For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா?

நாம் உண்ணும் உணவில் ஐந்து வகையான தோஷங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவை அர்த்த தோஷம், நிமித்த தோஷம், ஸ்தான தோஷம், குண தோஷம், சம்ஸ்கார தோஷம் ஆகும். அதே போல ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள

|

நாம் உண்ணும் உணவில் ஐந்து வகையான தோஷங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவை அர்த்த தோஷம், நிமித்த தோஷம், ஸ்தான தோஷம், குண தோஷம், சம்ஸ்கார தோஷம் ஆகும். அதே போல ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதி வைத்துள்ளனர். அதே போல ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது. அந்த தோஷங்கள் வஞ்சித தோஷம், பந்த தோஷம், கல்பித தோஷம்,வந்தூலக தோஷம்,ப்ரணகால தோஷம் ஆகும்.

Various Dosham In Astrology And Remedies

இந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது நம்முடைய உயிரைத் தாங்குவது. அப்படிப்பட்ட உணவு எப்படி, எங்கே, எந்த முறையில், யாரால் சமைத்து பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. உணவு சமைப்பதிலும், பரிமாறுவதிலும், உண்பதிலும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும்.

மனிதர்களை பாதிக்கும் இந்த தோஷங்களுக்கு பரிகாரங்களையும் முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த தோஷங்கள் எப்படி பாதிக்கும் அதற்கான பரிகாரங்கள் என்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அர்த்த தோஷம்

அர்த்த தோஷம்

நேர்மையற்ற வழியில் சம்பாதிக்கும் பணத்தினால் வாங்கப்படும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை உண்பதால் வருவதே அர்த்த தோஷம். இங்கே அர்த்தம் என்பதற்கு பொருள் என்று சொல்வார்கள். நாம் சமைக்கும் உணவுப் பொருட்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருக்க வேண்டியது அவசியம்.

நிமித்த தோஷம்

நிமித்த தோஷம்

நாம் சாப்பிடும் உணவைச் சமைக்கும் நபர், நல்ல மனதுடன் இருக்க வேண்டியது அவசியம். அவர் நேர்மையானவராகவும், அன்பானவராகவும், நல்ல சுபாவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் சமைக்கப்பட்ட உணவானது, நாய், எறும்பு, பல்லி, காகம் போன்றவற்றால் தீண்டப்படாமல் இருப்பதும் முக்கியம். உணவில் தூசி, தலை முடி, புழுக்கள் போன்றவையும் இருக்கக்கூடாது. மேற்சொன்ன ஏதேனும் ஒரு குற்றம் இருந்தாலும் அந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு நிமித்த தோஷம் ஏற்படும். அசுத்தமான உணவு, மன அசுத்தத்தையே விளைவிக்கும். தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உண்டாக்கும். நல்லவன் சமைத்த உணவால்தான் மனதில் நற்சிந்தனைகள் எழும்.

ஸ்தான தோஷம்

ஸ்தான தோஷம்

எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருக்க வேண்டும். சமைக்கும் போது தேவையற்ற பிரச்சினைகள், அற்ப காரியங்களுக்காக விவாதங்கள் போன்றவை நடந்தால், அதனால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். அதே போல் கழிப்பறை, மருத்துவமனை, யுத்த களம், வழக்கு மன்றம் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. இதுவே ஸ்தான தோஷம் ஆகும். நாம் ஒருவருக்கு படைக்கும் உணவை, உள்ளன்புடன் பரிமாற வேண்டியது மிகவும் அவசியம்.

குண தோஷம்

குண தோஷம்

நாம் சமைக்கும் உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருட்கள், சாத்வீக குணமுடையதாக இருக்க வேண்டும். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு, உப்பு உள்ளிட்டவை ராஜஸிகமானவை. பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை. சாத்வீக உணவு ஆன்மிக முன்னேற்றத்தைத் தருகிறது. ராஜஸிக உணவு உலக மாயையில் சிக்கும் உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது. தாமஸிக உணவு தீய எண்ணங்களை வளர்க்கிறது.

சம்ஸ்கார தோஷம்

சம்ஸ்கார தோஷம்

தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட, உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருக்கக் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை. இதைத்தான் சம்ஸ்கார தோஷம் என்கிறார்கள். இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி, ஒருவன் உணவை உண்ண வேண்டும். அதனால் தான் அன்னை அல்லது மனைவியால் இல்லத்தில் சமைத்து பரிமாறப்படும் உணவை ஏற்பது நல்லது என்று முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

வஞ்சித தோஷம்

வஞ்சித தோஷம்

பார்க்கக் கூடாத படங்கள், தவறான சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி, அவை பித்த நாடிகளைப் பாதிக்கச் செய்கிறது. இது உடலில் பல வியாதிகளை உண்டாக்குகிறது. இதற்கு வஞ்சிததோஷம் எனப்பெயர். இந்த தோஷம் நீங்க உடன் பிறந்த சகோதரிகளை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப் பெண்களுக்குத் தானம் அளிக்க வேண்டும்.

பந்த தோஷம்

பந்த தோஷம்

நம்மை நம்பி பழகியவர்களுக்குத் துரோகம் செய்வது அல்லது பழிவாங்குதல் பந்த தோஷமாகும். இந்த தோஷத்துக்கு தந்தை, தாய் வழிகளில் உள்ள மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா ஆகியோருடைய பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பந்த தோஷம் விலகும்.

கல்பித தோஷம்

கல்பித தோஷம்

பிறர் தன்னை விரும்புவதாக எண்ணிக் கொண்டு முறை தவறிப் பழகுதல் கல்பித தோஷமாகும். இத்தகைய தோஷம் ஏற்பட்டால் தன்னை விட வயதில் மூத்த பெண்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கல்பித தோஷம் உடனடியாக விலகி விடும்.

வந்தூலக தோஷம்

வந்தூலக தோஷம்

ஒருவர் தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவருக்கு சுவாசக் கோளாறுகள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். இவ்வாறு உருவாகும் தோஷத்திற்கு வந்தூலக தோஷம் எனப்படும். வந்தூலக தோஷம் நீங்க வேண்டுமானால் வயதான தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். வேஷ்டி, புடவை, துண்டு, ரவிக்கைத் துணி ஆகியவற்றைத் தானமாக வழங்க வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச் சோலைத் தலத்திற்குச் சென்று முருகனைத் தரிசித்துப் பின் ஏழைத் தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.

ப்ரணகால தோஷம்

ப்ரணகால தோஷம்

திருமணப் பொருத்தங்கள் பார்க்காமல், பணம், புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு ஒருவர், திருமணம் செய்து கொண்டால், அவருக்கு ப்ரணகால தோஷம் ஏற்படும். இதனால் வாழ்க்கையில் பிடித்தம் இல்லாத நிலை காணப்படும். இந்த தோஷத்தை தவிர்க்க வேண்டுமானால் அனாதை விடுதியியில் உள்ள பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் ப்ரணகால தோஷங்கள் நிவர்த்தியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Various Dosham In Astrology And Remedies

Powerful Remedies Dosham Naturally. Artha and nimitha, stana, guna, samskara dosham. here is the remedies for 10 doshams.
Story first published: Thursday, January 23, 2020, 13:42 [IST]
Desktop Bottom Promotion