Today Rasi Palan 11 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பழைய கடனை திருப்பி செலுத்திட முடியும்...

இன்றைய நாள் மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 11ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 11 February 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 11ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் கடினமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் கோபத்தைச் சந்திக்க வேண்டி வரலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தன்னம்பிக்கை குறையக்கூடும். இருப்பினும், நீங்கள் நேர்மறையாக செயல்பட்டு, கடினமாக உழைக்க வேண்டும். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கும். பெற்றோரின் ஆசியைப் பெறுவீர்கள். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:25 மணி முதல் மாலை 5:30 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். இல்லையெனில், நீங்கள் ஏமாற்றப்படலாம். பொருளாதார ரீதியாக இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். இன்று பெரிய செலவு செய்யும் மனநிலையில் இருந்தால், அதைத் தவிர்ப்பது நல்லது. தொழிலதிபர்கள் புதிய வேலையைத் தொடங்கினால், உங்கள் பாதையில் பெரிய தடை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பணிகள் ஒதுக்கப்படலாம். எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, பொருளாதார அடிப்படையில் இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். பண பரிவர்த்தை செய்ய இன்றைய நாள் நல்ல நாளாகும். அலுவலகத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். இன்று சக ஊழியர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். மேலும், உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி முடிவடையும். வணிகர்கள் புதிய முதலீடு செய்வதற்கான வாய்ப்பைப் பெறலாம். எதிர்காலத்தில் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:05 மணி முதல் இரவு 9:05 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்று உங்கள் குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். உங்கள் வேலை தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். இன்று நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். வணிகர்களின் தொழில் புதிய திசையில் நகரும். உங்கள் தொழிலில் வளர்ச்சி காணலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும் ஆடம்பரமாக செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் வீட்டின் பெரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் உடல்நலம் தொடர்பான கவலைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:50 மணி முதல் மதியம் 12:20 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, காதல் விஷயங்களில் இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானம் மற்றும் செலவுகளுக்கு இடையில் சமநிலையை பராமரித்தால், உங்கள் நிதி பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் நீங்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வேலையில் பரபரப்பாக இருப்பதால், இன்று அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போகலாம். உங்கள் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: காலை 5:55 மணி முதல் மாலை 3:00 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, நீங்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சனையை எதிர்கொண்டால், அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தை புறக்கணித்தால், சிரமங்கள் அதிகரிக்கும். பணத்தைப் பொறுத்தவரை, இன்று மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கலாம். இன்று வேலையில் மிக முக்கியமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். இன்று உங்கள் வேலைகள் அனைத்தும் எளிதாக முடிவடையும். தொழிலதிபர்களும் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்:1

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 8:45 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று நிதி ரீதியாக மிகவும் நல்ல நாள். பழைய கடனை அடைப்பதால், அது உங்கள் அழுத்தத்தைச் சற்று குறைக்கும். ​​அலுவலகத்தில் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறது. உயர் அதிகாரிகளின் நடத்தை உங்களிடம் சரியாக இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக வேலை செய்ய வேண்டும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். குழந்தைகளுடன் இனிமையாக நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:15 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்று வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். தொடர்ந்து கடினமாக உழைத்தால் விரைவில் வெற்றியின் உச்சத்தை அடையலாம். உத்தியோகஸ்தர்கள் இன்று பாதகமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். உங்களின் கவனக்குறைவால் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை பலவீனமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் அன்பானவருக்கு சரியான கவனிப்பு தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 9:00 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு புதிய வருமானம் கிடைக்கும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக முழுமையடையாத வேலையை விரைவில் முடிக்க முயற்சிக்கவும். வியாபாரிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். குறிப்பாக ஆடை வியாபாரிகள் ஒரு பெரிய ஆர்டரைப் பெறுவார்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவைப் பேண முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:45 மணி முதல் இரவு 8:15 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் எல்லா வேலைகளையும் கடின உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் செய்து முடிக்கவும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள், இன்று தங்கள் கடின உழைப்பிற்கான வெற்றியைப் பெறலாம். பொருளாதார ரீதியாக, இன்று மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். இருப்பினும், சேமிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 33

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:15 மணி முதல் இரவு 8:45 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, அலுவலகத்தில் மற்றவர்களின் வேலையில் அதிகம் தலையிடாமல் இருப்பது நல்லது. இன்று வணிகர்களுக்கு மிகவும் சவாலான நாளாக இருக்கும். தொடங்கிய எந்தவொரு வேலையும் திடீரென மோசமடைவதால், நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையின் இயல்பில் கடுமை தன்மை இருக்கும். உங்களுக்குள் வாக்குவாதம் ஏற்படலாம். எனவே, நிம்மதியாக வேலை செய்வது நல்லது. நிதி ரீதியாக, இன்று கலவையான நாளாக இருக்கும். இன்று திடீரென்று உங்கள் உடல்நிலை மோசமடையலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 5:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, இன்று உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் உங்களுக்காக நிறைய பணம் செலவு செய்யலாம். வேலையைப் பற்றி பேசும்போது, ​​அலுவலகத்தில் மேலதிகாரியுடன் ஒரு முக்கியமான விவாதம் செய்யலாம். அத்தகைய சூழ்நிலையில், இன்று நீங்கள் அவர்களிடமிருந்து சில நல்ல ஆலோசனைகளைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் இன்று அதிகம் அலைய வேண்டியிருக்கும். நாளின் இரண்டாம் பகுதியில் நீங்கள் நிதி நன்மைகளைப் பெறலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, February 11, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion