன் 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது மிகவும் சாதகமான முடிவுகளை வழங்கும். நீங்கள் வீட்டில் மட்டுமின்றி, அலுவலகத்திலும் பிரகாசிப்பீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் போதுமான சந்தோஷமான நேரத்தை செலவழிக்க பல சந்தர்ப்பங்கள் இருக்கும். உங்கள் தாயாருக்கு ஒரு நல்ல நேரமாக இருக்கும். அவர் வாழ்வின் வெவ்வேறு அம்சங்களை அனுபவித்து வருவார். அலுவலக வேலை எளிதானதாக இருக்கும் மற்றும் உங்கள் முயற்சிகள் உங்கள் மேலதிகாரிகளுக்கு முன் நல்ல முடிவுகளைத் தருவதாக இருக்கும். எனவே இந்த காலத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசியில் சுக்கிரன் மூன்றாவது வீட்டிற்கு செல்கிறார். இது உங்களுக்கு சாதகமான முடிவுகளை வழங்கும். உங்களின் திறன்கள் மேம்படும். உங்களின் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். சுக்கிரனின் நல்ல நிலை அலுவலகத்தில் உங்களின் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்த உதவும். இது அணிக்குள்ளேயே நட்புறவை அதிகரிக்கவும் உதவும். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி, உங்கள் உடன்பிறப்புகளுடன் தரமான நேரத்தை செலவிடத் தூண்டி, அவர்களுடனான பிணைப்பை அதிகரிக்கும். இந்த காலம் உங்கள் காதல் உறவுகளுக்கு மிகவும் நன்றாக இருக்கும். சொல்லப்போனால் இது உங்கள் துணையுடனான பிணைப்பை பலப்படுத்தும்.

கன்னி
கன்னி ராசியில் சுக்கிரன் 2 ஆவது வீட்டில் செல்கிறார். இது உங்களுக்கு மிகவும் நல்ல முடிவுகளையே வழங்கும். இந்த மாற்றத்தால் நீங்கள் திரட்டிய செல்வம் மற்றும் சேமிப்புகளில் ஆதாயங்களைப் பெறுவீர்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிட நீங்கள் விரும்புவீர்கள். வியாபாரம் செய்பவர்கள், வருமானம் மற்றும் ஆதாயங்களில் முன்னேற்றம் காண்பார்கள். சுக்கிரனின் இந்த மாற்றத்தால் உங்களின் தகவல் தொடர்ப்பு மற்றும் திறன்கள் மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் இது நல்ல லாபத்தையும் வழங்கும். மேலும் இந்த காலத்தில் நீங்கள் அதிகமாக சாப்பிட விரும்புவீர்கள். இதனால் நீங்கள் எடை போடுவீர்கள். ஆகவே உங்களின் உணவுப் பழக்கத்தைக் கவனியுங்கள்.

துலாம்
சுக்கிரன் தனது சொந்த ராசியில் முதல் வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி அதிகப்பட்ச நன்மைகளை வழங்குவதாக இருக்கும். தொழில் துறையில் ஆதாயங்களையும் வருமானத்தையும் வழங்கும் பல வாய்ப்புகளை நீங்கள் காண்பீர்கள். வர்த்தகர்களும் தங்கள் லாபத்தைக் காண்பார்கள். நீண்ட கால முதலீடுகளைச் செய்வதற்கான மிகச் சிறந்த காலம் இதுவாகும். தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புபவர்களுக்கு இது மிகவும் நல்ல காலமாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் உறவுகளில் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் உணர்வார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். மொத்தத்தில், துலாம் ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியில் சுக்கிரன் 12 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். நீங்கள் கொண்டாட்ட மனநிலையில் இருப்பதால், குறிப்பிடத்தக்க செலவுகள் இருக்கும். தொழில் ரீதியாக, நீங்கள் வெளிநாட்டு நிலங்கள் தொடர்பான பல வாய்ப்புகளை சந்திக்கப் போகிறீர்கள். பட்ஜெட்டைத் திட்டமிட்டு அதற்கேற்ப செலவிட முயற்சிக்கவும். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிட தயாராக இருப்பார்கள். தங்கள் துணையை அவர்களுக்கு பிடித்த இடத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவார்கள். இதனால் இருவருக்கும் இருக்கும் பிணைப்பு வலுவாகும். தொலைக்காட்சி மற்றும் மொபைலை நீண்ட நேரம் பார்ப்பதைத் தவிர்த்திடுங்கள். இது உங்கள் கண்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தி, கண்பார்வையை பலவீனமாக்கும்.

