Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் கோபத்தால் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்...

இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். அக்டோபர் 30 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…

Today Rasi Palan -30 October 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். அக்டோபர் 30 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று உங்களுக்கு வேலையில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் மீது பொறுப்புகளின் சுமை அதிகமாக இருக்கும். அரசு ஊழியர்கள் கடினமான பணியை குறுகிய காலத்தில் முடிக்க வேண்டியிருக்கும். நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், இந்த சவாலை எளிதாக சமாளிக்க முடியும். வணிகர்கள் ஒரே நேரத்தில் பல பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பெற்றோர் உங்களை நினைத்து பெருமைப்படுவார்கள். அதே சமயம் வாழ்க்கைத்துணையுடனான உறவில் இணக்கம் ஏற்படும். கல்வித் துறையில் உங்கள் குழந்தை பெரும் சாதனை படைக்க முடியும். நீங்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்கள் சோர்வை நீக்க போதுமான ஓய்வு பெற வேண்டும். அதிகப்படியான கவனக்குறைவால் உங்கள் உடல் நலம் கெடும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ஐடி துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் விரும்பும் திட்டத்தில் பணிபுரிய உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். வணிகர்களின் பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். பணப்பற்றாக்குறையால் தடைப்பட்ட உங்களின் முக்கியமான சில வேலைகள் இன்று முடிவடையும். இது தவிர, உங்கள் வணிகத் திட்டங்களில் மாற்றங்களைச் செய்ய நீங்கள் முடிவு செய்யலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரு முக்கியமான விவாதம் ஏற்படலாம். குடும்பம் தொடர்பான சில பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு ஒரு சாதாரண நாளாக இருக்கும். தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு எலும்புகள் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: காலை 5:30 மணி முதல் 10 மணி வரை

மிதுனம்

மிதுனம்

திருமணமாகாதவர்களுக்கு இன்று நல்ல வரன் தேடி வரலாம். விரைவில் ஒரு புதிய நபர் உங்கள் வாழ்க்கையில் நுழையலாம். நீங்கள் ஏற்கனவே திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் அன்பு மற்றும் ஆதரவால், துன்பத்திலும் தைரியத்தைப் பெறுவீர்கள். நிதி விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் கூடுதல் பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், எதிர்காலத்தில் நீங்கள் வருந்த வேண்டியிருக்கும் எந்த ஒரு வேலையையும் அவசரப்பட்டு செய்யாதீர்கள். வேலையில் இன்று ஒரு சாதாரண நாளாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை

கடகம்

கடகம்

வேலையில் இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். குறிப்பாக உத்தியோகஸ்தர்கள் விரும்பிய பலனைப் பெறலாம். அலுவலகத்தில் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் நேர்மறையைக் கண்டு அனைவரும் பாராட்டுவார்கள். முதலாளி இன்று உங்கள் வேலையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். அழகுசாதன வியாபாரிகளுக்கு இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும். இன்று நீங்கள் மிகப்பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். குடும்பத்தில் சில மனக்கசப்புகள் வரலாம். வீட்டில் திடீரென தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டில் அமைதியை காக்க, இன்று சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். உங்கள் ஒவ்வொரு முடிவையும் நன்கு யோசித்து எடுத்தால் நல்லது. நிதி நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், வெளி உணவைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

சிம்மம்

சிம்மம்

நீங்கள் ஒரு தனியார் வேலை செய்து உங்கள் வேலை தற்காலிகமானது என்றால், இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். இன்று உங்கள் வேலை நிரந்தரமாகலாம். நீண்ட நாட்களாக உங்களின் கடின உழைப்பு வெற்றி பெறும். வணிகர்கள் இன்று பணம் விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று அவசர அவசரமாக நிதி பரிவர்த்தனை செய்ய வேண்டாம். இல்லையெனில், பெரும் நஷ்டம் ஏற்படும். வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். அன்புக்குரியவர்கள் உங்களை நன்றாக புரிந்துகொள்வார்கள். நிதிக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. உங்கள் நிதி நிலை குறையலாம். இவை அனைத்தும் உங்கள் தவறான நிதி முடிவுகளின் விளைவு. ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், நீங்கள் எந்த நாள்பட்ட நோயிலிருந்தும் விடுபடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 9:15 மணி வரை

கன்னி

கன்னி

இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். நீங்கள் மிகவும் சமநிலையுடன் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். மற்றவர்களின் வார்த்தைகளை கேட்டு பிறரைப் பற்றிய கருத்தை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்படுகிறீர்கள். வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் மேலதிகாரி இன்று உங்கள் வேலையில் சற்று அதிருப்தியுடன் இருப்பார். எனவே, நீங்கள் ஏமாற்றமடைய தேவையில்லை. உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு மீண்டும் வர முயற்சி செய்யுங்கள். வியாபாரிகள் தடைப்பட்ட லாபத்தைப் பெறலாம். இன்று நீங்கள் உங்கள் வேலையில் முழு மனதுடன் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் மாறுப்பட்ட நடத்தை உங்களைத் தொந்தரவு செய்யலாம். இன்று உங்கள் வாழ்க்கைத் துணை மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளலாம். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், சில உடல் வலிகள் இன்று சாத்தியமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

