Today Rasi Palan 16 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது...

இன்றைய நாள் ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 16ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 16 February 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 16ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். இன்று பொறுப்புகளின் சுமை அதிகமாகும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கடன் பரிவர்த்தனைகளையும் தவிர்க்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் நல்லிணக்கம் இருக்கும். இன்று உங்கள் அன்புக்குரியவர்கள் நல்ல மனநிலையில் இருப்பார்கள். அவர்களிடமிருந்து உங்களுக்கு பிடித்த பரிசையும் பெற வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அலுவலகத்தில் அவசரம் மற்றும் பதற்றத்துடன் எந்த வேலையையும் செய்யாதீர்கள். ஒரு சிறிய தவறும் உங்களை சிக்கலில் தள்ளும். இன்று சில பழைய விஷயங்கள் வணிகர்களைத் தொந்தரவு செய்யலாம். நிதி ரீதியாக இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று நீங்கள் நிறைய செல்வம் பெறலாம். வீட்டின் சூழ்நிலையில் முன்னேற்றம் காணப்படும். அன்புக்குரியவர்களுடன் நல்ல உறவைப் பேண முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியத்தை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2:20 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, சில நாட்களாக உங்கள் உடல்நிலை பலவீனமாக இருந்தால், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இருப்பினும், ஓய்வில் அதிக கவனம் செலுத்த பரிந்துரைக்கப்படுகிறது. அலட்சியம் இன்று பெரும் விளைவை ஏற்படுத்தும். நிதி விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். நீங்கள் ஒரு பெரிய பண பரிவர்த்தனை செய்யப் போகிறீர்கள் என்றால், மிகவும் கவனமாக இருங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறிய விஷயத்திற்கு வாக்குவாதம் ஏற்படலாம். இன்று உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று வேலையில் கலவையான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: காலை 5:45 மணி முதல் மதியம் 12:35 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரி உங்கள் செயல்திறனில் திருப்தி அடைவார். இன்று அவர்களிடமிருந்து சில நல்ல ஆலோசனைகளையும் பெறலாம். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, சில நாட்களாக நீங்கள் நினைத்து கவலைப்பட்டு கொண்டிருந்த கவலை இன்று நீங்கும். மனதளவில் நன்றாக உணர்வீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்கவும். இன்று உங்கள் முழு கவனமும் உங்கள் வேலையில் இருக்க வேண்டும். உங்கள் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். பொருளாதார நிலை சாதாரணமாக இருக்கும். உங்களைப் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க, தினமும் உடற்பயிற்சியுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. உங்கள் தரப்பை மிகவும் நிதானமாக முன்வைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். தடைப்பட்ட லாபத்தால் வியாபாரிகள் மிகவும் ஏமாற்றம் அடைவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உடற்சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 9:25 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். தனிப்பட்ட அல்லது தொழில் சார்ந்த விஷயங்களில் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். புதிய வருமானத்தையும் பெறலாம். அலுவலகத்தில் உங்கள் பணி மிகவும் பாராட்டப்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உங்கள் வேலையிலும் ஆர்வம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் காலை 11:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். பணம் தொடர்பான கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் புறம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் ஒரு சிறிய விஷயம் பெரிதாக வெடிக்கும். வேலையில் உங்களுக்கு மோசமான விளைவு ஏற்படும். வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். உங்கள் தவறான நடத்தை உங்கள் துணையின் உணர்வுகளைப் புண்படுத்தும். இன்று உங்கள் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 2:55 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய பாதை திறக்கும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை முன்னெடுத்துச் செல்ல நல்ல வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடைய வியாபாரம் செய்தால், இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று நீங்கள் நல்ல மனநிலையில் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, தொழிலதிபர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். அரசு ஊழியர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். தனியார் நிறுவன ஊழியர்களும் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறலாம். சிறு தொழிலதிபர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். இன்று வாடிக்கையாளர்களின் நடமாட்டம் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக, இன்று விலை உயர்ந்த நாளாக இருக்கும். தேவைக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். வீட்டின் இளைய உறுப்பினர்களுடன் உங்கள் உறவை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல்நலம் சம்பந்தமாக சிறுசிறு பிரச்சனைகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: காலை 5:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, உங்கள் வீட்டின் சூழல் மிகவும் பதற்றமாக இருக்கும். பணம் சம்பந்தமாக தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் திடீர் பணிச்சுமை அதிகரிப்பதால் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வரும். இன்று நீங்கள் மிகவும் கனமாக இருக்கவும். வியாபாரிகளின் பொருளாதார பிரச்சனை தீரும். நாளின் இரண்டாம் பகுதியில் நீங்கள் நிதி நன்மைகளைப் பெறலாம். இன்று உங்களுக்கு நிதி ரீதியாக கலவையான நாளாக இருக்கும். உங்கள் உடல்நிலை பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 27

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, புதிதாக கூட்டு வியாபாரம் தொடங்க போகிறீர்கள் என்றால், உங்கள் பாதையில் பெரிய தடை ஏற்படலாம். இருப்பினும், இந்த பிரச்சனை தற்காலிகமானது என்பதால் நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். நீங்கள் முன்னேற விரும்பினால் சிறந்ததைக் கொடுக்க முயற்சிக்கவும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, February 16, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion