Today Rasi Palan 14 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணி சுமை அதிகரிக்கலாம்...

இன்றைய நாள் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 14ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 14 February 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 14ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று அலுவலகத்தில் எந்த வேலையையும் அவசரத்திலும் பீதியிலும் செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் நீங்கள் ஒரு பெரிய தவறு செய்யலாம். இதனால், உங்கள் முன்னேற்றக் கனவு தடைபடலாம். இன்று வியாபாரிகளுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஆபத்தான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். காதல் விஷயங்களில் இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று உங்களுக்கு முதுகு தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, நீங்கள் பழைய சொத்தை விற்க திட்டமிட்டிருந்தால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அலட்சியம் விலை உயர்ந்ததாக இருக்கலாம். இன்று உங்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். இன்று உங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்தவும். வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். உங்கள் நல்ல செயல்திறனின் அடிப்படையில், இன்று நீங்கள் பெரிய வெற்றியை அடைய முடியும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று சராசரியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். இன்று அன்புக்குரியவர்களுடன் மிகவும் நல்ல நாளாக இருக்கும். பண விஷயத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். அதிகமாகச் செலவு செய்வது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். மேலதிகாரி உங்களுக்கு அலுவலகத்தில் சில முக்கியமான வேலைகளை ஒப்படைத்திருந்தால், சிறு தவறைக்கூட தவிர்க்கவும். தொழிலதிபர்கள் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். நீங்களும் உங்களை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, வேலை தொடர்பான அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறலாம். இன்று நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் செயலால் முதலாளி மிகவும் மகிழ்ச்சியடைவார். இன்று உங்களுக்கு சில பெரிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையுடன் சொந்தமாக சிறு வணிகத்தைத் தொடங்க விரும்பினால், விரைவில் உங்கள் திட்டத்தைத் தொடரலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருந்தாலும் யோசிக்காமல் செலவு செய்வதை தவிர்க்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 45

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். இல்லையெனில் நீங்கள் ஏமாற்றப்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, இன்று நீங்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தவும். தொழிலதிபர்கள் இன்று ஒரு பெரிய ஒப்பந்தம் செய்யப் போகிறீர்கள் என்றால், சில காரணங்களால் உங்கள் ஒப்பந்தம் பாதியில் சிக்கக்கூடும். இருப்பினும், நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் பிரச்சனை விரைவில் தீரும். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று திடீரென்று பண வரவு கிடைக்கும். உடல்நிலை குறையட வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:25 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, மாணவர்கள் சமீபத்தில் எழுதிய தேர்வு எழுவில் மிகப்பெரிய வெற்றியை அடையலாம். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று நிதி ரீதியாக மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பல பணிகளைக் கையாள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இது உங்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இன்று வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக, தங்கம் மற்றும் வெள்ளி தொடர்பான வேலையை செய்தால் இன்று நன்மை பயக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். பண விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தோற்றத்தில் ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். இல்லையெனில், எதிர்காலத்தில் நீங்கள் பெரும் சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம். அலுவலகத்தில், உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. நேர்மறையாக இருந்து, கடினமாக உழைக்கவும். விரைவில் முன்னேறலாம். உங்கள் வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். பெரியவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, நீண்ட நாள் நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்து, இன்று பெரிய நிம்மதி கிடைக்கும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வாய்ப்பு அதிகம். அலுவலகத்தில், சக ஊழியர்களை அதிகமாக நம்புவதைத் தவிர்க்கவும். உங்களைப் பற்றிய ரகசியங்களை பிறரிடம் பேசுவதைத் தவிர்க்கவும். வணிகர்கள் இன்று பெரிய நிதி ஆதாயத்தைப் பெறலாம். உங்கள் தொழிலை முன்னெடுத்துச் செல்ல நல்ல வாய்ப்பும் கிடைக்கும். உங்கள் வீட்டின் அமைதியை பராமரிக்க பொறுமையை கடைபிடிக்கவும். உங்களுக்கு கல்லீரல் தொடர்பான நோய் ஏதேனும் இருந்தால், கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 44

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். இதனால் அதிக மன அழுத்தத்தை உணருவீர்கள். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு பெரிய பலனை பெறலாம். நிதி ரீதியாக இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம். இது தவிர, நீங்கள் பழைய கடனையும் திருப்பிச் செலுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படும். உங்கள் துணையின் தவறான நடத்தை உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும். இன்று நீங்கள் உணர்ச்சிவசப்பட மாடுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் நிதி முயற்சி வெற்றியடையும். பணத்தை சரியாக பயன்படுத்தினால், உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் நீங்கிவிடும். தொழிலதிபர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். இன்று நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். நீங்கள் சொத்து சம்பந்தமான வேலை செய்தால், திடீரென்று ஒரு பெரிய பிரச்சனை ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தேவையற்ற விஷயங்களைப் பற்றி விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 10:00 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் சுப நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். அலுவலகத்தின் சூழல் நன்றாக இருக்கும். அனைத்து வேலைகளையும் விரைவாக செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் லாபம் பெற கடுமையாக போராட வேண்டியிருக்கும். இருப்பினும், உங்கள் கடின உழைப்பு வீண் போகாது. உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் நல்லிணக்கம் இருக்கும். இன்று உங்கள் அன்புக்குரியவரிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, பெரியவர்களின் வார்த்தைகளை ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீர்கள். பணத்தைப் பொறுத்தவரை, இன்று நல்ல நாளாக இருக்கும். இன்று பணம் தொடர்பான எந்த பெரிய வேலையையும் தவிர்க்கவும். வேலையில், இன்று சாதாரண நாளாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கவும். நாளின் இரண்டாம் பகுதியில், திடீரென்று நீங்கள் சில பழைய நண்பர்களைச் சந்திக்கலாம். இன்று நெருங்கிய நண்பரிடமிருந்து சில முக்கிய ஆலோசனைகளையும் பெறுவீர்கள். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, February 14, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion