Latest Updates
-
முக்கியமான 5 ஊட்டச்சத்து குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறிகளும்.. அவற்றை தடுக்கும் உணவுகளும்.. -
சாணக்கியர் கூறும் வெற்றிக்கான 5 அடிப்படை ரகசியங்கள் - இதை பாலோ பண்றவங்க பெரிய ஆளா வருவார்களாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: ஜூன் கடைசி இந்த 4 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. -
செட்டிநாடு கார குழிப்பணியாரமும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்!
வரப்போற காதலர் தினத்துல இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய ஆப்பு காத்திருக்கு... உங்க ராசி என்ன?
நமது காதல் வாழ்வை தீர்மானிப்பதில் நம்முடைய பிறந்த ராசி முக்கியப்பங்கு வகிக்கிறது. அதன்படி இந்த காதலர் தினம் நமக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதை நமது ராசியை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
உலக காதலர்கள் அனைவரும் காத்திருந்த காதலர் தினம் நெருங்கி விட்டது. தான் நேசிப்பவரிடம் காதலை சொல்ல, காதலிப்பவர்கள் தங்கள் உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல, திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்வைக் கொண்டாட என இந்த காதலர் தினத்திற்காக ஒவ்வொருவரும் ஒரு காரணத்திற்காக காத்திருக்கின்றனர்.

நமது காதல் வாழ்வை தீர்மானிப்பதில் நம்முடைய பிறந்த ராசி முக்கியப்பங்கு வகிக்கிறது. அதன்படி இந்த காதலர் தினம் நமக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதை நமது ராசியை வைத்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் இந்த காதலர் தினம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷத்தில் சுக்கிரன் இருப்பதாலும், செவ்வாய் தனுசு ராசியில் இருப்பதாலும் இந்த காதலர் தினம் உங்களுக்கு அற்புதமானதாக இருக்கப்போகிறது. நெருக்கமான ஆர்வம், ஒத்துழைப்பு, உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது, காதல் நிறைந்த பயணம் என இந்த காதலர் தினம் மகிழ்ச்சியானதாக இருக்கும். உடல்ரீதியான நெருக்கத்திற்கும் உங்களுக்கு வாய்ப்புள்ளது.

ரிஷபம்
துரதிர்ஷ்டவசமாக இந்த காதலர் தினம் உங்களுக்கு நீங்கள் விரும்பக்கூடிய நாளாக இருக்கப் போவதில்லை. உங்கள் ராசிப்படி சுக்கிரன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் இருக்கும் நிலைகள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் உறவு சிக்கல்கள் ஏற்படலாம். இந்த நாளை சாதாரண நாளாக கடப்பதுதான் உங்களுக்கு நல்லது, இல்லையெனில் உறவுக்குள் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடரீதியான நெருக்கத்தை முடிந்தவரை தவிர்க்கவும்.

மிதுனம்
உங்கள் ராசிப்படி சுக்கிரன் சாதகமான இடத்தில் இருப்பதால் உங்களுக்கு அனுகூலமான பலன்களை ஏற்படுத்தினாலும் செவ்வாய் இதற்கு எதிர்மறையாக தவறான இடத்தில் இருப்பதால் நீங்கள் உங்கள் துணையால் தவறாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்த நாளில் பெரிய சண்டை ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமுள்ளது. இந்த நாளை மிகவும் எச்சரிக்கையுடன் கடக்க வேண்டும். தேவையற்ற சந்தேகங்கள், பதட்டங்கள் உங்களை பாடாய்ப்படுத்தும்.

கடகம்
உங்கள் கூட்டாளரை புரிந்து கொள்வது எளிதல்ல அல்லது அவருடைய தேவைகளை நீங்கள் நன்கு புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், இன்று ஆபத்து என்னவென்றால் உங்கள் காதல் முறிவடைய வாய்ப்புள்ளது. இந்த காதலர் தினத்தை கடத்துவது கத்தி மேல் நடப்பது போன்றதாக இருக்கும் உங்களுக்கு.

சிம்மம்
இந்த காதலர் தினம் உங்களுக்கு அருமையான நாளாக இருக்கப்போகிறது. இந்த காதலர் தினம் உங்களுக்கு அனைத்து விதமான உணர்வுகளும் நிறைந்த நாளாக இருக்கப்போகிறது. இந்த தினத்தில் நீங்கள் எடுக்கும் முக்கியமுடிவு உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும். உங்கள் காதலை நீங்கள் அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல தாரளமாக முடிவெடுக்கலாம்.

கன்னி
உங்களுக்கு சுக்கிரன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் நிலைகள் அன்பு, உணர்வுகள் குறித்து மகிழ்ச்சியளிப்பதில்லை, அனைத்திற்கும் மேலாக சூரியன் பொருந்தா இடத்தில் இருப்பதால் உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இடையே பெரிய சண்டைகள், அதீத பதட்டம் போன்ற பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது. அமைதியாக இருங்கள், அதிகம் பேசாதீர்கள், நீங்கள் விரும்பும் நபரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்காதீர்கள், உங்களைப் புரிந்து கொள்ளாதவரிடம் இருந்து தவறான புரிதலுக்கு தீர்வு காண முடியாது.

துலாம்
காதலர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாள் உங்களுக்கு அழகான நாளாக இருக்கப்போகிறது. ஆனால் சுக்கிரன் உங்களுக்கு எதிரான திசையில் இருப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இந்த நாள் சுவராஸ்யமான நாளாக இருக்காது. இன்று உங்களுக்கு கலவையான உணர்ச்சிகள் நிறைந்த நாளாக இருக்கும், நாளின் முடிவில் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாகத்தான் இருக்கும். உங்கள் துணையுடன் சமநிலையை பராமரிக்க முயலுங்கள்.

விருச்சிகம்
செவ்வாய் இரண்டாவது நிலையில் இருப்பதால் இந்த காதலர் தினத்தன்று நீங்கள் உங்கள் காதல் துணைக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். இது அவர்களை அதிக மகிழ்ச்சியாக உணர வைக்கும். சுக்கிரனின் நிலை சாதகமாக இல்லை என்றாலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை. உங்கள் தோற்றத்தை கவர்ச்சிகரமானதாக மாற்ற முயலுங்கள். இரவு உணவின் போது கூட்டாளியின் கோரிக்கைகளை குறைத்து மதிப்பிடாதீர்கள். பாலியல் உறவை அதிகம் எதிர்பார்க்காதீர்கள்.

தனுசு
செவ்வாயும், சுக்கிரனும் சாதகமான இடத்தில் இருப்பதால் இந்த காதலர் தினம் உங்களுக்கு அற்புதமான நாளாக இருக்கும். இந்த நாளில் உங்கள் துணை உங்களிடம் மயங்குவார்கள், உணர்ச்சிகள் நிறைந்த நாளாக இது இருக்கும். அனைத்திற்கும் மேலாக உங்களுக்கு இடையேயான புரிதல் அதிகரிக்கும். நீங்களாக எதையும் தொடங்காதீர்கள் பொறுமையாக இருங்கள், நீங்கள் நினைப்பது தானாக நடக்கும்.

மகரம்
இந்த நாள் உங்களுக்கு சிக்கலான நாளாக இருக்கப்போகிறது. நாளின் முற்பகுதி சண்டைகளும், விவாதங்களும் நிறைந்திருந்தாலும் மாலை நேரத்தில் இனிமையான நேரம் தொடங்கும். வெளிப்படையாக பேசுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் உங்களின் சொற்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்புள்ளது. எனவே வாயைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

கும்பம்
இந்த காதலர் தினம் உங்களுக்கு கொண்டாட்டம் நிறைந்த நாளாக இருக்கப்போகிறது. உங்கள் துணையுடன் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நெருங்குவீர்கள். வித்தியாசமான இடங்களுக்கு செல்வது சுவாரஸ்யத்தை அதிகரிக்கும். உங்கள் இருவரின் புரிதல் அதிகரிக்கும். உங்கள் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க இது சிறந்த நாளாகும்.

மீனம்
துரதிர்ஷ்டவசமாக உங்களுக்கு இந்த காதலர் தினம் சிறப்பான நாளாக இருக்காது. அதிக பதட்டத்துடன் காணப்படுவீர்கள், உங்கள் துணையின் தேவையை முடிந்தவரை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். நீங்கள் மிகவும் விலையுயர்ந்த பரிசை வழங்கவோ அல்லது அதிகப்படியான உற்சாகமான மற்றும் விலையுயர்ந்த இரவு உணவை ஒழுங்கமைக்கவோ தேவையில்லை. வீட்டிலேயே அமர்ந்து உங்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்வது நல்லது.



Click it and Unblock the Notifications