Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...

இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூலை 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 31 July 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூலை 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று அலுவலகத்தில் உங்கள் தவறான நடத்தைக்காக நீங்கள் விமர்சிக்கப்படலாம். ஆனால் அது உங்கள் வேலையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளைத் தவிர்ப்பது நல்லது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சில பெரிய மாற்றங்களைக் காணலாம். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு நரம்பு சம்பந்தமான சில பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:45 மணி முதல் இரவு 9:30 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும். நீங்கள் மிகவும் நேர்மறையாக உணர்வீர்கள். நீங்கள் எந்த பெரிய கவலைகளிலிருந்தும் விடுபடலாம். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உங்கள் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் எந்த ஒரு வேலையும் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்தால், இன்று அது நிறைவேற வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். உங்களின் இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக அமையும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். திடீர் பண வரவு இருக்கக்கூடும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:25

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

மிதுனம்

மிதுனம்

வியாபாரிகளுக்கு இன்றைய நாள் நல்ல பலன் தரும். முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் உங்களுக்கு திறக்கும். முக்கிய வணிக முடிவுகளை எடுப்பதற்கு இன்று ஏற்ற நாள். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய முடிவுகளைப் பெறலாம். ஒரு பெரிய திட்டத்தில் பணியாற்ற உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். எனவே, உங்களால் சிறந்ததை வழங்க முயற்சிப்பது நல்லது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதாரணமாக இருக்கும். குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். பணம் சம்பந்தமான எந்த முக்கியமான வேலையையும் செய்து முடிக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், நீங்கள் நீண்ட நேரம் வெறும் வயிற்றுடன் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை

கடகம்

கடகம்

காதல் விஷயத்தில் இன்று உங்களுக்கு ஒரு சர்ச்சைக்குரிய நாளாக இருக்கும். சிறிய விஷயங்களைப் பெரிதுபடுத்துவதைத் தவிர்க்கவும். இது உங்கள் உறவில் மனகசப்பை அதிகரிக்கலாம். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். முடிந்தால், உங்கள் பரபரப்பான வழக்கத்திலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, உங்கள் துணையுடன் செலவழித்து, அவர்களின் மனதை அறிய முயற்சி செய்யுங்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், நீங்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். வேலையில் இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் எந்த வேலையையும் இன்று முடிக்காமல் விடாதீர்கள். இன்று வணிகர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உடல்நிலை பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:05 மணி முதல் இரவு 8:55 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்று வணிகர்களுக்கு மிகவும் சவாலான நாளாக இருக்கும். இன்று நிதி இழப்புக்கான அறிகுறிகள் தென்படலாம். இன்று நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் முதலாளியின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும். இன்று உங்கள் நம்பிக்கையும் குறையலாம். இன்று உங்களுக்கு நிதி ரீதியாக நல்ல நாளாக இருக்கும். கடன் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். சிறு விஷயங்களுக்கு உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உடல்நலம் குறித்த கவனக்குறைவு விலை உயர்ந்ததாக இருக்கும். இன்று திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:05 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

கன்னி

கன்னி

அலுவலகத்தில் உங்கள் வேலையை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. திடீரென்று உங்கள் மீதான வேலை அழுத்தம் அதிகரிக்கலாம். இருப்பினும், எதிர்காலத்தில் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. எனவே உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். தொழிலதிபர்களின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் சரியான வியாபார முடிவுகளுக்கு நல்ல பலன்களைப் பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் பெற்றோர் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் குழந்தைகள் தொடர்பான முக்கிய முடிவுகளையும் எடுக்கலாம். உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்தால், இன்று நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

துலாம்

துலாம்

இன்று அரசு ஊழியர்களுக்கு பொறுப்புகளின் சுமை அதிகமாக இருக்கக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், சிறிய வேலையைக் கூட கவனமாகச் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இன்று நீங்கள் ஒரு சிறிய தவறு செய்தாலும் கூட, பெரிய இழப்பு ஏற்படலாம். கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும். தடைபட்ட எந்த ஒரு வேலையும் இன்றே முடிவடையும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உங்கள் அன்புக்குரியவரின் தவறான நடத்தை இன்று உங்களை வருத்தமடைய செய்யலாம். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். உங்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உணவில் காட்டும் கவனக்குறைவால், ஆரோக்கியம் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்றைய தினம் வீட்டுச் செலவுகள் அதிகரிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வரவு செலவை முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் சேமிப்பில் கவனம் செலுத்தினால், விரைவில் உங்கள் நிதிப் பிரச்சனைகள் அனைத்தையும் சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் முதலாளியின் ஆதரவைப் பெறுவீர்கள். அதே போல் இன்று உங்கள் துறையில் தொடர்புடைய ஒரு புகழ்பெற்ற நபரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொழிலதிபர்களின் பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆன்லைன் வணிகம் செய்பவர்கள் இன்று பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலுவாக இருக்க யோகா மற்றும் தியானத்தை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை

தனுசு

தனுசு

அரசு வேலைக்கு தயாராகும் நபர்களுக்கு இன்று நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்க போகிறது. இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் வருமானமும் அதிகரிக்கக்கூடும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடன்பிறந்தோரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்கள் பெற்றோருடன் சிறு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இன்று வீட்டில் உங்கள் திருமணத்தைப் பற்றி பேச தொடங்கலாம். நீங்கள் விரும்பிய வாழ்க்கைத் துணையை விரைவில் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:15

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

மகரம்

மகரம்

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் ஒரு குழுவை வழிநடத்தும் வாய்ப்பு வழங்கப்படலாம். இன்று உங்கள் முதலாளியின் கண்கள் உங்கள் மீது இருக்கும். இன்று எந்த தவறும் செய்யாமல் இருப்பது நல்லது. வணிகர்கள் தங்கள் பங்குகளை அதிகரிக்க திட்டமிட்டால், அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இரும்பு வியாபாரிகளுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்காது. சிறந்ததொரு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கக்கூடும். இருப்பினும் நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. உங்களின் இழப்பு உரிய நேரத்தில் ஈடுசெய்யப்படும். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று நீங்கள் கனமான பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை

கும்பம்

கும்பம்

உங்கள் தொழிலை மேலும் முன்னேற்ற முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டால், உங்கள் பாதையில் சில தடைகள் இருக்கலாம். நெருங்கியவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலையைச் சந்திக்க நேரிடும். உங்கள் செயல்திறனில் மேலதிகாரிகள் மகிழ்ச்சியடையாமல் இருப்பார்கள். மேலும் உங்கள் வேலையில் உள்ள பல குறைபாடுகளையும் அவர்கள் சுட்டிக்காட்டலாம். உங்கள் தவறுகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். கவனக்குறைவாக தொடர்ந்து தவறுகளை செய்தால், சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் விஷயங்கள் சாதாரணமாக இருக்கும். பெரியோர்களின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். இன்று உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை

மீனம்

மீனம்

வியாபாரிகளுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். திடீரென்று உங்கள் விற்பனை அதிகரிக்கலாம். உங்கள் வேலையை முன்னோக்கி கொண்டு செல்ல நினைத்தால், இன்று அதற்கு சரியான நாள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரணமாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் தந்தையுடனான உறவு இன்னும் வலுவாக இருக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம் வரலாம். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். நிதிக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். நீங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவழிக்கும் தவறைச் செய்யாதீர்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து வேலை செய்வதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, July 31, 2022, 5:00 [IST]
Desktop Bottom Promotion