Latest Updates
-
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க..
வாஸ்துப்படி, இதெல்லாம் வீட்டிற்கு லட்சுமி தேவி வரப்போகிறார் என்பதன் அறிகுறியாம்.. தெரிஞ்சுக்கோங்க..
நமது வீட்டில் லட்சுமி தேவி குடியிருக்கிறாரா என்பதை எப்படி அறிவது என்று நீங்கள் கேட்கலாம். வாஸ்துப்படி, ஒருவரது வீட்டில் லட்சுமி தேவி குடியிருக்கப் போகிறார் என்றால், அதற்கு முன் ஒருசில அறிகுறிகள் தென்படும்.
இந்து மதத்தில் செல்வத்தின் அதிபதி என்று அழைக்கப்படுபவர் லட்சுமி தேவி. ஒருவருக்கு லட்சுமி தேவியின் அருள் இருந்தால், அவர் பணக்காரராவார் என்பது நம்பிக்கை. ஒவ்வொருவருமே பணப்பிரச்சனை இல்லாத வாழ்க்கையையே வாழ விரும்புவோம். அதற்காக நாம் அல்லும் பகலும் அயராது உழைப்போம். ஆனால் என்ன தான் உழைத்தாலும், லட்சுமி தேவியின் அருள் இருந்தால் மட்டுமே, அந்த செல்வம் நமது கையில் நிலைத்திருக்கும்.

லட்சுமி தேவியின் அருளைப் பெற நாம் பல்வேறு விஷயங்களை மேற்கொள்வோம். ஒருவரது வீட்டில் லட்சுமி தேவி குடியிருந்தால், அந்த வீட்டில் செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது. சரி, நமது வீட்டில் லட்சுமி தேவி குடியிருக்கிறாரா என்பதை எப்படி அறிவது என்று நீங்கள் கேட்கலாம். வாஸ்துப்படி, ஒருவரது வீட்டில் லட்சுமி தேவி குடியிருக்கப் போகிறார் என்றால், அதற்கு முன் ஒருசில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகள் குறித்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் வீட்டிலும் அந்த அறிகுறிகள் தென்பட்டால், உங்கள் வீட்டை நோக்கி லட்சுமி தேவி வருகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி #1
இத்தனை நாட்களாக இல்லாமல், திடீரென்று உங்கள் வீட்டினுள் கருப்பு நிற எறும்பு சுற்றித் தெரிகிறது என்றால் உங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவி வரப்போகிறார் மற்றும் உங்கள் வீட்டில் நிறைய பணம் சேரப் போகிறது என்று அர்த்தம்.

அறிகுறி #2
உங்கள் வீட்டிற்கு ஒரு பறவை வந்து கூடு கட்டுகிறதா? அப்படியானால் அது மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் உங்கள் வீட்டில் உள்ள மரத்தில் பறவைக்கூடு இருந்து, அந்த மரத்தை நீங்கள் சில காரணங்களால் வெட்டினால், அந்த வீட்டிற்கு அது அபசகுணமாக கருதப்படுகிறது.

அறிகுறி #3
நம்பிக்கைகளின் படி, ஒருவரது வீட்டில் ஒரே இடத்தில் மூன்று பல்லிகள் ஒன்றாக இருந்தால், உங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவி வரப்போகிறார் என்பது புரிந்து கொள்ளுங்கள். மேலும் மூன்று பல்லிகள் ஒன்றாக இருப்பது, வீட்டில் பணம் அதிகம் சேர போவதைக் குறிக்கிறது.

அறிகுறி #4
உங்கள் வீட்டில் உள்ள துளசி செடியைச் சுற்றி பல்லி சுற்றிக் கொண்டிருந்தால், அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் இது வீட்டிற்க வரப்போகும் பணத்தைக் குறிக்கிறது. ஆனால் நிறைய பல்லிகள் துளசி செடியைச் சுற்றிக் கொண்டிருந்தால், அது கெட்டதாக கருதப்படுகிறது.

அறிகுறி #5
நம்பிக்கைகளின் படி, ஒருவரது உள்ளங்கையில், அதுவும் வலது உள்ளங்கையில் தொடர்ச்சியாக அரிப்பு ஏற்படுகிறது என்றால், அது உங்கள் கையில் பணம் அதிகம் சேரப் போகிறது என்று அர்த்தம்.

அறிகுறி #6
ஒருவரது கனவில் துடைப்பம், ஆந்தை, யானை, மங்கூஸ், சங்கு, பல்லி, பாம்பு, நட்சத்திரம், ரோஜா போன்றவை வந்தால், அது அவரது வீட்டிற்கு லட்சுமி தேவி வரப் போகிறார் என்பதன் அறிகுறி.

அறிகுறி #7
காலையில் ஒருவர் தூங்கி எழும் போது சங்கு சப்தம் கேட்டால், அவரது வீட்டிற்கு லட்சுமி தேவி வரப்போகிறார் என்று அர்த்தம். மேலும் அன்றைய தினத்தில் அந்த வீட்டில் பண வருகை அதிகமாக இருக்கும்.

அறிகுறி #8
நீங்கள் தினமும் காலையில் எழுந்ததும், தொடர்ந்து சில நாட்களாக யாரேனும் துடைப்பத்தால் பெருக்குவதைக் கண்டால், நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரப் போகிறது என்று அர்த்தம். மேலும் அவர் விரைவில் பணக்காரராகப் போகிறார் என்பதையும் அது குறிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications