Today Rasi Palan 22 December 2022: இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்ப வேண்டாம்...

இன்றைய நாள் ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 21ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 22 December 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 22ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்றைய நாள் உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சி அளிக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் திட்டமிட்டபடி வேலைகள் அனைத்தும் நிறைவேறும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். வியாபாரிகளின் பொருளாதார நிலையில் ஏற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் புதிதாக கூட்டு வியாபாரம் தொடங்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் திட்டம் முன்னோக்கி நகரும். நீங்கள் விரைவில் வெற்றி பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு காயம் ஏற்படலாம். எந்த ஒரு வேலையையும் அவசரத்திலும், பீதியிலும் செய்வதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:45 மணி முதல் மதியம் 12:35 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உங்கள் துணையின் கடுமை தன்மை இன்று உங்களுக்குள் பிரச்சனைகளை உருவாக்கலாம். உங்கள் வீட்டுச் சூழல் மிகவும் மன அழுத்தமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். தந்தையின் உடல்நிலை குறித்த கவலை சற்று அதிகரிக்கும். அலுவலக வேலையில் நாட்டம் குறையும். தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சனைகள் உங்கள் தொழில் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது நல்லது. இல்லையெனில், உங்கள் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கலாம். வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கியிருந்தால், விளம்பரத்தில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இன்று காதலைப் பொறுத்தவரை மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் துணையிடம் நீங்கள் வாக்குறுதி அளித்திருந்தால், இன்று அதை நிறைவேற்ற முடியும். திருமணமானவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பாக, இன்று எந்தவொரு நிதி பரிவர்த்தனையையும் தவிர்க்கவும். இன்று அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். உங்கள் வேலை தங்கம் மற்றும் வெள்ளியுடன் தொடர்புடையதாக இருந்தால், உங்கள் வணிகம் வளரும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளன.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் மதியம் 2 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, கடினமாக உழைத்தும் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கவில்லை என்றால், உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், சரியான திசையில் முயற்சிக்கவும். அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பல பணிகளைக் கையாள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இன்று பணம் தொடர்பான கவலைகளில் இருந்து விடுபடலாம். வாழ்க்கைத்துணையின் அன்பான நடத்தை உங்களை சிறப்புற உணர வைக்கும். உங்கள் துணையின் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். நாளின் இரண்டாம் பகுதியில் நீங்கள் ஒரு சிறிய பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களின் இந்த பயணம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:55 மணி முதல் மதியம் 2 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். உங்கள் வணிகத்தை முன்னோக்கி கொண்டு செல்ல திட்டமிட்டால், விரைவில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சில முக்கிய தகவல்களைப் பெறலாம். மாற்றத்திற்கான நேரம் இது. நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், அதிக செலவு செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையைப் புறக்கணிக்கும் தவறைச் செய்யாதீர்கள். இன்று உங்கள் ஆரோக்கியம் குறையலாம். இதெல்லாம் உங்கள் கவனக்குறைவின் விளைவு.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். சொத்து சம்பந்தமான பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் பழைய குடும்பக் கடனில் இருந்து விடுபடுவீர்கள். பணி தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி இன்று எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உங்களின் வெளிநாடு சென்று வேலை செய்ய வேண்டும் என்ற கனவு விரைவில் நனவாகும். வீட்டின் சூழ்நிலை சாதகமாக இருக்கும். பெரியவர்களுடன் முக்கியமான விவாதம் நடத்தலாம். பெரியவர்களிடமிருந்து சில நல்ல ஆலோசனைகளையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று ஓய்வில் கவனம் செலுத்த உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6:30 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று அலுவலகச் சூழல் மிகவும் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு சில முக்கிய பொறுப்புகளை வழங்கலாம். இருப்பினும், நீங்கள் தவறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு நல்ல பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று, உங்களின் எந்தவொரு முக்கியமான தடைபட்ட வேலையும் முடிக்கப்படலாம். வீட்டில் பதற்றமான சூழல் நிலவும். குடும்பத்தில் உள்ள ஒருவருடன் உங்களுக்கு விரிசல் ஏற்படலாம். கோபத்துடனும் அவசரத்துடனும் எந்த வேலையையும் செய்யாதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:55 மணி முதல் மதியம் 2 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்று கடவுள் வழிபாட்டில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். இன்று மனதளவில் மிகவும் நன்றாக உணருவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி உங்கள் செயல்பாட்டில் திருப்தி அடைவார். இன்று நீங்கள் அதன் சரியான பலனைப் பெறலாம். வியாபாரிகளின் பொருளாதார பிரச்சனை தீரும். பணத்தால் உங்களின் வேலை ஏதாவது தடைபட்டால், இன்று அது முடிவடையும் வாய்ப்பு அதிகம். வாழ்க்கைத் துணையுடன் உறவில் இணக்கம் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மாறிவரும் பருவ நிலையால் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:05 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, ஆரோக்கியமாக இருக்க, உங்கள் உணவுப் பழக்கத்தில் மாற்றங்களை கொண்டு வருவது நல்லது. அலுவலகத்தில் தாமதமாக செல்வது உங்கள் பிரச்சினைகளை அதிகரிக்கும். இன்று உங்களின் சில முக்கியமான வேலைகள் முழுமையடையாமல் போகலாம். நீங்கள் தொடர்ந்து இப்படி அலட்சியமாக இருந்தால், உங்கள் முன்னேற்றக் கனவு முழுமையடையாமல் போகலாம். வணிகர்கள் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6:30 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்று நீங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடலாம். நீண்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு நன்றாக இருப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி உங்கள் வேலையை மதிப்பாய்வு செய்யலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தவறுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்களிடம் ஏதேனும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தால், அதை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். வியாபாரிகள் புதிய நபர்களுடன் இணைவதற்கு முன்பு கவனமாக சிந்திக்க வேண்டும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் இன்று சிறுசிறு பிரச்சனைகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:45 மணி முதல் இரவு 8:30 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று மாணவர்கள் தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. படிப்பை முடித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வர்த்தகர்கள் ஆபத்தான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் லாபத்திற்கு பதிலாக நஷ்டம் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை மரியாதையுடன் நடத்துவது நல்லது. வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். வேலையுடன் குடும்பத்தாருக்கும நேரம் ஒதுக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று நீங்கள் மிகவும் கனமாகவும் சோர்வாகவும் உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:55 மணி முதல் இரவு 8:05 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, வியாபாரம் சம்பந்தமாக தடைபட்ட விஷயம் இன்று தீர்க்கப்படும். இன்று உங்களின் பெரும் கவலை நீங்கும். நாளின் இரண்டாம் பகுதியில் உங்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும். நீங்கள் வேலையை மாற்றத் திட்டமிட்டிருந்தால், உங்கள் பழைய தொடர்புகளின் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், உங்கள் செலவுகளை முறையாக கணக்கிட அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் இன்று உங்கள் வீட்டில் சூழ்நிலை கெட்டுவிடும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு கண்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:15 மணி முதல் இரவு 9:50 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, December 22, 2022, 5:00 [IST]
Desktop Bottom Promotion