தனுசு
தனுசு ராசியில் சுக்கிரன் 11 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது உங்களுக்கு நல்ல முடிவுகளையேத் தரும். இந்த காலத்தில் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு உயர் நிர்வாகத்திடம் இருந்து பாராட்டுக்களைப் பெற வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனுக்கான வெழுமதியையும், அங்கீகாரத்தையும் வழங்குவார்கள். தொழில் செய்பவர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கும். காதல் அடிப்படையில் நீங்கள் விரும்பிய முடிவுகளையும் பெற வாய்ப்புள்ளது. உங்கள் துணை உங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் முழுமையாக புரிந்துகொள்வார், மேலும் அவர்களின் ஆதரவை உங்களுக்கு வழங்க வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்கள் உங்களின் வருங்கால துணையை சந்திக்கும் வாய்ப்புள்ளது.

மகரம்
மகர ராசியில் சுக்கிரன் 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது உங்களுக்கு கலவையான முடிவைத் தரும். அலுவலகத்தில் பல தடைகளை எதிர்கொள்வீர்கள். உங்களுக்கு அலுவலகத்தில் புதிய வேலைகள் ஒதுக்கப்படும். இது உங்கள் மூத்த நிர்வாகத்துடன் சில மோதல்களுக்கும் வாதங்களுக்கும் வழிவகுக்கும். எனவே அமைதியாகவும், பொறுமையாகவும் இருங்கள். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். புதிய வேலையைத் தேடுபவர்கள் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் நன்மை தீமைகளை ஆராய்ந்து பின் முடிவெடுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இடையே சில மோதல்களும் வாதங்களும் ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசியில் சுக்கிரன் 9 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். தொழில் ரீதியாக, இந்த காலம் சாதகமாக இருக்கும். நீங்கள் விரும்பிய பணியிடத்தில் பல வாய்ப்புகளை நீங்கள் காணலாம். வணிகமும் லாபத்தையும் வெற்றிகளையும் தர வாய்ப்புள்ளது. அலுவலக வேலை புரிபவர்கள் மூத்த நிர்வாகத்திடமிருந்து ஆதரவையும், பாராட்டையும் பெற வாய்ப்புள்ளது. தனிப்பட்ட முறையில் தந்தை மற்றும் தந்தை போன்ற நபர்கள் சிறந்த தார்மீக மற்றும் நிதி ஆதரவை பழங்குவார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவும் நன்மை பயக்கும் முடிவுகளைத் தரும். நீங்கள் சில ஆன்மீக இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது, அவை அமைதியையும் மனநிறைவையும் தரக்கூடும்.

மீனம்
மீன ராசியில் சுக்கிரன் 8 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது உங்களுக்கு கலவையான முடிவுகளை வழங்கும். சுக்கிரனின் இந்த நிலை ஆரோக்கிய பிரச்சனைகளால் பயத்தைத் தரக்கூடும். இது உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த கடினமாக இருக்கும். இதனதல் மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ளவர்கள் ஆதாயங்களையும் லாபத்தையும் அடைய தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் மூதாதையர் சொத்து போன்ற திடீர் ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவு புதிய பரிமாணங்களை எட்டக்கூடும்.



Click it and Unblock the Notifications











