Latest Updates
-
தம்பதிகள் இணைந்து புகையிலையை கைவிடுவது எப்படி? உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக இன்று ஒரு உறுதிமொழி எடுங்கள்! -
குருபகவான்-கேது இணைவதால் ஜூன் மாதம் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
குருபெயர்ச்சியால் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
'கோழி தண்டனை' கொடுக்கும் அளவுக்கு வன்முறையா? உங்கள் துணையின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்! -
பொரிச்ச முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி முட்டையை வறுத்து பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அலெக்ஸாண்டரின் தளபதியை தோற்கடித்த முதல் சக்திவாய்ந்த இந்திய அரசர் யார் தெரியுமா? -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால்… பணமும் அதிர்ஷ்டமும் தானாக தேடி வரும், தெரியுமா? -
கொங்குநாடு கோழி வறுவல் ரெசிபி - சிக்கனை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
சனி-சுக்கிரன் உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சுயஇன்பம் முதல் உடலுறவு வரை தலைசுற்ற வைக்கும் பண்டைய எகிப்தியர்களின் வினோத பாலியல் செயல்பாடுகள்!ஷாக் ஆகாதீங்க!
எகிப்தின் வரலாறு வளமானதும் பன்முகத்தன்மை கொண்டதுமாகும். பண்டைய எகிப்தியர்கள் ஒரு நாகரிகத்தை உருவாக்கினர், அது உலகம் முழுவதையும் 7000 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் வியக்க வைக்கிறது.
எகிப்தின் வரலாறு வளமானதும் பன்முகத்தன்மை கொண்டதுமாகும். பண்டைய எகிப்தியர்கள் ஒரு நாகரிகத்தை உருவாக்கினர், அது உலகம் முழுவதையும் 7000 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் வியக்க வைக்கிறது. பண்டைய எகிப்தியர்களின் நாகரிகம் என்பது பிரமிடுகள் பற்றியது மட்டுமில்லை. அவர்கள் மருத்துவம் மற்றும் பல அறிவியல் துறைகளில் முன்னேறி இருந்தனர்.

எகிப்தியர்களின் சில மரபுகள் இன்றைய காலக்கட்டத்தில் கொஞ்சமும் பயன்படுத்த முடியாதவையாக இருந்தன. பண்டைய எகிப்தில் செக்ஸ், மதம் மற்றும் புராணங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அவர்கள் பாலுணர்வை மனிதர்களின் இயல்பான உணர்வுகளில் ஒன்றாக கருதினர் மற்றும் அதில் வெட்கப்படுவதற்கு எதுவுமில்லை என்று கருதினர். அவர்களின் உடலுறவு வழக்கங்கள் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அவற்றில் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

கன்னித்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை
பண்டைய எகிப்தில் பெண்களின் கன்னித்தன்மை முக்கியமானதாக கருதப்படவில்லை. கன்னித்தன்மை என்ற வார்த்தையே பண்டைய எகிப்தில் பயன்பாட்டில் இல்லை. ஆண், பெண் இருவரும் திருமணம் ஆகாதவராக இருக்கும் பட்சத்தில் திருமணத்துக்கு முந்தைய உடலுறவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகு தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருக்க வேண்டும். அதேசமயம் விபச்சாரம் மன்னிக்க முடியாத குற்றமாக இருந்தது. அதற்கு மரண தண்டனை கூட வழங்கப்பட்டது.

சுயஇன்பம் கடவுளின் செயலாக கருதப்பட்டது
எகிப்திய புராணங்களின் படி முதல் எகிப்திய கடவுளான ஆடன் சுயஇன்பத்தின் மூலம் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதாகக் கருதப்படுகிறது. எனவே சுயஇன்பம் பண்டைய எகிப்தில் புனிதமானதாக கருதப்பட்டது. கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக பாரோக்கள் மக்களின் முன்பு நைல் நதியில் சுயஇன்பம் செய்தனர். பாரோவைத் தொடர்ந்து மற்ற ஆண்களும் நைல் நதியில் சுயஇன்பம் செய்வார்கள்.

திருமணங்கள் மிகவும் வெளிப்படையானதாக இருந்தது
பண்டைய எகிப்தில் திருமண சடங்கென்று எதுவுமில்லை. பெண்கள் தங்கள் பெற்றோரிடம் கூறிவிட்டு தாங்கள் விரும்பும் ஆணின் வீட்டிற்கு சென்று வாழத் தொடங்கி விடுவார்கள். அவர்கள் ஒரே வீட்டில் வாழத்தொடங்கியவுடன் அவர்கள் கணவன்-மனைவியாக அங்கீகரிக்கப்படுவார்கள். பெண்கள் 12 அல்லது 13 வயதிலும், பெண்கள் 16 முதல் 20 வயதிலும் திருமண வாழ்வைத் தொடங்குவார்கள். பண்டைய எகிப்தியர்கள் பல குழந்தைகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

பரிசோதனை திருமணம் செய்தார்கள்
பண்டைய எகிப்தில் பெண்களின் கருவுறுதலை சோதிக்க வினோதமான வழியைக் கொண்டிருந்தனர். பெண்களின் பெண்ணுறுப்பில் பூண்டு வைக்கப்படும், அவர்களுக்கு கருவுறும் திறன் இருந்தால் அவர்களின் மூச்சில் பூண்டு வாசனை வெளிப்படும். இதனால் எகிப்திய ஆண்கள் கருவுறும் திறன் இல்லாத பெண்ணை மணப்பதைத் தவிர்க்க பரிசோதனை திருமணத்தை செய்தனர். இந்த பரிசோதனை காலம் ஒரு வருடம் வரை தொடர்ந்தது. பெண் கருவுறுதல் வரை இந்த பரிசோதனை தொடரும், அதன்பின் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள்.

விவாகரத்து எளிதானதாக இருந்தது
ஆண், பெண் இருவருக்கும் விவாகரத்து செய்ய உரிமை இருந்தது. கருவுறாமை, நம்பிக்கை துரோகம், துஷ்பிரயோகம் போன்றவை விவகாரத்திற்கு பொதுவான காரணங்களாக இருந்தது. விவாகரத்து செயல்முறை மிகவும் வெளிப்படையானதாக இருந்தது. தம்பதிகளில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறிவுடன் சொத்து இருவருக்கும் சமமானதாக பிரிக்கப்பட்டது. எகிப்திய பெண்களுக்கு சுயஅதிகாரம் இருந்தது, எனவே அவர்கள் விவாகரத்து செய்தவுடன் உடனடியாக திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 30 வயதிற்கு மேல் விவாகரத்து செய்யும் பெண்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏனெனில் 20 வயதிற்கு பின் பெண்களின் கருத்தரிக்கும் திறன் குறையும் என்ற நம்பிக்கையால் எகிப்து ஆண்கள் அவர்கள் திருமணம் செய்ய முன்வரவில்லை.

குழந்தை பாலின சோதனை
பழங்கால எகிப்தியர்கள் கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை முன்னரேக் கண்டறிந்தனர். கர்ப்பிணி பெண்கள் கோதுமை மற்றும் பார்லி விதைகளில் சிறுநீர் கழிப்பார்கள். பார்லி முதலில் வளர்ந்தால் குழந்தை ஆண் குழந்தையாகவும், கோதுமை வளர்ந்தால், பெண் குழந்தையாகவும் இருந்தது. இந்த சோதனை மிகவும் துல்லியமானது என்று நம்பப்பட்டது.

கருத்தடை செயல்முறை
பண்டைய எகிப்தில் பெண்கள் கர்ப்பத்தைத் தடுக்க நிறைய முறைகளை அறிந்திருந்தனர். அவர்கள் முதலைகள் மற்றும் சில சமயங்களில் யானைகளின் மலத்தை பயன்படுத்தி, தேன் மற்றும் மூலிகைகள் கலந்து பிறப்புறுப்புகளை மறைக்கிறார்கள். இந்த முறை அவர்களுடன் திறம்பட செயல்பட்டதாக நம்பப்படுகிறது.

மம்மிஃபிகேஷன்
முதன்முதலில் மம்மிஃபிகேஷன் யோசனை பண்டைய எகிப்தில் தோன்றியது. அவர்கள் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை நம்பினர், மேலும் ஆன்மாக்கள் தங்கள் உடலைத் தேடும் என்று அவர்கள் நம்பினர், எனவே ஆன்மாக்கள் அவற்றைத் திரும்பப் பெறுவதற்கு உடல்களை அடையாளம் காணும்படி செய்ய வேண்டும் என்று அவர்கள் ஒவ்வொரு மம்மியிலும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கினர். உடலைப் பதப்படுத்துவது என்பது 70 நாட்கள் வரை நீடித்த ஒரு நீண்ட செயல்முறையாகும்.



Click it and Unblock the Notifications