Today Rasi Palan 31 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...

இன்றைய நாள் துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 31ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 31 January 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 31ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு பணத்தின் அடிப்படையில் மிகவும் விலை உயர்ந்த நாளாக இருக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம். உத்தியோகஸ்தர்கள், தங்கள் ​​எதிரிகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலர் உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கலாம். வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வானிலை மாற்றத்தால் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:55 மணி முதல் மதியம் 12 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று வேலையில் மிகவும் பரபரப்பாக இருக்கும். திடீர் வேலைப்பளு அதிகரிக்கலாம். தொழிலதிபர்கள் இன்று நிறைய அலைய வேண்டியிருக்கும். உங்களின் சில முக்கியமான வேலைகளில் தடை ஏற்படலாம். நாளின் இரண்டாம் பகுதியில் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். பொருளாதார நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களுக்கு பணத்தை வீணாக்காதீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல்நல விஷயத்தில் சிறிதும் அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:10 மணி முதல் இரவு 8:50 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இன்றைய நாளின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து சிறப்பு பரிசைப் பெறலாம். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை மேலும் தொடர நினைத்தால், அதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் வணிகத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:15 மணி முதல் இரவு 9:05 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையின் கவனக்குறைவான அணுகுமுறை உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும். இன்று உங்களுக்குள் பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை சம்பந்தமாக நீங்கள் நிறைய மன அழுத்தத்தை உணரலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்தினால், விரைவில் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்று நீங்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால், உங்கள் உடைமைகளின் பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். இல்லையெனில், அவை திருடப்படவோ அல்லது தொலைந்து போகவோ வாய்ப்புள்ளது. வேலையில் இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் புதிதாக கூட்டு தொழில் தொடங்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் திட்டத்தை தொடரலாம். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பண விஷயத்தில் கலவையான பலன்களை தரும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, சில நாட்களாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அதை பேசி தீர்க்க முயற்சிக்கவும். அமைதியாக இருப்பது உங்களிடையே தவறான புரிதலை அதிகரிக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரி உங்களைப் பாராட்டலாம். இருப்பினும், எதிர்மறை உணர்வுகளிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். இன்றைய நாள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வேலை அல்லது வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் காணலாம். தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேர்மறையான மாற்றங்களைக் காணலாம். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளின் வணிகம் அதிகரிக்கும். நிதி நிலை வலுப்பெறும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால் விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:45 மணி முதல் மாலை 3 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, கூட்டு வியாபாரம் செய்பவர்கள், வீண் விவாதத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுவீர்கள். இல்லையெனில், நீங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரியின் கோபத்தைச் சந்திக்க வேண்டி வரும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும், அதிக செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுக்கு காதல், கல்யாணத்தில் முடியும். உங்களுக்கு கல்லீரல் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், உணவில் அலட்சியம் வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு பொருளாதார முன்னணியில் சரிவு சாத்தியமாகும். திடீர் நிதி இழப்பு ஏற்படலாம். பணம் சம்பந்தமான எந்த வேலையையும் அவசரத்தில் செய்யாதீர்கள். அலுவலகத்தில் உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளின் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதீர்கள். வியாபாரிகளுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். அன்புக்குரியவருக்கு உங்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவை. இன்று உங்கள் உடல்நலம் சீராகும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:10 மணி முதல் மதியம் 2 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்று தொழிலதிபர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக தடைப்பட்ட ஒரு வேலை இன்று முடிவடையும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். ஒரு பெரிய திட்டத்தில் பணியாற்ற உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வசதி வாய்ப்புகள் கூடும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்ல வாய்ப்பு கிடைக்கும். ஒருபோதும் ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் மிகவும் சவாலான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தரக்ள் இன்று பாதகமான சூழ்நிலையைச் சந்திக்க நேரிடும். இன்று உங்களிடம் கொடுக்கப்பட்ட எந்தப் பொறுப்பும் திரும்பப் பெறப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நம்பிக்கை குறையக்கூடும். பொருளாதார ரீதியாக, இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். இருந்தாலும் பெரிய பிரச்சனை இருக்காது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியமாக இருக்க, தேவையற்ற கவலைகளை விட்டு விலகி இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, இன்று உங்கள் வாழ்க்கைத்துணையின் மனநிலை சரியாக இருக்காது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் போது வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்தவும். இல்லையெனில், ஒரு சிறிய விஷயத்தில் உங்களுக்குள் பெரிய சண்டை ஏற்படலாம். உங்கள் நிதிப் பக்கத்தை வலுப்படுத்த, செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், நிதி முடிவுகளையும் கவனமாக எடுக்க வேண்டும். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி பெறலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, January 31, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion