Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்!
கும்பத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
கும்ப ராசியில் திரிகிரக யோகம் உருவாக போகிறது. இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் நிதி நிலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்தைக் காணப் போகிறார்கள்.
Trigraha Yoga In Aquarius On February 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் கும்ப ராசியில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. திரிகிரக யோகம் என்பது மூன்று கிரகங்களின் சேர்க்கையால் உருவாவதாகும்.

ஏற்கனவே கும்ப ராசியில் சனி பகவான் பயணித்து வருகிறார். அதைத் தொடர்ந்து பிப்ரவரியில் சூரியனும், புதனும் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்கள். இதனால் கும்ப ராசியில் திரிகிரக யோகம் உருவாக போகிறது. இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் நிதி நிலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்தைக் காணப் போகிறார்கள். இப்போது 2023 பிப்ரவரியில் கும்ப ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் அநத 3 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்தைக் குறிக்கும் வீடாகும். இதனால் இந்த காலத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். மேலும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். வேலை செய்பவர்கள் தொழில் தொடர்பான பயணங்களை செய்ய வாய்ப்புள்ளது. மேலும் மாணவர்களுக்கு இக்காலம் சிறந்ததாக இருக்கும். தேர்வுகளில் நல்ல வெற்றி பெறுவார்கள்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இது நோய் மற்றும் எதிரிகளின் வீடாகும். இதனால் இக்காலத்தில் நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும். மேலும் இக்கால கட்டத்தில் உங்கள் எதிரிகளை நீங்கள் வெல்வீர்கள். வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் அமையும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பணிபுரிபவர்கள் தங்கள் துறையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். இதனால் இக்காலத்தில் வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பல வழிகளில் இருந்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