துலாம்

துலாம்

இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். அலுவலகத்தில் சூழ்நிலைகள் இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக உத்தியோகஸ்தர்கள் பாராட்டையும் மரியாதையையும் பெறுவார்கள். இன்று வணிகர்கள் எடுக்கும் எந்த முடிவும் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். ஏனென்றால், தவறான பேச்சு உங்கள் இருவருக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தும். குடும்பம் தொடர்பான சில விஷயங்கள் இன்று உங்களை தொந்தரவு செய்யலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்திறகு ஏற்ப செலவு செய்யவும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதால், மனதளவில் புத்துணர்ச்சி அடைவீர்கள். இன்று நீங்கள் ஒரு குறுகிய பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: 23

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

குழந்தைகளிடமிருந்து இன்று சில நல்ல செய்திகள் கிடைக்கும். இது வீட்டில் உற்சாகமான சூழ்நிலையை உருவாக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணை உங்களது அன்றாடப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார். இதன் காரணமாக நீங்கள் இருவரும் சிறிது நேரம் ஒன்றாகச் செலவிடும் வாய்ப்பைப் பெறுவீர்கள். இன்று அலுவலகத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் தாமதத்தால் உயர் அதிகாரிகள் அதிருப்தி அடைவார்கள். நேரத்தைக் கவனத்தில் கொண்டு செய்லபட்டால் நன்றாக இருக்கும். மேலும், இன்று சோம்பேறியாக இருக்காதீர்கள். உங்கள் கவனக்குறைவு உங்களுக்கு நிறைய செலவை ஏற்படுத்தும். எனவே, உங்கள் கோபத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். நிதி நிலைமையில் திடீரென்று பெரிய லாபத்தைப் பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 6:30 மணி வரை

தனுசு

தனுசு

இன்று உடல்நலம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். முடிந்தவரை வெளி உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இன்று உங்கள் மீது அதிக வேலைச் சுமையை ஏற்றிக் கொள்ளாதீர்கள். அலுவலகத்தில் உங்கள் செயல்திறன் நன்றாக இருக்கும். மேலும் உங்கள் வேலையில் திருப்தி அடைவீர்கள். நீங்கள் இடமாற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், விரும்பிய இடத்திற்கு மாற்றப்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. மறுபுறம், இன்று வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்காது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உங்கள் தந்தையுடனான உறவு சில காலமாக சரியாக இல்லை என்றால், இன்று உங்கள் முயற்சிகள் பலனளிக்கும். உங்கள் தந்தையின் அதிருப்தி முழுவதும் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 3:15 மணி வரை

மகரம்

மகரம்

திருமண வாழ்க்கையில் அன்பும் அமைதியும் இருக்கும். இன்று பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகமாக இருக்கும். ஆனால் உங்கள் வாழ்க்கைத் துணை இன்று உங்களுக்கு எல்லா வகையிலும் உதவ தயாராக இருப்பார். இது உங்கள் சுமையை குறைப்பது மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் அன்பையும் மரியாதையையும் அதிகரிக்கும். குழந்தை தரப்பில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் ஒருவரின் உடல்நிலை குறித்து நீங்கள் கவலைப்பட்டிருந்தால், இன்று கவலையிலிருந்து விடுபடலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பயணத்திற்கு ஏற்ற நாள் இன்று. உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரணமான நாளாக இருக்கும். இன்று மேற்கொள்ளும் பயணம் மிகவும் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று நீங்கள் மன அமைதியைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:45 மணி முதல் இரவு 7:05 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவசரத்தில், நீங்கள் சில பெரிய அலட்சியங்களைச் செய்யலாம். இது உங்களுக்கு சில பெரிய இழப்பை ஏற்படுத்தும். இன்று கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இதனால் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை அதிகம் விமர்சிப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறலாம். குடும்ப உறுப்பினர்களுடன் சிறிது நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். அன்புக்குரியவர்களிடையே நீங்கள் மிகவும் நன்றாக வாழ்வது சாத்தியமாகும். வாழ்க்கைத் துணையுடன் உறவில் இணக்கம் ஏற்படும். குடும்பப் பொறுப்புகளை ஒன்றாகச் செய்து முடிப்பீர்கள். வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், நீங்கள் இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால், உங்களைப் பற்றிய சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:15 மணி முதல் மாலை 6:20 மணி வரை

மீனம்

மீனம்

இன்று திடீரென்று சில நல்ல செய்திகள் உங்களை தேடி வரும். அது உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும். பொருளாதார முன்னணியில் இன்று மிகவும் நன்றாக இருக்கும். இன்று உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்கள் செலவுகளும் அதிகமாக இருக்காது. இன்று வாழ்க்கைத் துணை உங்களுக்காக வித்தியாசமான மற்றும் அற்புதமான ஒன்றைச் செய்யலாம். இன்று நீங்கள் அதிகப்படியான மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் அன்புக்குரியவரின் அன்பையும் ஆதரவையும் பெறுவதன் மூலம் நீங்கள் நிறைய நிம்மதியைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். இன்று உங்கள் வீட்டில் ஒரு சுப நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இது உங்கள் வேலையை இன்னும் எளிதாக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, October 30, 2021, 5:00 [IST]
Desktop Bottom Promotion