Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
கும்பத்தில் உருவாகும் திரிகிரக யோகத்தால் பிப்ரவரி 18 முதல் இந்த 3 ராசிக்கு நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
திரிகிரக யோகம் கும்பத்தில் உருவாகவுள்ளது. இந்த திரிகிரக யோகத்தால் சில ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரப் போகிறது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கவுள்ளது.
ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். அப்படி மாற்றங்கள் ஏற்படும் போது சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கையால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அந்த வகையில் பிப்ரவரி 18 ஆம் தேதி கும்ப ராசியில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. திரிகிரக யோகமானது ஒரு ராசியில் மூன்று கிரகங்கள் ஒன்றாக பயணிக்கும் போது உருவாகும்.

ஏற்கனவே கும்ப ராசியில் சனி பயணித்து வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி 18 ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசிக்கு செல்கிறார். அத்துடன் சந்திரனும் கும்ப ராசியில் பயணிப்பார். இதனால் திரிகிரக யோகம் கும்பத்தில் உருவாகவுள்ளது. இந்த திரிகிரக யோகத்தால் சில ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரப் போகிறது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கவுள்ளது. இப்போது திரிகிரக யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் நல்ல லாபத்தைக் காணப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இது வருமானம் மற்றும் லாபம் தரும் வீடாக கருதப்படுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் வருமானத்தில் உயர்வைக் காண்பார்கள். புதிய வழிகளில் இருந்து பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். இக்காலத்தில் உங்களின் ஆசைகள் நிறைவேறும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தை தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கொடுக்கப்படும். இக்காலத்தில் உங்கள் தந்தையுடனான உறவு மேம்படும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்க முயற்சித்தால், நல்ல வெற்றி கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இது செல்வம் மற்றும் பேச்சின் வீடாக கருதப்படுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். இந்த யோக காலத்தில் உங்களின் செல்வம் அதிகரிக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சிக்கிய பணம் இக்காலத்தில் கிடைக்கும். உங்கள் பேச்சால் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பீர்கள். உங்கள் பெயரும், புகழும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
