சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 வரை இந்த 4 ராசிக்கு பிரச்சனை மேல பிரச்சனை வரும்... கவனமா இருங்க..

சனி பகவான் ஆளும் கும்ப ராசிக்கு சுக்கிரன் சென்றிருப்பதால் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள், யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

நவகிரகங்களில் ஆடம்பரம், அழகு, செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் 2023 ஜனவரி 22 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார். ஏற்கனவே 2023 ஜனவரி 17 ஆம் தேதி முதல் கும்ப ராசியில் சனி பகவான் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரனும் சென்றிருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இந்த கும்ப ராசியில் சுக்கிரன் 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி வரை இருப்பார்.

Venus Transit in Aquarius on January 2023: These Zodiac Signs Will Face More Problems in Tamil

கும்ப ராசிக்கு சுக்கிரன் சென்றிருப்பது சில ராசிக்காரர்களுக்கு நற்பலனையும், சிலருக்கு மோசமான பலனையும் தரலாம். இப்போது சனி பகவான் ஆளும் கும்ப ராசிக்கு சுக்கிரன் சென்றிருப்பதால் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள், யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடகம்

கடகம்

கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் கடக ராசிக்காரர்கள் பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பயணத்தின் போது உங்களின் உடைமைகள் திருட்டு போக வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் கடன் வாங்கியிருந்தால், அதை இக்காலத்தில் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். நிதி நிலை சற்று மோசமாக இருக்கலாம்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சண்டைகள் வரலாம். நீதிமன்ற வழக்குகள் இக்காலத்தில் உங்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கால் வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகள் வரலாம். வரவுக்கு அதிகமாக செலவு செய்வதால், நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் கவனக்குறைவால் போராடக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட வாய்ப்புள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்

மீனம்

மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதன் காரணமாக மீன ராசிக்காரர்கள் தங்களின் நிதியை கவனித்து செலவழிக்காவிட்டால், பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் தவறான பழக்கங்கள் உங்களை பிரச்சனையில் தள்ளலாம். தேவையில்லாத பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எதிரிகளிடம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, January 24, 2023, 18:35 [IST]
Desktop Bottom Promotion